Announcement

Collapse
No announcement yet.

Rose garland - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rose garland - Periyavaa

    Rose garland - Periyavaa


    ஒரு சமயம் மகாபெரியவா தஞ்சாவூர்ல முகாமிட்டிருந்தார். வழக்கம்போல ஆசார்யாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கறுதுக்காக, சுத்துவட்டாரத்துலஇருந்தெல்லாம் தெனமும் நெறைய பக்தர்கள்
    வந்துண்டு இருந்தா.அங்கே தஞ்சாவூர்ல, பங்காரு காமாட்சியம்மனுக்குஒரு கோயில் உண்டு.அந்தக் கோயிலோட ட்ரஸ்டி.நடராஜ சாஸ்திரிகள் மகாபெரியவாளோட பக்தர்.
    ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல மகாபெரியவாளுக்கு பன்னீர்ரோஜா மாலை வாங்கி சமர்ப்பிக்கணும்னு அவருக்குத்தோணியிருக்கு.இப்போ மகாபெரியவாளே தஞ்சாவூருக்குவந்திருக்கறதால தன்னோட எண்ணத்தை
    ஈடேற்றிக்கலாம்னு நினைச்சார். அதனால,ஒருகடையில்,புது ரோஜாப்பூவுல தொடுத்தமாலை ஒண்ணு மறுநாள் வேணும்னு ஆர்டர் குடுத்தார்.மறுநாள் காலங்கார்த்தால பூக்கடைக்குப் போனார்.
    'தேன்மணம் மாறாத ரோஜா மாலையை வாங்கிண்டுபோய்பெரியவாகிட்டே சமர்ப்பிக்கணும்.அதை அவர் சூடிக்கறதைகண்ணாரக் கண்டு நெஞ்சார தரிசிக்கணும்!' மனசுக்குள்ளே
    நினைச்சுண்டே போனவருக்கு,"இன்னும் ரோஜாப் பூமார்க்கெட்டுக்கே வரலை சார்,வந்ததும் மொதவேலையாமாலைக்கட்டித் தந்துடறேன்!" கடைக்காரரோட பதில்கொஞ்சம் ஏமாத்தமா இருந்தது.
    வெயிட் பண்ணிய அவர், பூ வந்ததும் ஒவ்வொரு பூவாபார்த்துப் பார்த்து எடுத்து அழகான மாலையா கட்டிக்குடுத்தார் கடைக்காரர். தான் நினைச்ச மாதிரியேமாலை அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம் பக்தருக்கு.
    மாலையை வாங்கிண்டு வேகவேகமா பரமாசார்யாளைதரிசிக்கப் புறப்பட்டார்.மகாபெரியவாகிட்டே மாலையை தரணும்னு ஆசை ஆசையா போனவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துண்டு இருந்தது.
    அவர் அங்கே போய்ச் சேர்ந்த சில நிமிஷம் முன்னாலதான்மகாபெரியவா தரிசன நேரம் முடிஞ்சு உள்ளே எழுந்துபோயிருந்தார்.
    "இன்னிக்கு மறுபடியும் எப்போ பெரியவா தரிசனம் தருவார்?தன்னோட ஏமாற்றத்தை மனசுல அழுத்திண்டு, அங்கேஇருந்த தொண்டர்கிட்டே கேட்டார்.
    "பெரியவாளோட தரிசன நேரம் இன்னிக்கு முடிஞ்சுடுத்து.இனிமே நாளைக்குத்தான்!" சொன்னார்,தொண்டர்.
    'வாடாத மாலையை மகாபெரியவாளுக்குத் தரணும்னுநினைச்சுண்டு வந்தா,இப்படி ஆயிடுத்தே'ன்னு மனசுவாடிப் போயிடுத்து அவருக்கு.அப்படியே சோர்ந்த முகத்தோட வீட்டுக்குப் போனார்.என்ன
    நடந்ததுங்கறதை ஒய்ஃப்கிட்டே வருத்தமா சொன்னார்."இதுக்குப்போய் மன சங்கடப்படலாமோ...நம்ம வீட்டுலஇருக்கற காமாட்சி படத்துக்கு அந்த மாலையைசாத்துங்கோ.அம்பாளுக்கு சாத்தினாலே ஆசார்யாளுக்கு
