Announcement

Collapse
No announcement yet.

Temples of Sri Rama in Tamilnadu

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Temples of Sri Rama in Tamilnadu

    Temples of Sri Rama in Tamilnadu
    ராமன் எத்தனை ராமனடி 🧐 இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 21🙏ஶ்ரீ ராமனுக்கும் தமிழ் நாட்டுக்கும்
    என்ன சம்மந்தம் என்போரே 🤔 சம்மந்தம் இல்லாமலா
    இங்கு மட்டும் இத்தனை ராமர் கோவில்கள் ? 😇


    இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் :


    1. திருப்புல்லாணி தர்ப்பசயன ராமர்


    திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம்
    செய்யப்பட்ட இந்தத் திருப்புல்லாணி பாசுரம்.


    "வில்லால் இலங்கை மலங்கச் சரம் துரத்த
    வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
    எல்லாரும் என் தன்னை ஏசிலும், பேசிடினும்
    புல்லாணி யெம் பெருமான் பொய் கேட்டிருந்தேனே."


    2. சோழவந்தான் ஜனகநாராயணர்


    ஜனகவல்லித் தாயார் உடனுறை ஜனகநாராயணர்
    ஸத்குரு த்யாகராஜரின் ஈசமனோகரி ராக கீர்த்தனை
    வரிகள் : " ஸ்ரீ ஜானகி மனோகர ஸ்ரீ ராகவ ஹரி "


    3. புன்னை நல்லூர் கோதண்டராமர்


    தஞ்சை மன்னர் தனக்காகப் பிள்ளை பேற்றை
    அளித்த ராமபிரானுக்கு நன்றிக் கடனாக
    இக்கோயிலையும், தன் மனைவியின் சார்பில்
    நீடாமங்கலம் கோவிலையும் கட்டினது
    சரித்திரம் கூறும் வரலாறு.


    வீர ஆஞ்சநேயரின் சிந்தையில் எப்போதும்
    உறையும் ஸீதாராம தம்பதிகளை
    வாழி ஜானகி வாழியிராகவன்
    வாழி நான்மறை வாழியர் அந்தணர்
    வாழி நல்லறம் என்றுற வாழ்த்தினான்
    வாழி தோறும் புதிதுறும் கீர்த்தியான்
    என்று அனுமனோடு சேர்ந்து நாமும்
    நெஞ்சில் இருத்தி அனுபவிப்போம்.


    4. தஞ்சை ராஜவீதி விஜயகோதண்டராமர்


    விஜயகோதண்டராமர் தர்சனம் நமக்கு
    ஸ்ரீ தேசிகனின் ஜயஜய மஹாவீர, மஹாதீர தௌரேய........ராகவஸிம்ஹ என்ற ரகுவீர
    கத்யத்தை நினைவுபடுத்துகிறது.


    5. வடுவூர் கோதண்டராமர்


    வேதவிற்பன்னர்களுக்குத் தஞ்சை மன்னர்களால்
    ஓர் ஏகாதசி தினத்தன்று மான்யமாக இந்த தலம்
    வழங்கப்பட்டதால் இதற்கு ஏகாதசி க்ராமம் என்றும் பெயர்.
    பங்குனி மாதம் ஸ்ரீராமநவமி சேர ஒன்பது நாட்கள் இங்கு ப்ரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
    ஐந்தாம் நாள் உத்ஸவமாகக் காலை கண்ணாடிபல்லக்கும்,
    மாலை யானை வாஹனமும் நடைபெற்றதும் இரவில்
    ஸீதாராம திருக்கல்யாணம் நிகழ்வதைக் காண அநேக மக்கள் திரண்டு வருவது இன்றும் கண்கூடாகக் காணப்படும் உண்மை.


    6. தில்லைவிளாகம் வீர கோதண்டராமர்


    சினத்தினால் தென்னிலங்கைச் கோமானைச் செற்ற மனத்துக்கினியான் இந்த வீர கோதண்டராமனே
    என்று வியந்து ஆண்டாள் நாச்சியாரின் வாக்கை,
    தில்லை விளாகத்திலிருந்து பெறுவோம்.


