Announcement

Collapse
No announcement yet.

ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான&#

    ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு

    Click image for larger version

Name:	sudama3.jpg
Views:	1
Size:	59.7 KB
ID:	34793

    எந்த ஒன்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பெரும்பாலும், அனைவருமே ஒரு பக்கத்தையே பார்ப்போம். மறுபக்கத்தைப் பார்க்கமாட்டோம். நமக்கு நன்றாகவே தெரிந்த துரோணர், குசேலர் என்னும் இருவரின் கதைகளையும் இங்கே தன் பாணியில் சொல்லி, அவற்றின் மறுபக்கத்தை அலசி ஆராய்ந்து அறிவுறுத்துகிறார் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள்.

    துரோணரும், இளவரசனான துருபதணும் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது துருபதன் தன் நண்பனான த்ரோணரிடம், “நான் அரசனானால் உனக்குப் பாதி ராஜ்ஜியம் தருவேன்” எனச் சொல்லியிருந்தான்.எங்கே… சொன்னபடி நடந்துகொண்டானா துருபதன்? அதுபற்றி காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகளே இங்கே மனம் திறக்கிறார்.

    “பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவித்தது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட துருபதனிடம், ‘ நம் பழைய கிளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், ‘இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friend-ship கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணிவிடுகிறான்.

    இதிலே, அவனுக்கு எதிரடி தரவேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு துருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். இந்த மானபங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியிலிருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். திரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான்.

    பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது, ‘நம்மைப் பூர்வத்தில் ஜயித்துச் சிறைப் பிடித்தவனாச்சே இந்த அர்ஜுனன்?’ என்று துருபதன் நினைக்காமல், ஸந்தோஷமாகவே கன்யாதானம் பண்ணுகிறான். காரணம், முன்னே தன்னோடு சண்டை போட்டு அவன் ஜயித்தபோது அவன் காட்டிய வீரபௌருஷத்தில், இவனுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயமே உண்டாயிருந்தது. அதனால் இவன் அவனிடம் ஆத்திரப்படாமல், அவனைத் தூண்டிவிட்டுத் தம்முடைய க்ஷாத்ரத்தைத் தீர்த்துக்கொண்ட த்ரோணரிடம் வன்மம் கொண்டான்.

    கடைசியில் பாரத யுத்தத்தில், இதே அர்ஜுனன் ஆசார்யரான அந்த த்ரோணரோடேயே சண்டை போட வேண்டியதாகிறது. அவருடைய யுத்த ஸாமர்த்யத்துக்கு ஈடுகொடுப்பது ரொம்பக் கஷ்டமானபோது, பொறுப்பை பகவான் (க்ருஷ்ணர்) தன் தலையில் போட்டுக் கொண்டு, அவருக்கு ரொம்பவும் ப்ரியமான ஏக புத்ரன் அச்வத்தாமன் செத்துப் போய்விட்டான் என்று, ஸத்ய ஸந்தரான தர்மபுத்ரரைச் சொல்ல வைத்தது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

    அச்வத்தாமன் என்ற யானையை நிஜமாகவே அப்போது ஹதம் பண்ணி, “அச்வத்தாம: ஹத: குஞ்ஜர:” என்று தர்மபுத்ரரைச் சொல்ல வைத்து, “குஞ்ஜர” (யானை) என்று அவர் முடிக்கிற ஸமயத்தில், பாஞ்ச ஜன்யத்தைப் பெரிசாக ஊதி, அந்த வார்த்தை த்ரோணர் காதில் விழாதபடி அமுக்கிவிட்டாரென்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனே, த்ரோணர் மனச் உடைந்து போய் அப்படியே ஆயுதங்களைப் போட்டு உட்கார்ந்து விட்டார்.

    அந்த ஸமயம் பார்த்து த்ருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து அவரை கொன்றுவிடுகிறான். அவன் பண்ணியதை பார்த்துப் பாண்டவ சைன்யத்தினர் உள்பட எல்லாரும் ‘தகாத கார்யம் நடக்கிறதே’ என்று விக்கித்துப்போய் அருவருப்பு அடைந்ததாக பாரதம் சொல்கிறது.

