Announcement

Collapse
No announcement yet.

புனிதமான திருமலை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புனிதமான திருமலை

    ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார் நந்தவனம் அமைப்பதற்காக திருப்பதியில் தங்கியிருந்தார். ஒருமுறை, ராமானுஜர் திருப்பதி வந்துள்ளதை அறிந்து அவரைக் காண வந்தார். ராமானுஜர் அவரிடம், ""அனந்தா! நந்தவன கைங்கர்யம் எப்படி இருக்கிறது?'' என்று கேட்டார்.
    ""குருநாதரே! உங்கள் ஆசியால் சிறப்பாகவே நடக்கிறது! உங்களுக்காக உணவு செய்து கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும்!,'' என்றார் அனந்தாழ்வார்.
    பரிமாறிய அனந்தாழ்வார் ராமானுஜரிடம், ""திருமலையில் தங்களின் வருகையை எதிர்பார்த்து பலர் காத்திருக்கின்றனர். எப்போதுமலைக்கு வருவீர்கள்?'' என்றார்.
    ""வேங்கடமலையே புனிதமானது. ஆழ்வார்கள் கூட இதன் புனிதத்தை எண்ணி காலடி வைக்க அஞ்சினர். அப்படியிருக்கும்போது நான் மட்டும் எப்படி திருமலை மீது கால் பதித்து ஏறுவேன்?'' என்று கேட்டார்.
    "மலையேற ராமானுஜரே மறுத்து விட்டால் சாமான்ய மக்களும் மலைக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள். இதனால், வெங்கடேசரை யாரும் தரிசிக்க முடியாமல் போகுமே!' என்று அனந்தாழ்வார் வருந்தினார்.
    அவர் ராமானுஜரிடம், ""தங்களின் பாதங்கள் திருமலை மீது பட்டால் தான் இதன் மகத்துவம் மேலும் கூடும். அதனால் நீங்கள் மலையேற வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்றார் ராமானுஜர். கால்களால் ஏற விரும்பாத ராமானுஜர், முழங்கால்களால் தவழ்ந்தபடியே மலையேறிச் சென்றார்.





Working...
X