திருமஞ்சனம்
க்ருபாசமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்
ஜடாதரம் பார்வதி வாமபாகம்
சதாசிவம் ருட்ரமனந்த ரூபம்
சிதம்பரேஷம் ஹ்ருதி பாவயாமி.
திருமஞ்சனம் என்றால் குளிப்பாட்டுதல் ( அபிஷேகம் செய்தல் ) என்று பொருள். ஒரு வருஷத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும் சிதம்பரம் ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்கு ஆனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தில் திருமஞ்சன (அபிஷேக) நிகழ்ச்சி நடைபெறும் இந்த நாள் தான் ஆனித் திருமஞ்சனம்.
இன்று சிதம்பரம் சென்றோ, அல்லது அருகில் இருக்கும் ஆலயம் சென்றோ, அளவற்ற ஆனந்தத்தைத் தரும் ஸ்ரீ சித்சபேசரை, ஸ்ரீ நடராஜாவை தர்சனம் செய்து, த்யானித்து, பூஜித்து ஆனந்தமடைவோம்.
source:chinthamani