Announcement

Collapse
No announcement yet.

THIRUMALA

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • THIRUMALA

    Seven Teertham inTirumalai. Akasa Gangai, Papa Vinasam, Kumara Tharai, Thumburu Theertham, Koneri Theertham, Swami Theertham.


    Click image for larger version

Name:	Thirumala.jpg
Views:	1
Size:	89.6 KB
ID:	35224

    அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகர் கலியுக பிரதட்ச தெய்வம் வெங்கடாஜலபதியை, சேஷாசலம் மலையில் குடிகொண்டுள்ள வெங்கட்டாத்திரி என அழைக்கிறோம்.

    நடுவில் உள்ள மலையாக நரசிம்மாகாத்திரியும், கடைசி மலையாக ஸ்ரீசைலமும், முதல் மலையாக சேஷபிரதமும் உள்ளது. மேற்கண்ட மலைகளில் கோடான கோடி ஜீவராசிகள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் புனித தீர்த்தங்களும் அடங்கி உள்ளது.

    திருமலையில் சுமார் 66 கோடி புனித தீர்த்தம் இருப்பதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. தர்மரதிபிரத தீர்த்தம், ஞானபிரத தீர்த்தம், பக்தி வைராக்கியபிரத தீர்த்தம், முக்திபிரத தீர்த்தம் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. தர்மரதிபிரத தீர்த்தத்தில் சுமார் 1008 தீர்த்தங்களும், ஞானபிரத தீர்த்தத்தில் சுமார் 108 தீர்த்தங்களும், பக்தி வைராக்கியபிரத தீர்த்தத்தில் சுமார் 68 தீர்த்தங்களும், முக்திபிரத தீர்த்தத்தில் சுமார் 66 தீர்த்தங்களும் உள்ளது. அவை அனைத்தும் புனித தீர்த்தங்களாகும்.

    திருமலையில் மிக முக்கியமான 7 தீர்த்தங்கள் உள்ளது. அவை: கோவில் புஷ்கரணி, குமாரதாரா தீர்த்தம், தும்மூரு தீர்த்தம், ராமகிருஷ்ணா தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம், பாபவிநாசன தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் (கோகர்ப்பம்) ஆகும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணி மிக சிறப்பு வாய்ந்த புனித தீர்த்தமாகும். அதில், தனுர்மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பாண்டவ தீர்த்தத்தில் சுத்த துவாதசியில் சிறப்பு பூஜைகளும், பாபவிநாசன தீர்த்தத்தில் ராம சப்தமியையொட்டி சிறப்பு பூஜைகளும், ஆகாச கங்கையில் சித்திரை நட்சத்திரம் பவுர்ணமி தினத்தில் சிறப்பு பூஜைகளும், குமாரதாரா தீர்த்தத்தில் மகா பவுர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகளும், ராமகிருஷ்ணா தீர்த்தத்தில் பவுர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. எனவே பக்தர்கள் திருமலைக்கு சென்று தீர்த்தங்களில் புனித நீராடி வழிபட்டு சாமி தரிசனம் செய்யலாம்.


    By: Rajesh Khanna
Working...
X