Announcement

Collapse
No announcement yet.

Age attending ceremony help-Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Age attending ceremony help-Periyavaa

    Age attending ceremony help-Periyavaa
    "பத்திரிகையை தொட்டுக்கூடப் பார்க்காமல்.."


    (ஏழை வெள்ளாளப் பெண்மணிக்கு உதவி செய்த சம்பவம்-- ஏழை - பாழைகளிடம் மிகவும் தோழமை பெரியவாளுக்கு)


    காஞ்சிபுரத்தில் பெரியவாள் தங்கியிருந்தார்கள். செல்வந்தர்களான தம்பதிகள் உயர்ந்த புடைவை, ரவிக்கைத் துண்டு சமர்ப்பித்து நமஸ்கரித்தார்கள். சற்றைக்கெல்லாம் ஒரு சிறுபெண் வந்து,இரண்டு வெள்ளிக் கொலுசுகளை அர்ப்பணித்தது.


    பெரியவாள், அவர்களுடனும் மற்றுமிருந்த பக்தர்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.


    அந்தச் சமயம், ஒரு வெள்ளாளப் பெண்மணி தரிசனத்துக்கு வந்தாள்.ஏழை என்பது தெள்ளெனப் புலனாயிற்று. ஒரு மஞ்சள் பத்திரிகையைத் தட்டில் வைத்து சமர்ப்பித்துவிட்டு ஆசீர்வாதம் வேண்டி நின்றாள்.


    அருகிலிருந்த சிஷ்யரிடம், புடைவை - ரவிக்கை - கொலுசுகளை அந்த வெள்ளாள அம்மையாரிடம் கொடுக்கச் சொன்னார்கள்.


    "அந்த அம்மாளின் பெண், வயதுக்கு வந்திருக்கு, மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை,சடங்கு செய்யணும். ஏழை, பணத்துக்கு என்ன செய்வா?" என்றார்கள் பெரியவா


    அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மஞ்சள் நீராட்டுப் பத்திரிகையைத் தான் சமர்ப்பித்திருந்தாள். அதைத் தொட்டுக்கூடப் பார்க்காமலே, 'அது இன்னது' என்று எப்படிச் சொன்னார்கள், பெரியவாள்.


    சென்னை, கணபதி அண்ட் கோ, அதிபர் விசுவநாதய்யர் பெரியவாள் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.('பணத்துக்கு என்ன செய்வா?')


    "பெரியவா உத்திரவு பண்ணினால், நான் ஐந்நூறு ரூபாய் கொடுக்கிறேன்...."


    பெரியவாள் ஜாடையால் சம்மதம் தெரிவித்தார்கள்.


    திருநீற்றுப் பிரசாதத்தையும்,பெரியவாள் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு போக வந்த அம்மாளுக்கு, ஆசிகள் புடைவையாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் கிடைத்தன.


    ஏழை - பாழைகளிடம் மிகவும் தோழமை பெரியவாளுக்கு
Working...
X