Announcement

Collapse
No announcement yet.

பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!

    கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது…
    ==============================
    கீதையின் காலத்தில் சாஸ்திரப் பிரமாணம் என்பது சரி; ஆனால் இப்போது சாஸ்திரப் பிரகாரம் தேடினால் பலதும் பகுத்தறிவுக்கு ஒட்டமாட்டேன் என்கிறது. சாஸ்திரம் என்பது வழக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நியதி என்று கொண்டாலும், அதில் காலமாற்றத்தால் ஏற்பட்ட கசடுகளும் சேர்ந்திருக்குமே! அதனால் பழமையான வேதங்களையே கர்மத்திற்கு பிரதானமாகக் கொள்ளவேணும் என்கிறார்கள். அக்காலத்தில் கர்மா இருந்தது;

    ஆனால் இன்றைக்கு பெருகிவிட்டிருக்கிற பஜனை சம்ப்ரதாயம் இல்லை; “பஜனை செய்தே உய்யலாம்’ என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால், கர்மாவின் மீதான பிடிப்பு தளர்ந்து விடுகிறதே! தேவை கர்மாவா? பக்தியா? பகவான் யாரிடம் முதலில் தன் பார்வையைப் பதிப்பான்?


    * வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக அநுஷ்டிப்பவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை, உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கர்ம அநுஷ்டானம் செய்வோரைப் பார்த்து, “”இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம்? கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன்?” என்று தாழ்வாக எண்ணுகிறார்கள். கர்ம மார்க்கக்காரர்களோ இவர்களைப் பார்த்து, “செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை; ஆடம்பரமாக மணி அடித்துக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா?’ என்று நினைக்கிறார்கள்.


    ஆசாரியாள் ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால், கர்மத்தையே ஈசுவர பூஜையாகச் செய்யவேண்டும் என்று தெரிகிறது. கர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈசுவரனையும் மறக்காமல் இருக்க வேண்டும். கர்மங்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்யவேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈசுவரனிடம் வைத்து அவனுக்குக் கர்மபலனை அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை.


    சாமானிய ஜீவர்கள் ஒரு கர்மம் என்று இறங்கிவிட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே தனித்தனியாகக் கர்மாவும் வேண்டும்; பக்தியும் வேண்டும். நாளடைவில் கர்மத்தையே பூஜையாகச் செய்கிற உத்தமநிலை சித்திக்கும்; அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும் ஆகலாம்; அல்லது பூஜை, கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம் என்கிற சமாதிநிலை ஏற்படலாம்.


    இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால் கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா? பூஜை செய்கிறவனிடம் பிரீதி அடைவானா? ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்து கொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் அன்போ பாசமோ காட்டாமல், வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும்.




    பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். ஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான். தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். ஆனாலும் அந்தக் கர்ம மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாமல், “வெட்டு வெட்டு’ என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவத் பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது.



    Source:mahesh
Working...
X