Karuvadaam,appalaam -Periyavaa
பெரியவாளிடம் அந்த ஏழைப் பாட்டிக்கு அப்படியொரு பக்தி. பரம ஏழையான பாட்டி பெரியவாளிடம் அப்படியொரு பக்தி கொண்டவள்.
"இப்போ… எங்க ஜாகை?…."
"பட்டணத்துக்கு [மெட்ராஸ்] வந்துட்டேன். அப்பளாம், வடாம் பண்ணி ஏதோ… வித்து பொழைப்பு நடந்துண்டிருக்கு பெரியவா…
""பாட்டிக்கு ரெண்டு பொடவை, கம்பிளி போர்வை, மெட்ராஸ் போறதுக்கான பஸ் சார்ஜ் எல்லாம் குடுத்துடு"
பாரிஷதரிடம் உத்தரவிட்டார். எல்லாம் வந்ததும், பாட்டி பக்கம் நகர்த்தினார். பாட்டிக்கு பரம ஸந்தோஷம்!
"பெரியவா….. ஒரு மடிஸஞ்சி கெடைச்சா தேவலாமா இருக்கும்.."
பெரியவாளின் கண்ஜாடையில், மடிஸஞ்சி எங்கிருந்தோ தேடி எடுக்கப்பட்டு, பாட்டிக்கு தரப்பட்டது.
"பெரியவா கையால…. ஒரு ருத்ராக்ஷ மாலை…"
பாரிஷதர் கொண்டுவந்த ருத்ராக்ஷ மாலையை, தன் திருக்கரத்தால் தொட்டு ஆஶிர்வதித்து, அழகான புன்னகையுடன் பாட்டியிடம் தந்தார்.
"அப்பனே! ஜபமாலை தந்த என் ஸத்குருநாதா!.."
பாட்டி அமோஹமான ஆனந்தத்துடன், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள்.
ஆனாலும், இன்னும் ஏதோ…… ஒன்று பாக்கியிருக்கிறதே!
கொஞ்ச தூரம் சென்றவள், மறுபடியும் பெரியவாளிடம் வந்து நின்றாள்.
இம்முறை கேட்பதற்கில்லை! பெரியவாளுக்கு கொடுப்பதற்காக வந்தாள்…
அவரிடமிருந்து எத்தனைதான் பெற்றுக் கொண்டாலும், ஆஹார நியமத்தின் ஆதர்ஶ புருஷனுக்காக, அன்பின் மிகுதியால், தான்… பண்ணிக்கொண்டு வந்ததை தருவதில் உள்ள ஆனந்தம், பாட்டிக்கு கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருந்தது.
அப்போதெல்லாம் பெரியவா ஓரளவு அன்னபிக்ஷை ஏற்றுக் கொண்டிருந்த காலம்.
பாட்டிக்கோ, பெரியவாளுக்கு எவ்வளவு பண்ணினாலும் தகும், ஆனால் தனக்கு பணத்தால் எதுவும் பண்ண முடியாவிட்டாலும், அப்பளம், வடாம் பெரியவாளுக்காக மடியாக பண்ணமுடியும் என்பதால், பக்தி ஶ்ரத்தையோடு நிறைய அப்பளாமும், வடாம் சில தினுஸும், குழம்புக் கருவடாமும் பண்ணி எடுத்து வந்தாள்.
அவள் கையில் பெரிய ஸம்படத்தை பார்த்துமே சிரித்துக் கொண்டே கேட்டார்…
"என்ன கொணுந்திருக்க..?"….
"பெரியவா…. என்னமோ ஒரு ஆசை! பெரியவாளுக்குன்னு மடி மடியா… அப்பளாமும், வடாமும், கொஞ்சம் கொழம்பு கருடாமும் எடுத்துண்டு வந்திருக்கேன்… ஏத்துண்டு அனுக்ரஹம் பண்ணணும்…"
கனிவுமயமாக அவளைப் பார்த்தார்….
"நா… ஒன்னோட அப்பளாம் கருடாத்தை அப்டியே ஸ்வீகரிச்சுண்டுட்டேன்! ஸந்தோஷந்தானே?"
