மட்டபள்ளியில் லக்ஷ்மி நரசிம்ஹர்
Dear All Nrusimha BhaktAs: .
தபோவனம் Video பார்த்த பிறகு எப்படியாவது அங்கு போய்
சேவிக்க வேண்டும் என்ற ஆவலில் பூர்த்தி ஆனது தான் மட்டபள்ளி/
வாடாபள்ளி பிரயாணம்.
மட்டபள்ளியில் லக்ஷ்மி நரசிம்ஹர் மடத்தில் தங்கினோம்.இருபத்து
நான்காம் தேதி காலை சுப்ரபாத சேவை மிக நன்றாக இருந்தது. உடனே
அடியேனுக்கு பத்ரி விஷால் தான் ஞாபகம் வந்தது. ஸ்வயம்பு பத்ரி
நாராயணனை அங்கு சேவித்தோம். ஆனால் இங்கோ ஸ்வயம்பு
நரசிம்ஹர் ப்ர்ஹலதானோடு இருப்பதை நன்கு அனுபவித்தோம்.
புஷ்பாலங்காரம் அதன் பிறகு மிக அற்புதம். இது போல் சேவிக்க
ஆசார்யன் அநுக்கிரஹம் இல்லை என்றால் அது கிடைக்காது.என்பது உண்மை.
ஸ்ரீ உவே முக்கூர் லக்ஷ்மி நரசிம்ஹர் தேவஸ்தானத்தில் தான்
தங்கினோம். அந்த மகான் ஆராதனை செய்த சாலிக்ராமம் எவ்வளவு
என்று கூற முடியாது. அந்த மகானை டெல்லியில் யஹ்னம் செய்த போது
சேவித்து இருக்கிறேன். ..மூன்று மதாச்சாரியார்களால் கையாளப்பட்ட
பரம பவித்ரமான ஸ்தோத்ரம் தெரிந்து கொண்டேன் அங்கே போனபோது.
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாமே.
மந்திரராஜ பத ஸ்தோத்ரம்
ஸ்தோத்ராணாம் உத்தமம் சுபம் !
மந்த்ராரூடம் ஸ்ரீ நரசிம்ஹம்
ஸ்தோத்ரேணாநேந கீர்த்தையே !!
ஸ்ரீ அஹோபில மட பீடாதிபதிகள் அனைவரும் இந்த ஸ்தோத்ரத்தால்
பெருமை அடைந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த ஸ்தலமும்
இதைப் பற்றி கூறி வரும் ஸ்ரீ உவே அனந்த பத்மநாபன் அவர்களும்
இந்த மடத்தை சேர்ந்தவர்களே என்பதும் புலனாகிறது.
பிறகு வாடாபள்ளி ferry மூலம் சென்றோம். கிர்ஷ்ணா நதியின் அழகை
அனுபவிக்க முடிந்தது. வாடாபள்ளி நரசிம்ஹர் அருகில் அவரது முக
மண்டலத்தின் அருகே ஒரு விளக்கு மினு மினுத்தே எரிகிறது. நரசிம்ஹர்
விடும் மூச்சின் காரணமாய் தான் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.
பாதத்தின் அருகே ஒரு விளக்கு நிர்ச்சந்தியாய் எரிந்து கொண்டே
இருக்கிறது. ஒருவித சலனமும் இல்லாமல்.
என்ன ஆச்சர்யம் இந்த இரண்டு விளக்குகளுக்குள். எல்லாம் அவன்
செயல். நம்மால் அனுபவிக்க தான் முடியும்.
ஒரு சில படங்களை சேர்த்திருக்கிறேன்.
அடியேன், தாசன்,
நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்