Announcement

Collapse
No announcement yet.

கந்தன் என்னும் கருணாமூர்த்தி - சொல்கிறார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கந்தன் என்னும் கருணாமூர்த்தி - சொல்கிறார

    வேதத்துக்கு முக்கியமென்ன? அக்னி உபாசனை! சுப்ரமண்யர், அக்னி ஸ்வரூபமாயிருப்பவர். பரமேச்வரனின் நேத்ராக்னிப் பொறி ஆறு சேர்ந்து, அவராக ஆனது. அதனால் தான் அவர் வேத தேவராக இருக்கிறார். வேதம் படிப்பதும், சொல்லிக் கொடுப்பதுமே தொழிலாயுள்ள அந்தணர்களின் தெய்வமாய் இருப்பவர் சுப்ரமண்யர்.
    ஆசார்யாளும் (ஆதிசங்கரர்) "சுப்ரஹ்மண்ய புஜங்கத்தில்' ""மஹீதேவ தேவம், மஹாதேவ பாவம், மஹாதேவ பாலம்'' என்று சொல்லியிருக்கிறார்.
    தமிழிலுள்ள பக்தி நூல்களில் ரொம்பவும் புராதனமான திருமுருகாற்றுப்படையிலும் இப்படியே தான் சொல்லியிருக்கிறது. சண்முகனின் ஆறு முகங்களில், ஒவ்வொன்றும் ஒருவிதமாக அனுக்ரஹம் செய்வதாக நக்கீரர் சொல்லிக் கொண்டு போகும்போது, இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். "சுப்ரமண்ய ஸ்வாமி' என்பதே குமாரசுவாமிக்கு
    பிரசித்த நாமாவாக இருப்பதிலிருந்தே, அவர் வேதத்துக்கும், வைதிகத்துக்கும் அதிதேவதை என்று நிச்சயமாகிறது.
    பரமேச்வரன் மன்மதனை பஸ்மம் பண்ணினவர். எந்த நேத்ராக்னியினாலே (நெற்றிக்கண்ணாலே) மதனைப் பொசிக்கினாரோ, அதே நேத்ராக்னியில் உண்டானவர் சுப்ரஹ்மண்யர். காமத்திலே பிறக்காமல் ஞானத்திலே
    பிறந்தவர். ஞானமே லோகத்தை ரக்ஷிக்க வேண்டும் என்று கருணாமூர்த்தி ஸ்வரூபமாக விளங்குகிறார்.
Working...
X