"எனக்கு வேற என்ன வேணும்?..பகவானே!."
பாட்டியின் கண்கள் ஆறாக பெருக்கியது.
"இப்போ…நீ, எனக்காக இன்னோரு கார்யம் பண்ணு…."
பாட்டி குஷியாகிவிட்டாள்!
"லோகம் நன்னா இருக்கணும்-னா… வேதம் இருந்துண்டே இருக்கணும். அப்டி இருக்க பண்றதுக்காகதான் என்னால ஆனதெல்…லாத்தையும் பண்ணிண்டிருக்கேன். கஷ்டப்பட்டு ஆளை சேத்து… அங்கங்க வேத பாடஶாலையெல்லாம் நஸிச்சு போகாம காப்பாத்தி குடுக்கறதுக்கு முயற்சி பண்ணிண்டிருக்கேன்…….. "
கொஞ்ச நேர மௌனத்துக்குப் பின்….
"……..வேற என்னல்லாமோ படிப்பு இருக்கு.! எந்த படிப்பு படிச்சு எந்த தொழிலுக்கு போனாலும், கை நெறைய்ய ஸம்பளம்-னு இருக்கற இந்த நாள்லயும்… என் வார்த்தையை கேட்டுண்டு செல தாயார் தகப்பனார்கள்…. பசங்களை பாடஶாலைக்கு அனுப்பிண்டிருக்கா! என்னையே நம்பிண்டு… கொழந்தேள, அப்டியே…….ஒப்பு குடுத்திருக்கா!……
…..வரப்போற காலத்லயும், வேதம் போய்டாம, கொஞ்சமாவது ரக்ஷிச்சு கொடுக்க போற அந்த கொழந்தேள்தான் எனக்கு உஸுர் !………
….ஆகைனால, நீ என்ன பண்றேன்னா…..சின்ன காஞ்சீபுரத்ல, மடத்து பாடஶாலை இருக்கு. அங்க, ஸுந்தரம்-ன்னு ஸமையலைப் பாத்துக்கறவன் இருக்கான். எனக்காக நீ பண்ணிண்டு வந்த, இந்த அப்பளம், கருடாத்தை அவன்ட்ட குடுத்து, கொழந்தேளுக்கு வறுத்து போட சொல்லு……. "
"அப்டியே செஞ்சுடறேன் பெரியவா….இப்போவே போறேன்…."
"…..நா… சொன்னேன்னு சொல்லு. பாவம்! அதுகள்… அப்பளாம், கருடாத்தையெல்லாம்…. பாத்தே எத்தனையோ காலமாயிருக்கும்! அதனால ஸந்தோஷமா ஸாப்டு-ங்கள்! அதுவே எனக்கு பரம ஸந்தோஷம்….! நம்மள நம்பிண்டு பெத்தவா….அதுகளை அனுப்பினதுக்கு, பதிலா…. நாமும் ஒண்ணு பண்ணினோம்-ங்கற ஸந்தோஷம்"
பெரியவாளின் திவ்யஶரீரதிற்காக கொண்டு வந்த அப்பளாம், வடாம் எல்லாம், அவரது உயிராக உள்ள வேதம் பயிலும் சிறுவர்களின் உதரத்துக்குள் செல்வதில், பாட்டிக்கும் ரொம்ப ஸந்தோஷம்.
ஸாதாரண லோகாயத அம்மாக்களே, அவர்களது குழந்தைக்கு யாராவது ஏதாவது உஸத்தியாக, பிடித்ததாகச் செய்தால், குழந்தைகளை விட, அம்மாக்கள்தான் அதிக ஸந்தோஷமடைவார்கள்.
இவளோ…..வேதஜனனி இல்லையா? வேதம் படிக்கும் குழந்தைகளை நன்றாக ரக்ஷிப்பதை விட, நம் வேதஜனனியை ஸந்தோஷப்படுத்த, வேறு ஸாதனை ஏதும் தேவையா என்ன?
Thanks to Varagooran Narayanan தாத்தா