Announcement

Collapse
No announcement yet.

Lord Ayyapa's Muthal thalam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Lord Ayyapa's Muthal thalam

    ஐயப்பனின் முதல் தலம்

    மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, பிரம்மாந்திரம் என்ற 7 வகை நிலையைப் பற்றி பலரும் அறிந்திருக்க நியாயமில்லை.

    ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால் அவனது மூலாதாரம்... கால்கள்.. சுவாதிஷ்டானம் இடுப்பு, மணிபூரகம் - வயிறு, அனாகதம்- பிறப்புறுப்பு, விசுத்தி - மனம், ஆக்ஞை - பிடரி, பிரம்மாந்திரம் - தலை ஆக 7 வகை நிலையில் மனிதனின் உடலமைப்பு உள்ளது.

    சிவனை எடுத்தக் கொண்டால் அவரது மூலாதாரம் - திருவாரூர். சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் - திருவண்ணாமலை, அனாகதம் - சிதம்பரம், விசுத்தி - காளத்தி, ஆக்ஞை - காசி, பிரம்மாந்திரம் - கைலாசம்.

    அதுபோல தர்மசாஸ்தா எனப்படும் ஐயப்பனுக்கு மூலாதாரம் - பாபநாசம் சொரிமுத்தையன் கோயில். சுவாதிஷ்டானம் - அச்சன் கோயில், மணிபூரகம் - ஆரியங்காவு, அனாகதம் - குளத்துப்புழை, விசுத்தி - பந்தளம், ஆக்ஞை - சபரிமலை, பிரம்மாந்திரம் - காந்தமலை. இந்த வகையில் சபரிமலை சாஸ்தாவுக்கு முதல் முதலில் கோயில் தோன்றியதாக கூறப்படுவது பாபாநசத்திலுள்ள சொரிமுத்தையனார் கோயில் ஆகும்.

    தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

    இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. பொதிகை மலைக்காடுகளில், வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.

    Source: dinamalar



    ( This post is for sharing knowledge only, no intention to violate any copy rights)
Working...
X