    7. நீடாமங்கலம் சந்தானராமர்


    ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்களால் ஸந்தான
    ராமஸ்வாமினம் சகுண நிர்க்குண ஸ்வரூபம் பஜரே
    என்று ஹிந்தோள வஸந்த ராகக் கீர்த்தனையால்
    புகழ் அஞ்சலி செய்யப்பட்ட மூர்த்தி.


    8. காரைக்கால் ஸ்ரீராமர்


    ரங்கபுர விஹார ஜயகோதண்டராமாவதார ரகுவீர
    என்ற நாதஜோதி முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ப்ருந்தாவனசாரங்கராகக் கீர்த்தனை நம் செவியில்
    ஒலிப்பது போல் தோன்றுமிடம்.


    9. புது அக்ரஹாரம் பட்டாபிராமர்


    இந்த ராமபிரானை ஞானகுருவாக வரித்தவர்
    ஸ்ரீ ஸத்குரு தியாகராஜஸ்வாமிகள். இந்த
    ராமபிரானிடமே அவர் பக்தர்களின்
    இஷ்டநலன்களைப் பூர்ணமாக அளித்துக்
    காக்கும்படி வேண்டினராம்.


    ஸ்ரீ ராமநவமி தினத்தில் ஸத்குரு தியாகப்ருமத்தின்
    அழைப்பை ஏற்று வந்து ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்
    இந்தப் பட்டாபிராமனைக் கண்டு மகிழ்ந்து
    மாமவபட்டாபிராம என்ற மணிரங்கு கீர்த்தனையை
    இயற்றினாரோ என்று நினைக்கத் தோன்றும்.


    10. திருப்புள்ள பூதங்குடி வல்வில்லிராமர்


    வெற்பால் மாரிய பழுதாக்கி விறல் வாளரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐந்நான்கும் துணித்த வல்வில்லிராமனிடம்
    என்பது திருமங்கை ஆழ்வாரின் அனுபவம்.


    11. திருவெள்ளியங்குடி கோலவில்லிராமர்


    காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடலரக்கர்த் சேனை
    கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில்லிராமன்
    தன் கோவில் - திருமங்கையாழ்வாரின் மங்களாசாஸனம்.


    12. கும்பகோணம் ராமஸ்வாமி


    அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்தப்
    பரதன் வெண்குடைகவிக்க இருவரும் கவரி வீச
    விரை செறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
    மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி
    கம்பராமாயணப்பாடல் நினைவில்.


    13. முடிகொண்டான் கோதண்டராமர்


    முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
    அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
    படியில் குணத்துப் பரத தம்பிக்கு அன்று
    அடிநிலை ஈந்தானைப்பாடிப் பற அயோத்தியர்
    கோமனைப்பாடிப்பற
    - பெரியாழ்வாரின் பொருத்தமான பாசுரம்.


    14. ?


    15. மதுராந்தகம் ஏரிகாத்த ராமர்


    குரக்கினப்படைகொரு குரைகடலின் மீதுபோய்
    அரக்கர் அங்கு அரங்க, வெஞ்சரம் துரந்த ஆதிநீ
    இரக்கமண் கொடுத்தவதற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
    பரக்கவைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே
    - திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தப் பாசுரம்


    16. பொன் விளைந்த களத்தூர் தர்ப்பசயனர்


    '' மலையதனால் அணைகட்டி மதில் இலங்கை அழித்தவனே ! அலை கடலைக் கடந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே !'' என்பவை தர்ப்பசயனசேதுராமரைக் கண்டதும் சிந்தையில் எழும்
    குலசேகராழ்வாரின் அமுதமொழிகள்


    17. பொன் பதர்க் கூட்டம் சதுர்புஜராமர்


    பரகால நாயகி என்ற நாயகி பாவத்தில்
    பரமனை அனுபவிக்கும் திருமங்கை ஆழ்வார்
    '' பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி ''
    என்று ராமபிரான் சக்ரம் ஏந்திய கோலத்தை
    அனுபவித்துள்ளார்.


