Announcement

Collapse
No announcement yet.

Chaaya Someswarar temple, Hyderabad

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Chaaya Someswarar temple, Hyderabad

    நம் நாட்டு மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கபட்ட சில கோவில்களில் உள்ள மர்மங்களின் முடிச்சை இன்றும் அவிழ்க்க முடியாமல்,
    அண்டை நாட்டு விஞ்ஞானிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்…
    அந்த மர்மங்களில் ஒன்று தான், ஹைதராபாத்தில் உள்ள சாயா சோமேஸ்வரர் கோவில்..இந்த கோவிலில் பல அதிசயங்கள் காணபடுகிறது…
    கன்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஃ அமைப்பில் மூன்று கருவறைகள் உள்ளது.
    அந்த மூன்று கருவறைகளில் மூன்று விதமான மர்மங்கள் உள்ளது..
    முதல் கருவறை லிங்க கருவறை ,
    இங்குள்ள லிங்கத்திற்கு பின்னால் ஒரு தூணின் நிழல் காணப்படும்..
    நிழலில் என்ன அதிசயம் என்றால், காலைமுதல் மாலை வரை அந்த நிழல் அந்த இடத்தை விட்டு அசைவதில்லை..
    மர்மம் என்னவென்றால், இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவது இல்லை..
    பிரம்மா கருவறை இரண்டாவது கருவறை,
    இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவர் தன்னுடைய நான்கு நிழல்களை பார்க்க முடியும்.
    எப்படி ஒரு உருவத்திற்கு நான்கு நிழல்கள் உருவாகும் என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.
    லிங்க கருவறை இது மூன்றாவது கருவறை,
    இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவரது நிழல் எப்பொழுதும் அவருக்கு எதிர் திசையிலே விழும் அதிசயம்..
    நிழல் எப்படி எதிர் திசையிலேவிழும் என்பது ஆராயமுடியாத ஒன்றாகவே உள்ளது.
    கோவில் பெயர் காரணம்??
    சாயா என்றால் நிழல் என்று பொருள்படும்.. அதனால் தான் அக்காலத்திலே பொருளோடு தொடர்புடைய காரணபெயராக இந்தகோவிலிற்கு சாயா சோமேஸ்வரர் என்று பெயர் வைத்துள்ளனர்..
    அதனால் தான் நிழலோடு தொடர்புடைய பல மர்மம் இங்கு உள்ளது..
Working...
X