Announcement

Collapse
No announcement yet.

அப்பளாம், கருடாத்தைக் குடுத்துக் கொழந்த&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அப்பளாம், கருடாத்தைக் குடுத்துக் கொழந்த&

    ஏழைப் பாட்டியம்மை ஒருத்தி ஸ்ரீ பெரியவாளிடம் வந்து நமஸ்கரித்தாள். தான் சென்னைக்கு இடம் மாறிவிட்டதாகவும், அப்பளம், வடகம் இட்டு விற்று ஏதோ பிழைப்பதாகவும் சொன்னாள்.

    உடனே அவளுக்கு இரண்டு புடவை, கம்பளிப் போர்வை, சென்னைக்குத் திரும்புவதற்குப் பயணச் சத்தம் யாவும் அருளினார், கருணாமூர்த்தி.

    பாட்டி சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு, “ஒரு மடிஸஞ்சி கெடைக்குமானா தேவலையே!” என்றாள்.

    உடனே பணியாளரிடம் தேடிப் பார்த்து மடிஸஞ்சி கொண்டுவருமாறு உத்தரவிட்டார் தயாளு. அவர் கொண்டு வந்தார். அதைப் பாட்டிக்கு ஈந்தார் குருநாதர்.

    “பெரியவா கையால ஒரு ருத்ராக்ஷ மாலை…” என்று பாட்டி இழுத்தாள்.

    புன்முறுவலுடன் ஒரு ருத்ராக்ஷ மாலை கொண்டுவரப் பாரிஷதரைப் பணித்தார் க்ருபாளு. அவர் கொண்டு வர, ‘ஜபமாலை தந்த சற்குருநாதா’ என்ற திருப்புகழைப் பாட்டிக்கு ஸ்ரீ பெரியவாள் மெய்யனுபவமாக்கினார்.

    பாட்டி விடை பெற்றாள். இத்தனை பெற்றும் நிறைவடையாத ஓர் ஏக்கத்துடனேயே அவள் சென்றதாகத் தோன்றியது.

    சிறிது தூரம் சென்றவள் திரும்பி வந்தாள். தயக்கத்துடன், “என்னமோ ஒரு ஆசை…. பெரியவாளுக்குன்னு மடி மடியா அப்பளாம், கரு(வ)டாம் பண்ணி எடுத்துண்டு வந்திருக்கேன்…. ஏத்துக்கணும்” என்று விண்ணப்பித்தாள்.

    பெறுவதில் பெற முடியாத நிறைவு கொடுப்பதில் தானே இருக்கிறது? பாட்டியின் நிறைவின்மைக்கும் இதுதான் காரணம் என்று தெரிந்தது. கடும் நியமம் காப்பவர், வயிற்றை அடியோடு கட்டியவர் – அப்படிப் பட்டவர் பெரியவாள் என்று தெரிந்தபோதிலும் ஊருக்கெல்லாம் தான் செய்து விற்கும் பண்டங்கள் அந்தத் திருவுதரத்துக்கும் செல்ல வேண்டும் என்ற அவாவை அவளால் அடக்க முடியவில்லை.

    அவளிடம் கனிவுமயமாக ஸ்ரீசரணர் கூறினார்: ‘லோகம் நன்னா இருக்கணுமானா வேதம் இருந்துண்டேயிருக்கணும். அப்படி இருக்கப் பண்ணறதுக்காகத்தான் என்னால ஆனதெல்லாம் பண்ணிண்டிருக்கேன். கஷ்டப்பட்டு ஆளைச் சேத்து அங்கங்கே வேத பாடசாலைகள் நசிச்சுப் போகாமக் காப்பாத்திக் குடுக்க முயற்சி பண்ணிண்டிருக்கேன். வேறே எந்தப் படிப்புப் படிச்சு எந்தத் தொழிலுக்குப் போனாலும் கை நெறய்ய சம்பளம்னு இருக்கற இந்த நாள்லயும் என் வார்த்தையைக் கேட்டுண்டு செல தாயார்-தோப்பனார் பசங்களைப் பாடசாலைக்கு அனுப்பிச்சிண்டிருக்கா. என்னை நம்பிண்டு கொழந்தைகளை ஒப்புக் குடுத்திருக்கா. வரப் போற காலத்துலயும் வேதம் போயிடாமக் கொஞ்சமாவது ரக்ஷிச்சுக் குடுக்கப் போற அந்தக் கொழந்தைகள்தான் எனக்கு உயிர் மாதிரி.

    ஆனதுனால நீ என்ன பண்றேன்னா, சின்னக் காஞ்சீபுரத்துல மடத்துப் பாடசாலை இருக்கு. அங்கே ஸுந்தரம்னு சமையல் பாத்துக்கறவன் இருக்கான். அவன்கிட்ட ஒன் அப்பளாம், கருடாத்தைக் குடுத்துக் கொழந்தைகளுக்கு வறுத்துப் போடச் சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு. அதுகள் அப்பளாம், கருடாம் பாத்தே எத்தனையோ காலமாயிருக்கும். அதனால ஸந்தோஷமாச் சாப்பிடும். அதுவே எனக்கும் ஸந்தோஷம் – நம்மை நம்பிண்டு அதுகளை அனுப்பிச்சிருக்கறதுக்குப் பதிலா நாமும் ஒண்ணு பண்ணினோம்கிற ஸந்தோஷம்”.

    பெரியவாளின் உடலுக்காகக் கொண்டு வந்த தின்பண்டங்கள் அவரது உயிரான சிறுவர்களுக்குச் செல்வதில் பாட்டியம்மையும் சந்தோஷமடைந்து ஆக்ஞைப்படியே செய்யப் புறப்பட்டாள்.

    ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

    ”மைத்ரீம் பஜத” - ரா.கணபதி அண்ணாவின் புத்தகதிலிருந்து..




    Source: uma2806
Working...
X