Announcement

Collapse
No announcement yet.

Story of Kaliyar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Story of Kaliyar

    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை கு.கருப்பசாமி.*
    🍁 *கலியரும், இக்- கலியும்!*🍁
    தொண்டை நாட்டில் புகழோடு திருக்கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் இருப்பிடங்களில் *திருவொற்ளியூர்* என்ற தலமும் ஒன்று.


    நாயன்மார்கள் காலத்தில் இத்தலத்தில் மலர்ச்சோலைகளாக அமைந்திருக்க, மேகக் கூட்டங்கள், மலர்ச்சோலைகளின் மீது தழுவி விளையாடியது.


    தேர் இழுக்கும் வண்ணம் பெரிய பெரிய வீதியை அமைத்திருந்தனர்.


    இந்த வீதிகளின் இருபுறங்களிலும், மணி மாளிகை மாடங்களாக அழகுற கட்டியிருந்தனர்.


    மதில்களும் மதிலுக்குமேல் உயர்ந்த விருட்சங்களும் உயர்ந்திருக்க, இதனை மாளிகையிலிருந்து பார்ப்போர்க்கு பசுஞ்சோலைக்குள் இருப்பதுபோல இருக்கும்.


    இவ்வூரைத் தாண்டி இருந்த கடலும், பயிர்த் தோட்டங்களும் அழகுற இருந்தன.


    ஆங்காங்கே இருக்கும் மண்டபங்களில், பதிகங்கள் இசையுடன் இடைவெளி இல்லாமல், ஓதப்படுவதை செவிமடுத்துக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.


    அதோடு சில மாடங்களில், அன்னநடை மாதர்களால், ஆடல்களும், இடைவிடாமல் நடந்த வண்ணமிருக்கும்.


    மக்கள், செல்வதும் வருவது மாய் இருக்கும் வீதிகள் கூட விழாக்கோலம் பூண்ட அமைப்புடனே எப்போதும் காட்சியளிக்கும்.


    திருமடங்களில், எப்போதும் செந்நெல் அரிசியால் சமைத்து, வருவோர்க்கு அன்னமளிக்க காத்திருப்பர்.


    அமர்ந்து அன்னம் எடுத்துக் கொள்வோர் அனைவருக்கும்...., அங்கிருக்கும் குருக்கத்தி மரம், புன்னை மரம், குங்கும மரம், சண்பக மரம், செருந்தி மரம், மேலும் முழு மணம் கமழத் தத்தம் மலர்களின் வாசனைகளையும் நுகர்ந்து கொண்டே உண்பர்.


    விருட்சங்களில் மோதிய மேகங்கள், அலையெழும்ப கடலின் முழக்கம், ஓதுவார்கள் ஓதிய வேத கோஷம், மாதர் ஆட, அதனால் வரும் களிப்புக் கோஷங்களும், இவைகளெல்லாம் இத்தலத்தில் ஒருசேர கூட்டணி கொண்டு இருந்து வந்தது.


    இத்தகைய வளத்தன்மை கொண்ட திருவொற்றியூரில், எண்ணெய் ஆட்டிப் பிழிந்து செக்குத் தொழில் செய்யும் மரபினையுடையோர்கள் வாழ்ந்து வந்தனர்.


    இம்மரபுடையோர் வாழ்ந்து வந்த தெருவின் பெயர் *சக்கரபாடி தெரு* எனவாகும்.


    இவ்வீதியில் செக்காட்டும் குலத்தார் முன்னைத்தவப் பயனால், இங்கு *கலியர்* என்பவர் அவதரித்தார்.


    இவர் சைவ சமயத்தில் மிக மிக விருப்பு கொண்டவர். சிவபெருமானுக்கும் திருத்தொண்டு செய்து வருவதை வெறிய நெறியாகத் கொண்டவர்.


    தன்னிடமிருந்த அளவற்ற செல்வத்தைக் கொண்டு, திருவொற்றியூரில், ஈசனின் திருக்கோயிலின் உள்புறமும், வெளிப்புறமும், இரவிலும் பகலிலும் தூய எண்ணெய் இட்டு, திருவிளக்கு எரியும் திருப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்.


    எவ்வளளோ நாட்கள், எத்தனையோ விளக்குகள், இவ்வளவுனே இல்லாத தூய எண்ணெய்கள், என விளக்கெரிப்பு செய்து வந்த உழைப்பை, எண்ணி மகிழ்ந்த ஈசன், கலியனாரின் மெய்த்தொண்டை உலகிற்கு எடுத்துக்காட்ட, சிவபெருமான் எண்ணம் கொண்டார்.


    சிவபெருமானின் எண்ணத்தால் விளைந்த சோதனையில், கலியனாரின் செல்வநிலை குறுகியது.


    இவரது இருவினைகளும், சிவபுண்ணியத்தால் அகழ்ந்தொழிந்தன என்றுதான் கூற வேண்டும். செல்வ வளமும் இற்றுப் போனது.


    இருந்த செல்வம் இல்லாது போயினும் அதைப்பற்றி கலியர் கவலை கொள்ளவில்லை. கோயிலுக்கு விளக்கேற்றும் பணி தவறிவிடுமோ என்றுதான் பயந்தார்.


    ஆயினும், விளக்கெரிக்கும் பணி தவறிவிடக்கூடாது என்பதற்காக, இவ்வூரில் தமது மரபில் உள்ள செல்வ வளத்துடனிருந்தவர்களை நாடிச் சென்று பார்த்தார்.


    அவர்களிடம், எண்ணெய்களை அளந்து பெற்று, அதை வீடுகளுக்குச் சென்று விற்றுக் கொடுத்து, அதிலிருந்த தனத்தைக் கொண்டு, விளக்கெரித்து வந்தார்.


