ஷடங்கங்கள் - ஆறு அங்கங்கள்
அந்த ஆறு அங்கங்களாவன:சிக்ஷ (எழுத்திலக்கணம்) , வியாகரணம் (சொல்லிலக்கணம்), நிருக்தம் (நிகண்டு), கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பாவிலக்கணம்), ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பவை. பிராம்மணன் வேதங்களையும் இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வேதாத்யயனம் செய்யவேண்டும். அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இந்த ஆறு அங்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேத புருஷனுக்கு சிக்ஷ மூக்கு; வியாகரணம் முகம் அதாவது வாய் (வியாகரணப்படி ஒன்றைச் சொல்ல முடியாவிட்டால் உளற வேண்டும்); கல்பம் கை; நிருக்தம் காது; சந்தஸ் பாதம்; ஜ்யோதிஷம் கண்; நிருக்தம் காது; சந்தஸ் பாதம்; ஜ்யோதிஷம் கண். ஜோஸ்யம் என்பது ஜ்யோதிஷத்தையே ஆகும்.
ஏன் இப்படி ஒவ்வொரு சாஸ்திரத்தை ஒவ்வொரு அவயமாகச் சொல்லியிருக்கிறது என்பதை அந்தந்த சாஸ்திரத்தைப் பற்றிச் சொல்லும்போது பார்க்கலாம்! பொருத்தமாகத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.
முதலில் 'சிக்ஷ'யில் ஆரம்பிக்கலாம்.
சிக்ஷ:வேதத்தின் மூக்கு - மூச்சு அவயவம்
சிக்ஷ என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் பிரதம அங்கம். வேதத்துக்கு நாசி (மூக்கு) ஸ்தானம் சிக்ஷ. மூக்கு என்பதால் மோந்து பார்க்கிற சின்ன உபயோகத்துக்காக ஏற்பட்டது என்று (அர்த்தம்) இல்லை. மூக்கினால்தானே மூச்சு விடுகிறோம்? நமக்குப் பிராணாதாரமான சுவாஸத்தை விடுவதற்கு நாசி உதவுகிறாற்போல், வேத மந்திரங்களுக்கு உயிர் மூச்சாக இருக்கிற அங்கம் சிக்ஷ.
வேத மந்திரங்களுக்கு உயிர் எதில் இருக்கிறது? மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்தையும், அதன் பரிமாணம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படிச் சரியாக உச்சரிக்க வேண்டும். 'அக்ஷர சுத்தம்' என்று இதற்குப் பெயர். அதோடுகூட ஒவ்வொரு ஒவ்வொரு எழுத்தையும் உயர்த்திச் சொல்வதா, தாழ்த்திச் சொல்வதா, ஸமனாகச் சொல்வதா என்ற பாகுபாடும் உண்டு. இந்த மூன்றையும் முறையே உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்று சொல்வார்கள். இவை இருக்க வேண்டியபடி இருந்தால் அதற்கே 'ஸ்வர சுத்தம்'என்று பெயர். இப்படியாக அக்ஷர சுத்தம் ஸ்வர சுத்தம் இரண்டும் இருந்தால்தான் மந்திரங்கள் பலன் தரும். மந்திரங்களில் அர்த்தத்தைவிடக் கூட இம்மாதிரி அவற்றின் ஒலி சரியாக இருக்க வேண்டியது தான் முக்கியம். அர்த்தம் தெரியாவிட்டாலுங்கூட, மந்திரங்களின் சப்த ரூபத்தை உள்ளபடி உச்சரித்து விட்டால் அவை பலன் தந்துவிடும். ஆகையால், மந்திர ஸமூஹமாகவே இருக்கப்பட்ட வேதத்துக்கு எது மூச்சு ஸ்தானம் என்றால் சப்தரூபம்தான்.
தேள்கொட்டு மந்திரம் இருக்கிறது. அதற்கு அர்த்தம் சொல்லக்கூடாது. அதில் உள்ள எழுத்துக்களுக்குத்தான் யோக்கியதை உண்டு. சில வகையான சப்தங்களுக்குச் சில சக்தி உண்டு. திவஸ மந்திரங்களை ஸம்ஸ்கிருதத்திலே ஏன் சொல்ல வேண்டும்? இங்கிலீஷிலாவது தமிழிலாவது சொன்னால் என்ன?அப்பொழுது சப்தம் வேறாய் விடுகிறது. அந்த சப்தந்தான் பிரதானம். பில்லி சூனியம் வைக்கிறவர்களுடைய பல்லைத் தட்டிவிட்டால் அவர்கள் செய்கிறது பலிக்காது. ஏனென்றால் பல் போனபின்பு உச்சாரணத்தில் தப்பு ஏற்படும். உச்சாரணம் வேதத்துக்குப் பிரதானம். அது ஸரியாக இருக்க என்ன செய்வது? அக்ஷரத்தை இப்படியிப்படி ஒலிக்க வேண்டுமென்று நன்றாக வரையறுத்து லக்ஷணம் சொல்ல வேண்டும்.
இப்படி அக்ஷர லக்ஷணத்தைச் சொல்வதுதான் சிக்ஷ என்பது. வேதாக்ஷரங்களின் லக்ஷணத்தை வரையறை செய்து கொடுப்பதே சிக்ஷ சாஸ்திரம்.
To be Contdā¦2
Source:subadra