சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
*48*
*நெல்லை மாவட்ட சிவாலயத் தொடர்.*
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
*அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்.*
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
*இறைவன்:* அருள்மிகு திருமலைக்கு மார்பு வாயில்..
*தீர்த்தம்:* பூஞ்சுனை.
*தல விருட்சம்:* புளியமரம்.
*ஆகமம்:* காரண ஆகமம்.
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
*தல அருமை:*
திருமலைக்காளி கோயிலின் பூசாரியான பூவன் பட்டர் என்பவரின் கனவில் திருமலைமுருகன் தோன்றி........
"நான், அச்சன் கோயிலுக்குச் செல்லும் வழியில் கோட்டைத்திரடு என்ற இடத்தில் மூங்கில் புதருக்குள் இருப்பதாகவும், தானிருக்கும் மூங்கில் புதரை, கட்டெறும்புகள் ஊர்ந்து வழிகாட்டும் என கூறி மறைந்தார்.
மறுநாள் பூவன் பட்டர், பந்தள மகாராஜாவிடம் செய்தியாக தெரிவித்தார்.
சேரமன்னனான பந்தள மகாராஜாவும், பூவன் பட்டரும் கோட்டைத்திரட்டிற்கு வந்து கட்டெறும்புகள் ஊர்ந்து செல்வதை பின் தொடர்ந்து மூங்கில் புதரைக் கண்டுபிடித்தனர்.
மூங்கில் புதரை கிளர்த்திப் பார்க்க, உள்ளே முருகப் பெருமானை இருக்கக் கண்டனர்.
அப்போது உடனடியாக அப்பெருமானை வெளிக்கொணர்ந்து,அங்கிருந்த குன்றின் உச்சியில் ஸ்தாபகம் செய்தனர்.
முருகப் பெருமான் குன்றின் மீது எழுந்தருளி, சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன.
இங்கிருக்கும் திருமலைக்குமாரசுவாமியைத் தரிசிக்க ஐநூற்று நாற்பத்தாறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
*சிறப்பு:*
பேராசிரியர் கணபதிராமன் அவர்கள் ஆய்அண்டிரன் ஆண்ட மலையான கவிரமலை இதுவாகும்!
சிலப்பதிகாரத்தில் வரும் *நெடுவேள் குன்றம்* என்பதும் இம்மலையே!
கண்ணகியானவள் இக்குன்றைக் கடந்து சேரநாடு சென்றாள்.
அரிய இதை, ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் திருமலைக் கோயில் வரலாற்றை எழுதியிருக்கப்பெற்றிருக்கிறது.
அருணகிரியாரும் திருப்புகழில் இம்முருகனைப் பாடிப் பரவியுள்ளார்.
தண்டபாணி சுவாமிகள் முருகன் மீது பலப்பல பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.
கவிராச பண்டாரத்தையா எனும் புலவர்பெருமான் *திருமலை முருகன் பிள்ளைத்தமிழ், திருமலையில் அந்தாதி* போன்ற நூல்களாகப் பாடியுள்ளார்.
*திருமலை முருகன் குறவஞ்சி, திருமலை முருகன் நொண்டி நாடகம், திருமலை கறுப்பன் காதல்* போன்ற நூல்களும் இருக்கின்றன.
திருமலை முருகன் அந்தாதி, திருமலைக்குமாரசுவாமி அலங்கார பிரபந்தம், திருமணி மாலை, திருத்தாலாட்டு போன்ற நூல்களும் இம்முருகப் பெருமான் புகழ்பாடுகின்றன.
*தனிச்சிறப்பு:*
அருணகிரிப் பெருமான், கவிராசப் பண்டாரத்தையா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இப்பெருமானைப் பாடிப் பரவியுள்ளனர்.
அகத்தியர், கற்புக்கரசி கண்ணகி, சப்தகன்னியர் போன்றோர் இம்முருகனை வழிபட்டு வந்துள்ளனர்.
