Announcement

Collapse
No announcement yet.

கொல்லூர் மூகாம்பிகை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கொல்லூர் மூகாம்பிகை

    கொல்லூர் மூகாம்பிகை


    Click image for larger version

Name:	Mookambikai.jpg
Views:	1
Size:	34.1 KB
ID:	35048

    மிழக முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர். இன்றைய முதல்வர் ஜெயலலிதா சில முறை இக்கோயிலுக்கு சென்று வந்துள்ளார். இசைஞானி இளையராஜா மூகாம்பிகையின் தீவிர பக்தர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து வணங்கிச்செல்கிறார்கள்.

    கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பசுமையான இயற்கை சோலைகள் கொண்ட சிற்றூர் கொல்லூர். இயற்கை எழில் சூழ்ந்த இக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது மூகாம்பிகை ஆலயம். கொல்லப்புறா என்ற பெயர் மருவி கொல்லூர் என அழைக்கப்படுகிறது.



    கம்சாசூரன் என்ற அரக்கன் சிவனிடம் பல வரங்கள் பெற்று நாட்டையே துவம்சம் செய்து வந்தான். தேவர்கள், கடவுள்கள் எல்லாம் அவனுடைய தொந்தரவு தாங்க முடியாமல் தலைமறைவாகின்றனர். இதனால் தலைகனம் அதிகமாகி கம்சாசூரனின் தொல்லைகள் அதிகமாக அனைவரும் சிவப்பெருமானிடம் சென்று முறையிடுகின்றனர். அவர்களின் பேச்சை செவிமடுத்த சிவபெருமான் பொருத்தறுளுங்கள் விடிவு பிறக்கும் என்கிறார்.

    அதன்படி அனைத்து கடவுள்களின் தனிப்பட்ட சக்திகள் கோலாரிஷியின் ஆலோசனைப்படி ஒன்றினைக்கப்பட்டு மாயசக்தி உருவாக்குகின்றனர். அந்த சக்தி கம்சாசூரனுடன் போரிட்டு அவ்வரக்கனை அழிக்கிறது. அவனை அழித்த இடத்தை மரணகட்டி என்று அழைக்கப்படுகிறது. அந்த மாயசக்தி உருவம் தேவர்களால், மற்றவர்களால் மூகாம்பிகா என அழைத்து ஆசி பெறுகின்றனர்.


    அதேநேரம் ஜாம்பவான் மகரிஷி என்பவர் கோலாவின் இயற்கை அழகை கண்டு இங்கு வந்து தவம் செய்ய முயல்கிறார். அப்போது சிவனை நோக்கி தவம் செய்யும்போது அவர் முன் வந்து ஆசி வழங்குகிறார். அவர் தங்களை பூஜை உருவம் வேண்டும் என்ற போது லிங்க பிரஸ்டை செய்யகூறுகிறார்.

    ஆனால் அம்பாளுடன் உடன் இருப்பது போல் பூஜிக்க வேண்டும் என எண்ணுகிறார். அவரின் ஆசைப்படி மாயசக்தியான மூகாம்பிகா உருவத்தை அவருக்கு காட்டுகிறார். சிவனின் சக்தியும் அதில் இருப்பதை உணர்ந்து அவ்வுருவத்தை கொண்டு வழிபாடு நடத்தி வருகிறார்.


    ஆதிசங்கரருக்கு அருள்:

    ஆதிசங்கரர் 788ல் அன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாகவும், இன்று கேரளா பகுதியாக உள்ள காலடி என்ற இடத்தில் சிவகுரு – ஆயாம்பாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். கோவிந்தபாகவதரின் சீடராக தன் ஆன்மீக பயணத்தை தொடங்கினார். உபநீஷங்கள், பிரம்மசூத்திரம், அத்வைதம் என கற்று தேர்ந்த ஞானியவர். இந்து மதத்தை மென்மேலும் உயிர்பிக்க வந்தவர். பகவத்கீதை, விஷ்ணுஅவதாரம் போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதிவைத்தவர். இந்திய துணை கண்டம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை எழுச்சி பெற வைத்தவர். கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என நான்கு இடங்களில் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார்.



    அவர் பயணம் மேற்கொள்ளும் போது கர்நாடகாவின் கொடச்சேரி மலையின் மீது தியானம் மேற்கொள்கிறார். தியானத்தின் பலனாய் அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றும்போது அம்பாளை தினம் தினம் வணங்க வேண்டும், தங்களது உருவத்தை நான் கேரளா காலடியில் பிரஷ்டை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கேட்கிறார். அம்பாளுக்கே இருப்பிடம் விட்டு போக மனசில்லை. இருந்தும் பக்தன் கேட்டுவிட்டான். கேட்டதை வழங்குவதே அம்பாளின் நிலை. அதனால் மூகாம்பிகையம்மன் பதிலுக்கு அவரிடம் ஒரு வாக்குறுதி பெறுகிறார். அதாவது, நீங்கள் என் உருவத்தை கொண்டு செல்லுங்கள். ஆனால் நீங்கள் சென்று சேரும் இடம் வரை திரும்பி பார்க்ககூடாது. அப்படி திரும்பினாள் அந்த இடத்திலேயே என்னை பிரஷ்டை செய்துவிட வேண்டும் என்கிறார். ஆதிசங்கரரும் அதை ஏற்று அமபாளின் உருவம் கொண்ட சிலையுடன் கொடச்சேரி மலையில் இருந்து அம்பாளை கைகாளால் தாங்கிக்கொண்டு பக்தியுடன் இறங்கி வருகிறார். மலையின் அடிவாரம் வந்தபோது அம்பாள் தனது கொலுசை அசைக்க அதில் வந்த சத்தத்தை கேட்டு ஆதிசங்கரர் திரும்பி பார்க்கிறார். திரும்பி பார்த்ததால் அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்தயிடத்திலேயே அம்பாளை பிரஷ்டை செய்கிறார். அந்தயிடம் கொல்லப்புறா என்கிற கொல்லூராகும்.


    ஆதிசங்கரரால் பிரஷ்டை செய்யப்பட்ட அந்த சிலையே தற்போதும் உள்ளது. அழகும், அமைதியும் கொண்டயிடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா. மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம்மது. பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க தூண்டும் அன்பு கலந்த சாந்த முகம்மாக காட்சியளிக்கிறாள்.


    Source:http://tour.nakkheeran.in/frmTourinner.aspx?Type=1&Tid=40
Working...
X