கல்யாண வரம் கிடைக்கும் திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள்!
சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று
தல வரலாறு
இந்தத் தலத்தில் இருந்து மண்ணை எடுத்த பிரம்மா, ஒரு கடம் செய்தார். அந்தக் கடத்தில் நான்கு வேதங்களையும் வைத்துக் காப்பாற்றி, அடுத்த பிரஜோற்பத்தியின்போது அளித்தாராம். அத்தகைய பெருமை பெற்ற தலமாக விளங்குகிறது திருச்சேறை.
ஒரு முறை கங்கை, காவிரி மற்றுமுள்ள ஆற்று நங்கையர் விந்திய மலையின் ஓர் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கந்தர்வன் ஒருவன் அவ்வழியாகப் போனான். நிமிட நேரம் அங்கே நின்ற அவன், அவர்களை வணங்கிச் சென்றான். அப்போது நதி நங்கையர் அனைவரும் கந்தர்வனிடம், அவன் யாரை வணங்கினான் என்று கேட்டனர்.
அதற்கு கங்கை மற்றும் காவிரியைக் கண்ணால் பார்த்துவிட்டு அவன் சென்றுவிட்டான். இப்போது, கங்கையும் காவிரியும் யார் புனிதமானவர் என்று போட்டியிட்டனர். இந்த விவகாரம் பிரம்மாவிடம் சென்றது. அவர், ""நான் நித்திய பூஜைக்கு ஸ்ரீவிஷ்ணுவின் பாதத்தைத் தொட்டு வரும் கங்கை நீரையே பயன்படுத்துகிறேன். எனவே, கங்கையே புனிதமானவள், உயர்ந்தவள்'' என்றார். இதனால், காவிரிக்கு வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. தனக்கும் அதே கவுரவம் வேண்டும் என்று எண்ணினாள் காவிரி. பெருமாளின் பாதம் தொட்டு வருவதால்தானே கங்கைக்குப் புண்ணியம். அதுபோல் தான் பெற விரும்பினாள் காவிரி. பெருமாளை நோக்கித் தவம் புரிய எண்ணினாள்.
இந்த மனக்கவலையுடன் பெருமாளிடம் வந்தாள் காவிரி அன்னை. திருச்சேறைத் தலத்தில், சார புஷ்கரிணியில் ஓர் அரச மரத்தடியில் தவம் மேற்கொண்டாள். இவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய ஸ்ரீமந் நாராயணர், ஒரு குழந்தையின் வடிவில் காவிரித் தாயின் மடியில் தவழ்ந்தார். ஆனால், காவிரியோ தனக்கு இதைக் காட்டிலும் பெருமை வேண்டும் என்றாள். எனவே காவிரியின் வேண்டுகோளை ஏற்று சங்கு சக்ரதாரியாக, கருட வாகனத்தில் ஏறி, தேவியர் ஐவருடன் காட்சி தந்தார் பெருமாள். மேலும், காவிரியிடம் வேண்டும் வரம் கேட்டுப் பெறக் கூறினார்.
ஐந்து லட்சுமியருடன் அழகு தரிசனம் பெற்ற காவிரித் தாயோ, தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கே தரிசனம் தர வேண்டும். மேலும், கங்கையிலும் புனிதமான மேன்மையை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டினாள். ஆயிரம் வருட தவத்துக்குப் பிறகு, விந்திய மலைக்குத் தெற்கே கங்கைக்கு சமமான அந்தஸ்து காவிரிக்கும் கிடைத்தது. மேலும், காவிரி அன்னைக்குக் காட்சி தந்த பெருமாள் திருச்சேறையில் அவ்வண்ணமே எழுந்தருளினார். கருவறையில் சாரநாதப் பெருமாளுக்கு இடப்புறத்தில் காவிரித்தாய் அமர்ந்து கொண்டார்.
http://ta.wikipedia.org/wiki/
http://archive.is/BH5SR