பந்தள மகாராஜா, சொக்கம்பட்டி குறுநில மன்னர் சிவனணைஞ்சாத் தேவர், பூவாத்தாள், சிவகாமி பரதேசியார் போன்றோர் அருளாளர்கள் இக்கோயில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
சிவகாமி பரதேசியார் நன்செய்,புன்செய் நிலங்களையும் தோப்புகளையும் இம்முருகப் பெருமானுக்குத் தானமாக வழங்கியுள்ளனர்.
*நாம் இவ்வாலயத்துக்குச் செல்ல நேரும் பொழுது, அவன் விசேஷ செலவினங்களுக்காகவாவது ஒரு சிறு அன்பளிப்புகள் காணிக்கையாக முருகப் பெருமான் ஆலய உண்டியலில் செலுத்துவோமாக*!
மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவில் 'ஓம்' என்ற வடிவம் கொண்ட உயரமான குன்று, நானூறு அடி உயரத்திற்கும் மேலானவை.
இத்திருத்தலத்தில் தீர்த்தமான *பூஞ்சுனை தீர்த்தம்* அகத்திய முனிவர் உருவாக்கியது.
அகத்தியர், தென்திசையையும் வடதிசையையும் சமப்படுத்த இங்குவந்த சமயத்தில், இந்த பூஞ்சுனையை உருவாக்கினார்.
அப்போது முதல் நாள்தோறும் ஒரு தாமரை மலர் இச்சுனையில் மலர்ந்து வரப்பெற்றன.
இதை இந்திராதி தேவர்களும், சப்த கன்னியரும் பறித்து முருகனுக்குச் சூட்டி, வழிபட்டு வந்த அற்புத தீர்த்தம் இது!.
*பூஜைகள்:*
இம்முருகப்பெருமானுக்கு தினந்தோறும் எட்டுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
திருவனந்தல், காலை 6.00 மணிக்கு,
உதயமார்த்தாண்டம், காலை 7.00 மணிக்கு,
சிறுகாலசந்தி, காலை 8.00 மணிக்கு,
காலசந்தி, காலை 9.00 மணிக்கு,
உச்சிக்காலம், நன்பகல் 12.00 மணிக்கு,
சாயரட்சை, மாலை 6.00 மணிக்கு,
அர்த்தசாமம், இரவு 8.00 மணிக்கு,
ஏகாந்தம், இரவு 8.15 மணிக்கு.
*திருவிழாக்கள்:*
ஐப்பசியில் கந்தசஷ்டி பத்து நாட்கள் திருவிழா.
கார்த்திகையில் கடைசித் திங்களின்போது தெப்பத்திருவிழா.
தை மாதம் தைப்பூசத்திருவிழா, பத்து நாட்கள் பிரமோற்சவம்.
மாசி மாதம் பத்து நாட்களாக மாசித் திருவிழா.
பங்குனி மாதத்தில் பங்குனிஉத்திரத் திருவிழா.
சித்திரை மாதத்தில் ஐந்து நாட்களாக வசந்தத் திருவிழா.
வைகாசி மாதத்தில் விசாகத் திருவிழா.
கடைசி வெள்ளிக்கிழமை தோறும், மாதாந்திர கார்த்திகை நட்சத்திரநாளிலும், தமிழ் மாதப் பிறப்பு நாளிலும், பக்தர்கள் இங்கு ஏராளமாய் வந்து வழிபடுகிறார்கள்.
*இருப்பிடம்:*
செங்கோட்டையிலிருந்து வடமேற்கில் ஆறு கி.மி தொலைவில் இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது.
செங்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து ஐந்து கி. மி தொலைவில் இருக்கிறது.
தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கிறது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மலை மேல் வாகனங்கள் சென்று வர தார்சாலை ரோடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
*முருகா சரணம்*
திருச்சிற்றம்பலம்.
நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புளியங்குடி.*
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*