    '' சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் ''
    என்று ஆண்டாள் நாச்சியார் அனுபவித்ததும்
    இந்த ராமபிரானாகவே இருக்கலாம்.


    '' எங்கள் செய்தவத்தின் ராமன் என வந்தோன்
    சங்கினொரு சக்கர முடைத் தனிமுதற்பேர்
    அங்கணரசாதலினவ் வல்லி மலர் புல்லும்
    நங்கையிவளாமென வசிட்டன் மகிழ்வுற்றான் ''


    ராமரைச் சதுர்புஜராகவும், ஸீதையை
    அல்லி மலர்ப்பாவையாகவும் வசிஷ்டர்
    கண்டதாகக் கம்பர் பெருமான்
    சுவைபட இயம்பி மகிழ்கிறார்.


    18. திருப்புட்குழி விஜயராகவர்


    கல்வெட்டுக்களில்
    '' திருப்புட்குழி நாயனார் கோவில் '' என்றும்
    '' போரேற்றும் பெருமாள் கோவில்' என்றும்
    இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
    திருமங்கை ஆழ்வாரால் இரண்டே பாசுரங்ளில்
    இந்த திவ்யதேசம் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளது.


    '' தர்மோ விக்ரஹவாந் அதர்மவிரதம் தந்வீ ஸ தந்வீதந :''


    என்ற தேசிகரின் வாக்குப்படி விஜயராகவ ராமபிரான்
    அதர்மங்களை விலக்கி நம்மைக் காப்பாற்றி அருள்வார்.


    19. திருநின்றவூர் ஏரி காத்த ராமர்


    நின்ற வண்ணத்தில் இந்த ராமபிரான் தைலத் திருகாப்புத் திருமேனியாகத் திகழ்வது விசேஷமாக உள்ளது.
    பெரும்பாலும் தைலகாப்பு திருமேனி கிடந்த வண்ணருக்கே.


    '' காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
    ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
    நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
    ஆராவமுதனைப் பாடிப்பற ! அயோத்தியர்
    வேந்தனைப்பாடிப் பற !''
    -பெரியாழ்வாரின் '' உந்திப் பறத்தல் '' பாசுரம் நினைவுறும்.
    எல்லையற்ற கடலினையே அடைத்து இலங்கை சென்று பிராட்டியைச் சிறைமீட்ட ராமபிரானுக்கு இந்த ஏரியைக் கரைக்குள் அடைத்துக் காத்தல் என்ன கடினமான தொழிலா என்ன? இந்த ஏரி காத்த ராமனை மழையில்லாத நாட்களில் வேண்டினால் மழை பெய்யும்;அதிகமழை பெய்து துன்பங்கள் ஏற்படும் போது, அவை பகலவனைக் கண்டபனிபோல் விலகி ஓடும் என்பது இவ்வாலயம் உணர்த்தும் உண்மை.


    20. அயோத்தியா பட்டணம் ஸ்ரீராமர்


    '' அங்கண் நெடுமதில் புடை சூழ் அயோத்தி என்னும்
    அணிநகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி ''
    - குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி


    21. சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர்


    ''மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாப்தயே
    சக்கரவர்த்தி தனுஜாய ஸார்வபௌமாய மங்களம்''.


    அமளி நிறைந்த சென்னை மாநகரில், அமைதியே
    உருவாக அமைந்துள்ளது இந்தக் கோவில்.


    திருப்புல்லாணி கடற்கரையில் தொடங்கிய
    ராமபிரான் திருத்தலயாத்திரை கடற்கரைத்தலமான
    சென்னையில் நிறைவு பெறுகின்றது.
    -------------
    ஆதாரம் : (ஒவ்வொரு கோவிலையும் விரிவாகக் காண)
    -------------
    http://www.kamakoti.org/tamil/templ.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-1.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-2.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-3.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-4.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-5.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-6.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-7.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-8.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-9.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-10.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-11.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-12.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-13.htm
    14 ?
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-15.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-16.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-17.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-18.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-19.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-20.htm
    http://www.kamakoti.org/tamil/TEMPLE-21.htm
Working...
X