எளிமை
ஏண்டாப்பா……பாலு சாப்ட்டியா? மௌலி சாப்டானா? அவன் சாப்ட்னா? இவன் சாப்டானா? இப்படி பெரியவா கேள்வி கேட்கிறச்சே பக்கத்துல இருக்கிற வேதபுரி மாமா ஆமாம் பெரியவா எல்லோரும் சாப்டாச்சு. நீங்க தான் இன்னும் பிக்ஷை எடுத்துக்கலைன்னு சொல்வாராம்.
" அதை விடுடா. எனக்கு பசியெல்லாம் எடுக்காது. எல்லோரும் சாப்டாச்சா?''
ஆமாம் பெரியவா எல்லோரும் சாப்டாச்சு.
எல்லோரும் சாப்டாச்சு சரி. ஆனா நம்மூர்ல எத்தனையோ ஆயிரக்கணக்கான கோவில் இருக்கு. ஆனா, அந்தக் கோவில்ல இருக்கற அர்ச்சகா எல்லாரும் மூணு வேளை நிம்மதியா சாப்டறாளோ? …. மதுரைவீரனுக்கு ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற கிராமத்துப் பூஜாரில்லாம் சந்தோஷமா இருக்காளோ? பெருமாளுக்கு பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார் குடும்பமெல்லாம் வயத்துக்கு மூணுவேளை சாப்ட்டுண்டு இருக்காளோ?… இதையெல்லாம் யாராவுது அப்பப்போ விஜாரிக்கறேளோ?.."
பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகையுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். எனவே எல்லாரும் "நிச்சயமாக தங்களுக்கு இதெல்லாம் தோன்றியதே இல்லை" என்ற உண்மையை ஒத்துக்கொள்வது போல், பேசாமல் முழித்தார்கள்.
"……ஏன் கேக்கறேன்னா….ஏதோ மூணு நாலு கோவில்ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோசிங்கோ.
இது தான் பெரியவா. அவரோட இடத்தை நிரப்ப யாராலும் முடியாது. இனி ஒருத்தர் பெரியவாளைப் போல பிறக்கவும் முடியாது
(கச்சிமூதூர் ட்ரஸ்ட் இதற்கு அப்புறம் தான் தொடங்கப்பட்டது)Courtesy :Halasya Sundaram Iyer