Announcement

Collapse
No announcement yet.

My memory is poor - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • My memory is poor - Periyavaa

    "ஆமா... இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈச்வரனை ஞாபகம் இருக்க மாட்டேண்ரதே..."
    --------------------------------------------------------------------------------


    முதிய தம்பதிகளான ஒரு தாத்தாவும் பாட்டியும் பெரியவாளை தரிசிக்க வந்தனர்.


    அப்போது மஹாபெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே சாக்கில் அமர்ந்திருந்தார்.


    கைகூப்பிக்கொண்டு நின்றிருந்தார்கள் தம்பதியர் அவர் முன்பாக.


    பெரியவாள் கேட்டார்கள், "இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்காத்து வாசல்ல இருந்ததே... இன்னும் இருக்கோ?"


    முதியவர் பதிலளித்தார், "அமாம். இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருவது வருஷத்துக்கும் மேல இருக்கும். இப்போ பெரிசா வளந்து காச்சுண்டுருக்கு. தெருப்பசஙள் எல்லாரும் கல்லை வீசியெறிந்து வாதாம்பழத்தை பொறுக்கித் தின்றதுகள்."


    பெரியவா தொடர்ந்தார், "கூடத்துல ஒரு பத்தாயம் இருந்ததே...அதிலே கரையான் அறிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆகிருந்ததே".


    "அத அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லை கொட்டிவச்சுண்ருக்கோம்"


    "ஒரு செவப்பு பசுமாடு கன்னு போடறாமாதிரி இருந்துச்சே"


    "ஓ.. அது ஆறு கன்னுகள் போட்டுச்சு. சமீபத்துல தான் தவறிடுச்சு. நல்ல வம்சம். கன்றுகள்ளாம் ரொம்ப சௌக்யமாருக்கு.""


    "அந்த அய்யங்கார் கணக்குபிள்ள இருந்தாரே? திருனக்ஷத்த்ரம் எண்பதுக்கு மேல இருக்குமோ?"


    "சதாபிஷேகத்து ரெண்டு வருஷம் முன்னாலயே வைகுண்டம் போய்ட்டார்."


    "எட்டுகுடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கறதுண்டே... உங்க புத்ராள் யாராவது காவடி எடுக்கறாளா...?"


    பெரியவா க்ருபையாலே எட்டுகுடி முருகன் கைங்கர்யம் ரொம்ப நல்லா நடந்துண்ட்ருதுன்க்கு.."


    "வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதையம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள்லாம் அந்த அலமாரிலே இருந்ததே... யாராச்சும் படிக்கறாளா...?"


    "புஸ்தகங்கள் இருக்கு... ஆனா இப்பல்லாம் யாரும் படிக்கறதுல்லே."


    "ராமாயணம் பாராயணம் செஞ்சுண்ட்ருந்தியே... நடக்கறதோ...?"


    "கண் சரியா தெரியரதில்லே...ஒரு சர்க்கம் மாத்ரம் வாசிச்சுண்ட்ருக்கேண்"


    பக்கத்துல நின்னு கேட்டுண்ட்ருந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாளமுடியலை. கிராமத்துக்கு எவ்வளவோ வருஷம் முன்னாடி பெரியவா வந்திருந்தப்போ, இவாளாத்துக்கும் விஜயம் செய்து ஒரு மணி நேரம் தங்கியிருந்தார். அப்போது பாத்தது, கேட்டதுல்லாம் மனசுல பதிவாகியிருக்குமோ?


    பாட்டி சொன்னாள்... "பெரியவாளுக்கு இவ்ளோ ஞாபகசக்தியிருக்கே...?!!"


    பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை மாற்றிவிடுமாப்போல், ஒரு உயர்ந்த தத்துவத்தை சொல்லி, கேட்டுண்டுருந்தவாலையெல்லாம் வானத்துல பறக்கவிட்டார்.


    "ஆமா... இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈச்வரனை ஞாபகம் இருக்க மாட்டேண்ரதே..."


    மஹாபெரியவாளின் ஆதங்கமே இப்படி இருக்குமானால்.... நாமெல்லாம் எந்த மூலை..?


    கற்கண்டுக்கு இனிப்பைக் கூட்டவேண்டுமா என்ன...? பெரியவாளுக்கு ஈஸ்வரத்தைக் கூட்ட வேண்டுமா என்ன?


    (இது ஒரு மறு பதிவு )


    Source: மஹாபெரியவா தரிசன அனுபவங்கள்
    Narrator: ஸ்ரீமடம் பாலு மாமா
    Compiler: ஸ்ரீ கோதண்டராம சர்மா.
Working...
X