காரைக்கால் அம்மையார்
இறைவனுக்கே அன்னையாக விளங்கும் காரைக்கால் அம்மையார்.
சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அவர் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர் அல்லர். அவருக்கு தாயாகிற பேறு ஒரு பெண்மணிக்குக் கிடைத்தது. அவர் காரைக்கால் அம்மையார் ஆண்டவனை வணங்கி வழிபாடு செய்ய அழகான பெண் உருவம் இடையூறாக இருக்கும் என்று பேய் வடிவம் வேண்டிப் பெற்றவர். அவர் எம்பெருமான் வீற்றிருக்கும் கைலாய மலையை அடைந்த போது அதைத் காலால் மிதிக்க அஞ்சினார். எனவே தலைகீழாக நின்று ஏறத் தொடங்கினார். அப்போது உமையம்மை சிவபெருமானிடம் தலைகீழாக நடந்து வரும் அந்த அம்மை யார் என்று கேட்டார். அம்மையாரின் தன்னலமற்ற அன்பு பெருக்கிலே திளைத்த பரமசிவன் வருபவள் நம்மைபேணும் அம்மை காண் என்று மொழிந்து மகிழ்ந்தார். ஆகவே காரைக்கால் அம்மை ஆண்டவனுக்கே அம்மையாக ஆனார்.
மனித வாழ்க்கை குறைபாடு உடையது தான்முழு நிறைவான இறைவனை அடையும் அருள்பெறவும் நம்மால் முடியுமா? முடியும். உள்ளம் உருகிக் கண்ணீர் மல்கி வணங்கி வழிபட்டால் இறைவன் நமக்கு எல்லாம் தருவான். அவனை மறவாதிருந்தால் போது. நினைத்து நினைத்து நிறைந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து உற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து போற்றித் துதித்தால் போதும் அதனால்தான் காரைக்கால் அம்மையார் சிவபெருமானைப் பார்த்து இறவாத இன்ப அன்பு வேண்டும் பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டானால் உன்னை என்றும் எப்பொழுதும் மறவாமை வேண்டும். மேலும் நீ திரு நடனம் புரியும் போது உன் அருகிலேயே நான் மகிழ்ந்து பாடிக் கொண்டு இருக்க வேண்டும் என்றார். ஆண்டவன் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார் காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் அருகிலேயே இடம் கிடைத்தது.
காரைக்கால் அம்மையார்..!
இவர் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயருடனேயே இணைத்து "காரைக்கால் அம்மையார்" என்று அழைக்கப்படுகிறார்.
காரைக்காலம் அமையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே.
இவர் இயற்றிய நூல்கள்.
அற்புதத் திருவந்தாதி (101 பாடல்கள்)
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்).
திரு இரட்டை மணிமாலை (20 பாடல்கள்) ஆகும்.
காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார்.
Source:Swarnagiri Vasan