Announcement

Collapse
No announcement yet.

ASRAMAM FOR RAMA NAMA SANGEERTHANAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ASRAMAM FOR RAMA NAMA SANGEERTHANAM


    ASRAMAM FOR RAMA NAMA SANGEERTHANAM


    ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம்


    1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது;
    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது;முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;

    இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம்;அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு செய்வது மட்டுமே!
    அப்படி முன் பதிவு செய்தால்,இந்த ஆஸ்ரமத்தில் தங்கிட அறை கிடைக்கும்;உணவும் கிடைக்கும்;இலவசமாக! தனியாக செல்லலாம்;தம்பதியாகச் செல்லலாம்;நண்பர்களாகச் செல்லலாம்;

    ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதமான ஏற்பாடு;

    இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம்;1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால்,இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜப எண்ணிக்கை காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது;

    இங்கே மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக,நமது நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே குணமாகிவிடும்;சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும்;அதுவும் சரியாகிவிடும்;ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்;

    சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற முடியும்;கடந்த 10 மாதங்களில் செய்த ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு இது;

    இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தவர் சமர்த்த ராமதாஸரின் வம்சாவழியைச் சேர்ந்தவர்;(சமர்த்த ராமதாஸர்,மகாராஷ்டிர மாநிலத்தில் தேசபக்தியைத் தூண்டிய வீரசிவாஜியின் குரு ஆவார்)இல்லத்துறவியாக இருந்த இவர்,இந்தியா முழுவதும் நடந்தே பயணித்தவர்;ராம நாம கீர்த்தனையை தனது தந்தையிடம் இருந்து பெற்றவர்;தனது வாழ்நாளில் சில கோடி தடவை ஜபித்தவர்;

    இவருக்கு நயன தீட்சை வழங்கிய குரு ரமணமகரிஷி;

    இவருடைய சீடர்தான் விசிறிச்சாமியார் என்று அழைக்கப்படும் யோகிராம்சுரத்குமார் ஆவார்;

    அந்த ராம நாம கீர்த்தனை:

    ஓம் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா
    இந்த ஆஸ்ரமம் அமைந்திருக்கும் இடம்;மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது;உலகம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்;
    ஆனந்த ஆஸ்ரமம்,காஞ்சன்கோடு,கேரளா;
    தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா மாநிலங்களில் எல்லைப்பகுதியில் வடக்கு கேரளாவில் அமைந்திருக்கின்றது.
    ஆஸ்ரம முகவரி:
    Anandashram,
    Anandashram P.O., Kanhangad 671531
    Dist. Kasaragod, Kerala, India.
    Tel: (0467) 2203036/ 2209477
    Email: anandashram@gmail.com

    ராம நாம ஒரு முழு பாடல்


    https://www.youtube.com/watch?v=QQJAfqG1SBk
Working...
X