    இன்னொரு கதையோ இதற்கு நேர்மாறாக, மனசுக்கு ரொம்பவும் ஹிதமாகப் போகிறது. க்ருஷ்ண பரமாத்மாவின் ஸஹபாடியான குசேலர், த்ரோணர் மாதிரியே தாரித்ரிய ஸ்திதியில் க்ருஷ்ணரிடம் போகிறார். பகவான் அவரை உதாஸீனப் படுத்தாதது மட்டுமில்லை; அவருக்குப் பரம பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய பர்யங்கத்திலேயே (கட்டிலிலேயே) அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மிணியைக் கொண்டு அவருக்குச் சாமரம்போட வைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார்.

    தன் மாயாவித்தனத்தின்படியே அவரை தாரித்ரிய நிவ்ருத்து பற்றி எதுவும் சொல்லவொட்டாமல் பண்ணி, ஊருக்குத் திரும்ப அனுப்பிவிடுகிறார். அங்கே அவர் போய்ச் சேர்வதற்குள் கனகவர்ஷமாகப் பெய்து, ‘இது நம் அகந்தானா?’ என்று அவர் ஆச்சர்யப்படுமாறு செய்கிறார்.

    இந்த வ்ருத்தாந்தம் இவ்வளவு நன்றாகப் போக, த்ரோணர் ஸமாசாரம் ஏன் அப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று த்வேஷமாகவும், அநீதியாகவும், அஸத்யமாகவும், மனஸை உறுத்துகிறார் போல போகிறது என்று யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது….

    குசேலர் எத்தனை தாரித்ரியமாகட்டும், ப்ராம்மண தர்மத்தை விடப்படாது என்று வாழ்ந்து,

    எளிமையுடன் நல்ல அன்புள்ளத்துடனும் ஸாது ச்ரேஷ்டராக இருந்திருக்கிறார். அதுவே அவருக்கு இத்தனை மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

    த்ரோணரும் மஹா பெரியவர்தான் என்றாலும் ப்ராம்மண தர்மப்படி தநுர்வேதம் சொல்லிக் கொடுப்பதோடு நிற்காமல், அதை மீறி இவரே கையிலே ஆயுதத்தை எடுத்து யுத்தம் செய்ததால்தான் எல்லாம் கோளாறாகப் போயிருந்திருக்கிறது.

    த்ருபதனோடு இவரே சண்டையில் இறங்காமல் அர்ஜுனனைத்தான் தூண்டிவிட்டார் என்றாலும்கூட, தன்னை த்ருபதன் எதோ சொல்லிவிட்டானென்று ப்ராம்மணராகப்பட்ட அவர் இத்தனை மானாவமானமும் க்ஷாத்ரமும் பாராட்டிப் பழிவாங்க நினைத்ததே ஸரியில்லைதான்.

    ஆரம்பத்திலிருந்தே அவர் ஆயுத அப்யாஸத்தில் அளவுக்கு மீறி மனசைச் செலுத்தி அப்பாவிடம் மாத்திரமில்லாமல், பரசுராமரிடம் அஸ்த்ர சிக்ஷை கற்றுக் கொண்டதிலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக ஸ்வதர்மத்துக்கு ஹானி ஏற்பட்டிருக்கிறது. இப்படி செய்தால் தனக்கும் கஷ்டம், பிறத்தியாருக்கும் கஷ்டம் என்கிற மாதிரியே பிற்பாடு அவர் கதை போயிருக்கிறது. நியாயமில்லாத துர்யோதனன் கட்சியில் அவர் யுத்தம் பண்ணும்படி ஏற்பட்டது. இது அவருக்கு எத்தனை வேதனையாயிருந்திருக்கும்?

    யுத்த பூமியிலானால், அர்ஜுனன் போடுகிற அம்பை விடக் கூராகத் துளைக்கும் வார்த்தயம்புகளை பீமசேனன் அவர்மேல் வீசி, அவர் பிராம்மண தர்மத்தை முறைப்படி நடத்தாதற்காகப் ரொம்பவும் நிந்தித்திருக்கிறான். வாயைத் திறக்காமல் அவர் அதையும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படியாக இருந்திருக்கிறது.

    ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால், மாளாத அகௌரவம்தான் என்ற இரண்டு உண்மைகளையே குசேலர், த்ரோணர் கதைகள் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன

    Source: mahesh

  • #2
    Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&#298

    ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு

    பிராமணன் பிராமணனாக இருக்கிறவரைதான் மதிப்பு .இல்லை என்றால் அவனுக்கு மதிப்பு கிடையாது என்றுன் இதில் தவறிவிட்டால் அவனுக்கு அகௌரவம் தான் மிஞ்சும் என்பது தானே நீங்கள் சொல்லவருவது..சரி அப்படியே தற்கால பிராமணனும் நடந்து கொண்டால் அவன் சொல்வதை யார் சுவாமி கேட்பார்கள்.இந்த காலத்தில் பிராமணனே இருக்ககூடாது என்று கொ டி பிடித்து கூச்சல் போடுகிறார்களே.அப்படி என்றால் தற்கால பிராமணன் எங்கே சுவாமி போவான்.கொஞ்சம் அவனுக்கு வழி காட்டுமேன் .இந்த காலத்தில் சொல்வது மிகவும் சுலபம் ஸ்வாமின்.நீர் எழுதியதை படித்து திருப்தி அடைவதை தவிர மற்றது ஏட்டு சுரைக்காதான் .அடியேனை க்ஷ மிக்கவும் ..

    Comment

    • #3
      Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&

      Originally posted by P.S.NARASIMHAN View Post

      Sri.P.S.NARASIMHAN Sir

      I have great regard for you as you are enriching this Forum by posting many Threads which are very useful to members, please continue your service.

      Coming to your opinion that no one respects Brahmins nowadays, i think that there are people in this society who still value a Brahmin Culture

      Can you even for a minute think and act as if you are not a Brahmin? Even if you change your name to Nachippan ( just for Example) will the society accept you as a non Brahmin? Your look, your family Tradition, your way of living, your food habits, are all in born with your Brahmin Tradition.

      Let us not bother whether some people in the Society respects Brahmins or not, let us continue to serve the Society and enrich it with our Tradition, culture and Thoughts.

      Comment

      • #4
        Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&

        Originally posted by Padmanabhan.J View Post

        Dear Sree,Padmanabhan,
        I profusely thank you for your great regards to me. Ever since I joined this forum, I have been voicing my concern for our
        hapless poor brahmin boys and girls and their parents, and I was branded by high level people of our community as a
        controvertial person. High level people with lot of money to throw may ofcourse get respect and it is also easy for those people to follow our tradition,culture, and thoughts and what not. As you said people may still value our culture and tradition
        as long as we do not ask them for giving us education and jobs in government . Do you know how many poor boys and girls
        with high good marks are denied even basic degree education. If at all they give they demand lakhs of rupees as capitation
        fees. Where will they go for money. Will culture and tradition come to their rescue.? How many wealthy people of our soceity are helping these poor boys and girls to get some basic education. But they are prepared to throw lakhs of rupees to get their
        children very high education. But they preach to these poor brahmins to follow brahminical food habits.tradition and culture
        but not to educate their wards, and ofcourse with no monetary help.Do you want these poor brahmins not to bother whether some people in the society respect them or not. It is really a wonderful suggestion,no doubt,.. Many Cheers .!!!!!!!

