
இந்த அம்பிகை தனது கைகளில் அம்பு, ஈட்டி, வாள், கதாயுதம், சூலம் போன்ற ஆயுதங்களைத் தாங்கி, சத்ரு சம்ஹார கோலத்தில், உலகைக் காப்பவளாக எழுந்தருளி இருக்கிறாள். அவளது 12 கைகளில் இருகைகள் மட்டும் பின்புறம் இருப்பது மாறுபட்ட அமைப்பு. வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் வன்னிமரத்தடியில் பொங்கலிடுவர். கை,கால்வலி, வாதநோய் உள்ளவர்கள், பாதயாத்திரை வருவதாக நேர்ந்து கொண்டால் சுகமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாட்டுப்பொங்கல் அன்று காஞ்சிப்பெரியவர் இங்கு வந்து அம்மனை வழிபடுவது வழக்கம். ஞாயிறு ராகுகாலம், பவுர்ணமி, ஆடி,தைவெள்ளி, தைப்பூசம் நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். பெரியவர் பெயரில் அமைந்த சந்திரசேகரேந்திரா பல்கலைக்கழகம் கோயில் அருகில் உள்ளது.