    சாத்தினதா ஆகிடும்!" ஆறுதலா சொன்னா மனைவி.'நான் மனசுல நினைச்சது ஆசார்யாளுக்குன்னுதான்.அம்பாளுக்குன்னு இல்லை. இது அவருக்குத்தான்.
    இன்னிக்கு தாமதமானதுக்கு ப்ராயச்சித்தமா, நாளைக்குஒரு வெள்ளிக் கிண்ணத்தை ஆசார்யாகிட்டேசமர்ப்பிக்கப்போறேன்" கொஞ்சம் அழுத்தமா சொன்னவர்அந்த அறையில இருந்த ஒரு ஆணியில மாலையை
    அப்படியே மாட்டிவைச்சார்.மறுநாள் கார்த்தால ஆறுமணி இருக்கும்.அந்த ட்ரஸ்டியோடவீடு இருந்த ஏரியாவே பரபரப்பா இயங்க ஆரம்பிச்சுது.
    அதுக்கு காரணம், 'மகாபெரியவா இந்தத் தெருவுல இருக்கிறபிள்ளையார் கோயிலுக்கு தரிசனத்துக்கு இன்னும் கொஞ்சநேரத்துல வரப்போறார்!" அப்படின்னு மடத்து சிப்பந்தி
    ஒருத்தர் சொல்லிட்டுப் போன தகவல்தான்.எல்லாரும் அவசர அவசரமா பூர்ண கும்பம்,புஷ்பம்,ஆரத்தித்தாம்பாளம், பழங்கள் இப்படி முடிஞ்சதை தயார் பண்ணிவைச்சுண்டு மகாபெரியவாளை வரவேற்கத் தயாரானா.
    சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்துல அந்தப் பகுதிக்குவந்தார்,பரமாசார்யா. எப்பவும்போல வேகமான நடை.மளமளன்னு நடந்தவர், அந்த பக்தர் வீட்டு வாசலுக்குவந்ததும், என்னவோ நினைச்சுண்டவர் மாதிரி ஒரு விநாடி
    நின்னார். யாருமே எதிர்பார்க்காத வகையில சட்டுன்னுஉள்ளே நுழைஞ்சவர்,அங்கே ஆணியில் மாட்டியிருந்த ரோஜாமாலையை எடுத்தார்.இது என்னோடது,எனக்குத் தரேன்னு சொன்னது,அப்படின்னு
    உரிமையோட எடுத்துக்கற பாவைனல அந்த புஷ்ப ஆரத்தைஎடுத்து சூடிண்டார், மகாபெரியவா, வழக்கமா கொஞ்சநேரத்துலயே உதிர்ந்துடக் கூடியது பன்னீர் ரோஜா. ஆனா
    முதல்நாள் வாங்கின மாலை இன்னிக்குதான் பூத்த பூவுலதொடுத்த மாதிரி அப்படியே மலர்ந்து அழகா இருந்தது.ஒற்றை இதழ்கூட உதிரலை.நடக்கறதெல்லாம் கனவா? நிஜமான்னுகூட புரியலை
    பக்தருக்கு.கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்யம் நிறைஞ்சுவழிய அப்படியே கைகளைச் சேர்த்துக் கூப்பினார்."என்ன, சந்தோஷமா? எனக்குன்னுதானே வாங்கினே?
    நானே எடுத்துண்டுட்டேன்!" சொன்ன பெரியவா,"ஆமா எனக்குத் தரணும்னு வெள்ளிக் கிண்ணம் ஒண்ணைஎடுத்து வைச்சியே, அது எங்கே?" கேட்க, ஆச்சர்யத்தின்
    உச்சத்துக்கே போனார் அந்த பக்தர்.சட்டுன்னு பூஜை அறைக்குப் போனவர்,அங்கே தயாரஎடுத்து வைச்சிருந்த வெள்ளிக் கிண்ணத்தைக் கொண்டுவந்து மகாபெரியவாகிட்டே சமர்ப்பிச்சார்.
    புது மணம் கமழ்ந்த ரோஜாமாலையைத் தரிச்சுண்டு,பூ மாதிரியே மென்மையான புன்னகையோட அங்கேர்ந்துபுறப்பட்டார், மகாபெரியவா.
    தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர்வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யாசூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம்தரணும்'னு பக்தர் சொன்னதை,பக்கத்துல இருந்து
    கேட்டவர் மாதிரி, தானே நினைவுபடுத்தி வாங்கிண்டதுபேராச்சரியம்.
Working...
X