        Comment

        • #5
          Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&

          Originally posted by Padmanabhan.J View Post
          Sri.P.S.NARASIMHAN Sir
          Coming to your opinion that no one respects Brahmins nowadays, i think that there are people in this society who still value a Brahmin Culture ...
          Sri:
          Yes, it is true.
          I am experiencing and I could understand that most of the people in the society are still having lot of respect towards Brahmin community.
          I can give examples from my experience only, so, for example,
          yesterday I went to Tamil Nadu Horticultural Center for getting nursery plants for our house,
          there two officers (must be non brahmins),
          "பெருமாளையே பார்க்கற மாதிரி இருக்கு" என்று வெளிப்படையாகவே கூறினார்கள்.
          This is only recent example.
          We should not take in to account about the news published in news papers and medias,
          because they are always "உண்மைச் சம்பவத்தின் தழுவல்" முற்றிலும் உண்மையல்ல.
          They are mixing lot of action and suspense scripts to truth for getting special effects.
          Regs,
          NVS

          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          • #6
            Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&

            Originally posted by bmbcAdmin View Post
            Sri:
            Yes, it is true.
            I am experiencing and I could understand that most of the people in the society are still having lot of respect towards Brahmin community.
            I can give examples from my experience only, so, for example,
            yesterday I went to Tamil Nadu Horticultural Center for getting nursery plants for our house,
            there two officers (must be non brahmins),
            "பெருமாளையே பார்க்கற மாதிரி இருக்கு" என்று வெளிப்படையாகவே கூறினார்கள்.
            This is only recent example.
            We should not take in to account about the news published in news papers and medias,
            because they are always "உண்மைச் சம்பவத்தின் தழுவல்" முற்றிலும் உண்மையல்ல.
            They are mixing lot of action and suspense scripts to truth for getting special effects.
            Regs,
            NVS
            Respected Sree.NVS swamin,

            First I thought the above reply was from Mr.Padmanabhan without seeing your NVS signature. It is definitely expected for a
            person of your calibre who always look as a Pure vaishnavite and there is nothing special about it. Ofcourse persons like you
            and rich,wealthy will always get respect from other community because of their status in the society. But what I want to
            emphasize is that most of the brahmins are not respected except a few like your goodselves. I am talking about poor
            brahmins but not about rich. If your impression about the respect being given by society to brahmins, who am I to contradict
            your opinion?. "பெருமாளையே பார்க்கற மாதிரி இருக்கு is true when they saw you in our pure Vaishnavite costume.
            There is a quote in tamil " உண்மை சுடும் " Hence there is no point in continuing this debate.
            with regards,
            Adiyaen dasan
            Narasimhan.

            Comment

            • #7
              Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&#298

              ஶ்ரீ:

              "உண்மை யாரைச் சுடும்"?

              "தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
              தன்னெஞ்சே தன்னைச் சுடும்" - திருவள்ளுவர்.

              அடியேனைப் பணக்காரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளமை கண்டு மகிழ்ச்சி.

              ஒரு ஆணைப் பார்த்து ஏழை பணக்காரன் என்று எப்படிக் கண்டறியமுடியும்?
              "தங்கம் ஆடம்பரத்தின் அடையாளம் என" எண்ணி அடியேன் கடுக்கன் (சிறிதளவு தங்கம்)
              அணிவதையும் நிறுத்தி ஆண்டுகள் பல ஓடிவிட்டன. செம்பினால் பின்னப்பட்ட
              ஒற்றைத் தாமரை மணி மாலையைத் தவிர வேறு ஆபரணம் கிடையாது.

              இந்த ஆடை அலங்காரத்துக்கு எந்த வசதியும் தேவையில்லை.
              ப்ராம்மணன் ப்ராம்மணனாக இருக்கும்வரை கண்டிப்பாக அவனுக்குரிய மரியாதை இருக்கும்.

              வருடத்திற்கு சில ப்ராம்மண இளைஞர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும்
              அடியேனால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்.
              அதுபோல், அவரவரும், தங்களால் இயன்ற அளவு ஏழை ப்ராஹ்மணர்களுக்கு உதவி செய்துவந்தால்
              ப்ராஹ்மணரில் ஏழை என்பதே இருக்க வாய்ப்பில்லை.
              NVS

              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment

              • #8
                Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&#298

                உண்மை சுடும்

                "தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

                தன்னெஞ்சே தன்னைச் சுடும்" - திருவள்ளுவர்.

