சேக்கிழார் பெருமான்
தேவகோட்டையில் நகரத்தார் சமுதாயம் சேக்கிழார் பெருமானுக்காக ஒரு கோயிலே கட்டியிருக்கிறார்கள். காரைக்குடியில் தமிழ்த்தாய் ஆலயமும், கம்பன் விழாவும் நடத்தித் தமிழுக்கு வளம் சேர்த்தவர், "கம்பன் அடிப்பொடி' சா.கணேசன் என்றால், தேவகோட்டையில் சேக்கிழார் விழா எடுத்து சைவத் தொண்டு புரிகிறார்கள் அங்குள்ள நகரத்தார் சமுதாயத்தினர்.
63 நாயன்மார்கள். அந்தத் திருத்தொண்டர்களில் ஒரு சிலர் தவிர, ஏனையோர் அனைவரும் சாதிய ரீதியாக உயர்குடியைச் சாராதவர்கள். இவர்களைப் பற்றிப் புராணம் எழுதிப் பெருமைப்படுத்தியவர் சேக்கிழார் பெருமான் என்றால், அந்த 63 நாயன்மார்களையும் ஆலயத்தில் உற்சவ மூர்த்திகளாக, இடம்பெறச் செய்து, அவர்களை எல்லா சாதியினரும் வணங்கும்படி வைத்த சமுதாய சீர்திருத்தத்தைத் செய்த பெருமை சைவத்தையே சாரும்.
சமுதாய சீர்திருத்தம் பற்றி வாய்கிழியப் பேசியவர்களால், சாதிப் பெயர்களையும், சாதிய அடைமொழிகளையும் அகற்ற முடிந்ததே தவிர, சாதியத்தை வேரறுக்க முடியவில்லை. ஆனால், சைவமோ சாதியத்தைப் பின்னுக்குத்தள்ளி, இறைத் தொண்டர்கள் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை நிலைநாட்டிக் காண்பித்துவிட்டது.
சேக்கிழார் விழாவை ஏற்பாடு செய்த சபா.அருணாசலத்திற்கு ஒரு வருத்தம். கம்பருக்கும், ராம காவியத்திற்கும் தரப்படும் முக்கியத்துவம் சேக்கிழார் பெருமானுக்கும் அவரது திருத்தொண்டர் புராணத்திற்கும் தரப்படுவதில்லையே என்பதுதான் அது. கம்பன் உற்சவமூர்த்தி; வலம் வருகிறான். சேக்கிழார் பெருமான் மூல விக்கிரகம் (மூலவர்). தேடிச் செல்பவர்களுக்குத் தமிழமுது தருகிறார்.
Source: Nagarathar