Announcement

Collapse
No announcement yet.

பஞ்ச பூத க்ஷேத்ர ஸ்மரணம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பஞ்ச பூத க்ஷேத்ர ஸ்மரணம்

    Click image for larger version

Name:	Shiva-Parvathi Dance.jpg
Views:	1
Size:	85.7 KB
ID:	34381பஞ்ச பூத க்ஷேத்ர ஸ்மரணம்

    1. ப்ருத்வீ தத்வம் - திருகச்சி - ஸ்ரீ காமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம்
    2. ஜலதத்வம் - திருஆணைக்கா - ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம்
    3. அக்னி தத்வம் - திருவண்ணாமலை - ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம்.
    4. வாயுதத்வம் - திருக்காளத்தி - ஸ்ரீஞானப்ரஸூநாம்பிகா ஸமேத காளஹஸ்தீச்வரம்
    5. ஆகாசதத்வம் - திருபுலியூர்/சிதம்பரம் - ஸ்ரீசிவகாமியம்பா சமேத ஆநந்த நடராஜம்.


    ஷடாதார சக்ரஸ்தலம்


    1. மூலாதாரசக்ரம் - ஸ்ரீகாமாக்ஷியம்பா ஸமேத ஏகாம்பரநாதம்.
    2. ஸ்வாதிஷ்டாணம் - திருஆணைக்கா ஸ்ரீ அகிலாண்டேச்வரியம்பா ஸமேத ஜம்புகேச்வரம்
    3. மணிபூரகம் - திருவண்ணாமலை - ஸ்ரீஅபீதகுசாம்பாள் ஸமேத அருணாசலேச்வரம்.
    4. அநாஹதம் – சிதம்பரம் - ஸ்ரீ உமையம்பா ஸமேத த்ரிமூலநாதம்
    5. விசுத்தி - சிதம்பரம் - ஸ்ரீசிவகாமியம்பா ஸமேத ஆநந்த நடராஜம்
    6. ஆக்ஞை - காசி - ஸ்ரீவிசாலாக்ஷியம்பா ஸமேத விஸ்வநாதம்.
    7. ப்ரும்ஹரந்தம் - மதுரை - ஸ்ரீமீனாக்ஷியம்பா ஸமேத ஸோமஸுந்தரேச்வரம்


    ஆதாரச்கரங்கள் ஆறு இதன் உச்சியானது ப்ரும்ஹரந்த்ரம்


    நமது உடலில் குண்டலினி தத்வம் என்பது அடிமுதுகின் கீழ் பாகத்தில் பாம்புபோல் சுருண்டு கிடக்கும் .ப்ராணாயாம யோகத்தால் அதை எழுப்பி மேற்ச்சொன்ன ஆறு ஆதாரங்களையும் கடந்து ப்ரும்ஹரந்த்ரம் எனப்படும் உச்சந்தலையில் ஸஹஸ்ர இதழ் தாமரைக்குள்ளிருக்கும் சிவத்தோடு இணைக்க வேண்டும். இந்த ஆறு ஆதாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக கடக்கும் போது குண்டலியின் நடைமாறி நர்த்தனமாகிறது.ஆறு விதமான நர்த்தனங்களை 7 ஸப்தவிடங்க க்ஷேத்ரங்களில் ஈஸ்வரன் நடத்துகிறார். இனி அதைப் பார்ப்போம்.

    ஸப்த விடங்கம்

    1. மூலாதாரம் திருவாரூர் - அஜபா தாண்டவம் - ஸ்ரீகமலாம்பிகா ஸமேத த்யாகராஜம் – வீதி விடங்கம்
    2. ஸ்வாதிஷ்டாணம் - திருக்காராயில் குக்குடதாண்டவம் - ஸ்ரீ கைலாஸ நாயகியம்பா ஸமேத ஸஹஸ்ராக்ஷநாதம் - ஆதிவிடங்கம்
    3. மணிபூரகம் திருநாகை - வீசீ தாண்டவம் - ஸ்ரீநீலாயதாக்ஷியம்பா ஸமேத காயாரோகணேச்வரம் - ஸுந்தரவிடங்கம்
    4. அநாஹதம் திருநள்ளாறு - உன்மத்த தாண்டவம் - ஸ்ரீப்ராணேச்வரியம்பா ஸமேத தர்ப்பாரண்யேச்வரம் - நக விடங்கம்.
    5. விசுத்தி திருக்குவளை - ப்ருங்க தாண்டவம் - ஸ்ரீமதுகரவேண்யம்பா ஸமேத ப்ரும்ஹபுரீச்வரம - அவனிவிடங்கம்
    6. ஆக்ஞா திருவாய்மூர் - கமல தாண்டவம் - ஸ்ரீக்ஷீரவாஸிண்யம்பா ஸமேத முகமொழிசம் - நீலவிடங்கம்
    7. ப்ரும்ஹரந்த்ரம் திருமறைக்காடு/வேதாரண்யம் - ஹம்ஸதாண்டவம் - ஸ்ரீ வீணாவாத்ய விதூஷ்ண்யம்பா ஸமேத வேதாரண்யேச்வரம் - புவன விடங்கம்



    சிவனே முதல் சித்தன் என்பர். அண்டத்திலுள்ளது தான் பிண்டத்திலுள்ளது என்று பெரியோர்கள் சொல்வர்.
    மேற்கூறப்பட்ட க்ஷேத்ரங்கள் நம் உடலில் மூலாதாராதி 6ஆதாரங்களில் குண்டலினி பயணம் செய்த்து எல்லாச் சக்கரங்களையும் பேதித்து ப்ரும்ஹரந்தரம் வரை செல்லும். அப்போது ஓர் ஆதாரத்திலிருந்து அடுத்த ஆதாரத்தை நோக்கிப் பயணிக்கும் போது 6 விதமான நர்த்தனங்களும் ப்ரும்ஹரந்த்ரம் வந்ததும் ஹம்ஸ பக்ஷி போல் நர்த்தனமும் நிகழ்கிறது. இதை உணர்த்தும் விதமாகத்தான் ஸப்தவிடங்க க்ஷேத்ரங்களில் பரமேஸ்வரன் அவ்வகை நர்த்தனங்களை ஆடுகிறான்.

    Source: mahesh
Working...
X