                நீர் சொல்வதை அடியேன் அப்படியே ஏற்றுகொள்கிறேன் .ஆனால் நீர் ஏன் எப்பொழுதும் அடியேன் பொதுவாக எழுதுவதை ஏதோ தங்களைபற்றித்தான் எழுதுகிறேன் என்று முடிவுக்கு வருகிறீர்கள்.தெரியவில்லையே .அது அது அவரவர்கள் மனோபாவத்தை பொறுத்தது போலும்.. பலர் அவரவர்கள் பார்வையில் ஏதோ ஒரு முடிவுக்கு வருவார்கள் இதில் ஏதும் தப்பில்லை தான் , நான் என்னுடைய பார்வையில் எனது அபிப்ராயத்தை தெரிவித்துள்ளேன்.நீர் உம்முடைய அப்பிப்ராயத்தை தெரிவிக்க உரிமை உண்டு.இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்
                அவ்வளவே ...PSN

                Comment

                • #9
                  Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&#298

                  ஶ்ரீ:

                  தாஸன் ஸ்வாமின்,

                  தயவுசெய்து இந்த குறிப்பிட்ட த்ரட்டில் உள்ள விஷயங்களைச் சற்று பின்னோக்கிப் பாரும்.
                  தேவரீர் கூறியுள்ள குற்றச்சாட்டு எதுவும் அடியேனுக்குப் பொருந்தாது,
                  தேவரீருக்குத்தான் நன்றாகப் பொருந்தும்.

                  திரு.பத்மநாபன் அவர்களின் செய்திக்கு, அடியேன் அவருக்குத்தான் பதில் எழுதியிருந்தேன்,
                  அதில் அடியேன் யாரையும் குறிப்பிடவில்லை, அடியேனையே உதாரணமாக எடுத்துக்கொண்டு
                  அடியேனுடைய அபிப்ராயத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.

                  தேவரீர்தான் அதற்கு பதிலாக அடியேனைக் குறிப்பிட்டு நேரடியாக எழுதியிருந்தீர்கள்
                  அதனால் பதில் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

                  மன்னிக்கவும்.

                  NVS

                  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                  Encourage your friends to become member of this forum.
                  Best Wishes and Best Regards,
                  Dr.NVS

                  Comment

                  • #10
                    Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&#298

                    ஸ்வாமின்
                    தாங்கள் கூறியது முற்றும் உண்மையே.திரெட் ஆரம்பித்தது அடியேன் ஆகையால் அந்த பதில் எனக்கும் பொருந்துமே என்று தான் அதற்க்கு பதில் எழுதினேன்.எங்கோ நான் தவறு செய்துவிட்டேன் என்று தான் நினைக்கிறேன்.இந்த விஷயத்தில் தங்கள் மனம் நோகும்படி ஏதாவது எழுதிருந்தால் அடியேனை க்ஷமிக்கவும் .மற்றபடி எல்லாம் சரிதான்.

                    Comment

                    • #11
                      Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&#298

                      ஶ்ரீ:

                      ஶ்ரீ.உ.வே.நரசிம்மாச்சார் ஸ்வாமின்,
                      மனம் நோவதற்கு ஒன்றுமில்லை, ஃபோரம் என்றாலே,
                      வாதத்திற்கு பதில் வாதம் அளிப்பதுதானே!

                      (வாதம் என்ற சொல்லுக்கு பேச்சு, மொழிதல், கருத்துரைத்தல் என்பது பொருள்).

                      மீண்டும் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறேன்,
                      இந்த திரி (த்ரட்) திரு.பத்மநாபன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
                      தாஸன்,
                      என்.வி.எஸ்

                      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                      Encourage your friends to become member of this forum.
                      Best Wishes and Best Regards,
                      Dr.NVS

                      Comment

                      • #12
                        Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதா&#298

                        Re: ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதாĪ

                        ஶ்ரீ:

                        ஸ்ரீ

                        நீர் சொன்னதுதான் சரி.திரெட் ஸ்ரீ பத்மனபான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான்.ஆனால் வாதத்தில் முதலில் ஈடுபட்டது அடியேனும் அவரும்தான். அதனால்தான் அப்படி சொல்லும்படி ஆகிவிட்டது .

                        Comment

                        Working...
                        X