என்னை மறந்தது ஏன்? திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள்.
பிராட்டி - விளக்கும் எளிய கதை
திருவள்ளூர் வீரராகவப் பெருமானை சேவித்து மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், அதற்கு அடுத்த திருநின்றவூர்ப் பக்தவச்சலப் பெருமாளைப் பாடாமல், மாமல்லபுரத்துக்கு வந்து விட்டார்.
இதைக் கண்ட தாயார், யோக நித்திரையில் இருந்த பெருமாளை எழுப்பி ஆழ்வாரிடம் பாசுரம் பெற்றுக் கொண்டு வாரும் என்று அனுப்பி வைத்தாள். உடனே பெருமாளும் புறப்பட்டு கடன்மல்லை ஸ்தலசயனக் கோயிலுக்கு வந்து ஆழ்வாரின் முன்னால் நின்றார். ‘என்னை மறந்தது ஏன்?’ என்று கேட்டார்.
அப்போது அவரைப் பார்த்த ஆழ்வார்,
நீண்டவத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்றஊர் நித்திலத்து ஒத்தார் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே
என்று பாடினாராம். விஷயம் இதோடு முடியவில்லை. ஒரு பாசுரத்தை பெற்றுக்கொண்டு திரும்பிய பகவானை திருநின்றவூர் பிராட்டி, ‘இது என்ன எல்லா தலங்களுக்கும் பத்து பாசுரங்கள் பாடினாரே நமக்கு மட்டும் ஒன்றுதானா?’ என்று கேட்டாளாம்.
அதுவும் சரிதான் என்ற பெருமாள், மீதிப் பாசுரங்களை வாங்குவதற்கு ஆசைப்பட்டு, உடனே ஆழ்வாரைத் தேடிக்கொண்டு மாமல்லபுரம் போனார். ஆழ்வார் அங்கேயில்லை, திருக்கண்ணமங்கை தலத்துக்குச் சென்று விட்டார்.
பகவானும் விடாமல் பின்தொடர்ந்து அங்கே சென்றார். ஆழ்வார் திருக்கண்ணமங்கைப் பெருமாளை மங்களாசாசனம் செய்து கொண்டிருக்கும் வேளையில் அவர் கண்ணில்படுவதைப்போல நின்றுகொண்டார்.
ஓரக் கண்ணால் பகவானைப் பார்த்த ஆழ்வார்,
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினைப் புனலைச் சென்று நாடிக்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்
என்று பாடினாராம்.
திருநின்றவூரில் நின்ற முத்துப் போன்ற எம்பெருமானை, பிராணவாயுவைப் போல இருந்து காப்பவனை, தண்ணீரைப்போல உயிரை தரிக்கச் செய்யும் பகவானை நான் திருக்கண்ணமங்கை தலத்தில் கண்டுகொண்டேன்’ என்பது இப்பாசுர வரிகளின் பொருள்.
இப்படி எம்பெருமானே நடையாக நடந்து பாசுரங்களைப் பெறும் அளவுக்கு திருமங்கையாழ்வான் பக்தியும், பாசுரச்சிறப்பும் இருந்திருக்கிறது