    ஏதொரு காரணமாய், கலியரின் மரபிலுள்ள எண்ணெய் வியாபாரிகள் எண்ணெய் கொடுக்க மறுத்தனர்.


    இதனால், வேறு உபாயத்தைக் கையாளலாமென்று நடந்து போகையில், செக்காட்டி எண்ணெய் பிழியும் இடத்திற்கு வந்தார்.


    அங்கு செக்கு மாட்டைச் செலுத்தி, மாலையில் கூலியை வாங்கிக் கொண்டு, அந்தக் கூலிக்கும் எண்ணெயைப் பெற்றுக் கொண்டு, திருக்கோயில் சென்று விளக்கெரித்தார்.


    இச்செயல் கொஞ்ச காலத்திற்குத்தான் ஒத்தாதனது. நாளடைவில் செக்காட்டி எண்ணெய் பிழியும் தொழில் பெருகிப் போக, கலியனார் கூலி பெறும் வேலையும் நின்று போனது.


    இனியேனும் கூலிவேலை அரிது என கருதி மனக்கவலையோடு இருந்தார்.


    அப்போது கலயரின் துணைவியார் கலயரிடம்....


    ஏன் கவலையோடு இருக்கிறீர்கள். கூலி வேலை இல்லையென்றால் என்ன?, நம்ம வீட்டை விற்று, எண்ணெய் வாங்கி விளக்கெரிக்கலாமே! என்றாள் அந்த உத்தமி.


    வீட்டை விற்றார் எண்ணெய்களை வாங்கி வைத்து தினத்துக்கும் ஆலயம் சென்று விளக்கெரித்து வந்தார்.


    வீடு விற்ற காசு எவ்வளவு நாளைக்கு இருக்கும்!, அதுவும் நாயனார் வாழ்ந்த காலத்தில் நில புலன்களுக்கு பெரிய விலை ஏதுமில்லை.


    வீடு விற்ற பணம், கூடிய விரைவில் அதுவும் தீர்ந்து போனது.


    இப்போது கலியரிடம் ஒரு பொருளும் இல்லை. வேலையும் கிடைக்கவில்லை. நேற்று வரை திருக்கோயில்களுக்கு தடைபடாமல் விளக்கெரித்து விட்டோம்.


    இன்று!, இன்று..என்ன செய்வது....என்ன...செய்வது, எண்ணெய் எப்படி வாங்குவது?, விளக்கு எப்படி எரிப்பது? என யோசித்து மனைவியின் பக்கம் திரும்பி அவளிடம்...........


    உன்னை விற்று பணம் பெற்று எண்ணெய் வாங்கப் போகிறேன். நீ என்ன சொல்கிறாய்.


    உங்கள் விருப்பம். நான் தடையேதும் செய்யப் போவதில்லை என்றாள்.


    மகிழ்ச்சியோடு மனைவியாரை அழைத்துப் போனார்.


    திருவொற்றியூர் தெருவெங்கும் கூவிக் கேட்டார். கலயரின் மனைவியாரை பொருள் கொடுத்து யாரும் வாங்கிட முன்வரவில்லை.


    இதனால் பெரும் தளர்ச்சியுற்றார் கலியர். வேறெதாலேயும் வழியொன்றும் இல்லாது போக, மனைவியுடன் திருக்கோயில் சென்றார்.


    தம்மை அடிமை கொண்டு, தமது திருப்பணியை ஏற்றுது மற்றும் சிவபெருமானின் திருக்கோயிலுக்குள்ளே அழகு நிறைந்து விளக்கேற்றும் நேரம் அது!.


    இன்று *மணி விளக்கு ஏற்றும் பணி நின்று விடுமானால், நான் உயிர் இழப்பதே சரி!*, என்று துணிந்தார்.


    அத்துணிவோடு, கலயரும் அவர்தம் மனைவியாரும், அகல் விளக்குகளையெல்லாம் வஸ்திரம் கொண்டு துடைத்து சுத்தம் செய்தார்கள்.


    திண்ணை முகப்பில் அகல்களையெல்லாம் வரிசையாக வைத்து அழகு செய்தார்கள். அதில் எண்ணெய் நிரப்பப்படாமல் இருந்தது.


    பஞ்சுப் பட்டையைத் திரட்டி திரித்து திரியாக்கி, அத்தனை அகல்களிலும், தலை நீட்டி நிறுத்தி வைத்தார்கள்.


    ஒருநாளும் விளக்கெரியா நாளை நான் காணேன்! இதோ, குருதி இதனின்று விளக்கெரியட்டும் எனக்கூறி,.......


    அருகேயிருந்த ஒரு கருவியை எடுத்து, தமது கழுத்தை அறிந்தார். குருதி வெளிப்பட்டது.


    அப்போது பெருங்கருணையுடன், கலயர் முன் சிவபெருமான் தோன்றி, கழுத்தை அறுக்கும் கையைப் பிடித்தழுத்தி தடுத்து நிறுத்தினார்.


    மழவிடைமேல் எழுந்தருளிய வண்ணம் காட்சி கொடுத்தார்.


    கலியரின் கழுத்தில் பட்ட ஊறு நீங்கி ஒளி பெற்ற மேனியுடன், கலயரின் திருக்கரங்கள், மழவிடைமேல் காட்சியினை நோக்கி கைகளை குவித்தார்.


    தமது சிவலோகத்தில் சிறப்புற்றிருக்கும்படி திருவருள் புரிந்தார்.


    கலியநாயனார் அடியார்க்கு அடியோம்!
Working...
X