Announcement

Collapse
No announcement yet.

Kalikamba nayanar- 7- nayanmar stories

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kalikamba nayanar- 7- nayanmar stories

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(7) நாயனார் சரிதம்.*
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *கலிக்கம்ப நாயனார்*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    நடுநாடான மேற்கோடியில் *திருப்பெண்ணாகடம்* என்னும் வல்லமை பொருந்திய ஓர் ஊர் இருந்தன.


    அங்கு வணிகர் குலத்தில் *கலிக்கம்பர்* என்னும் பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.


    அவர் அதிதீத சீரிய சிவபக்தர் ஆவார்.


    திருத்தூங்கானை மாடம் என்ற திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவக்கொழுந்து நாதர் திருவடிகளுக்குத் திருத்தொண்டு புரிந்து வருபவர்.


    சிவனடிப் பற்றைத் தவிர, வேறு எந்தப் பற்றும் இல்லாதவர். காய்கறிகள், நெய், தயிர், பால், கனி வகைகள் முதலியவைகளைக் கொண்டு திருவமுது செய்வித்து, மற்றும் அடியார்களுக்கு வேண்டுவனவாகிய பிற நிதியங்கள் எல்லாவற்றையும் மகிழ்ந்து மகிழ்ந்து கொடுப்பார்.


    இப்படியாகக் கலிக்கம்பர் திருத்தொண்டு செய்து வரும் நாட்களில் ஒரு நாள் வழக்கம் போல் தமது திருமனையில் அமுது செய்ய வந்த திருத்தொண்டர்கள் அனைவரையும் விதி முறைப்படி திருவமுது செய்விக்கத் தொடங்கும் முன், அவ்வடியார்களின் பாதத் திருவடிகளை விளக்கத் தொடங்கினார்.


    அப்போது அவர் மனைவியார் அத்திருமனை முழுதும் விளக்கம் பெற விளக்கித் திருவமுதும், கறியமுதும் தூய தண்ணீரும் ஆகிய இவற்றுடனே உண்ணும் மற்றைய பொருள்களையும் செம்மை பெற அமைத்து விட்டு வந்து கரகத்திலே நீர் வார்க்கக் கணவனார் அடியார்களுடைய காலடிகளையெல்லாம் விளக்கி பாதபூஜை செய்யலானார்.


    அப்போது, முன்னாளில் தமக்குப் பணிவிடைக்காரராய் இருந்து ஏவற்பணியை வெறுத்துக் கோபித்துக் கொண்டு வெளியேறிய ஒருவர், சிவணடியார் வேடந்தாங்கி, அங்கு வந்திருக்கும் அடியார்களுடன் கூடி ஒருவர் பின்னால் ஒருவராக வந்தார்.


    கலிக்கம்பர் அவ்வடியார் பாதத்திருவடிகளையும் விளக்கத் தமது திருக்கரங்களால் பற்றினார்.


    அப்போது கலிக்கம்பர் மனைவியார், *இவர் முன் சமயம் நமது ஏவலைச் செய்யாது விட்டுச் சென்றவர்* எனச் சொல்லி கரகநீர் ஊற்றத் தாமதித்தாள்.


    அதைக் கண்டதும் கலிக்கம்பர் தம் மனைவியாரை ஏறெடுத்துப் பார்த்து *"இவள் இவ்வடியார் முன்பு இருந்த நிலையைக் குறித்து வெட்கித் திருவடி விளக்க நீர் ஊற்றாது தயங்குகிறாள் போலும்"* என மனதில் நினைத்துக் கொண்டு தம் மனைவியாரை மீண்டுமொரு முறை அவள் முகத்தைப் பார்க்காமல் வடிவாளை உருவியெடுத்து மனைவியாரின் கையிலிருந்த கரகத்தை வாங்கிக் கொண்டு, கரக நீர் வார்க்கத் தாமதித்த தம் மனைவியின் கையைத் துண்டாக வெட்டியெறிந்தார். பிறகு கரகத்தை எடுத்து அடியாரின் பாதங்களுக்குத் தாமே நீர் வார்த்து அவருடைய பாதங்களை விளக்கினார்.


    பின்னர் திருவமுது செய்வதற்கு வேண்டிய ஏனைய செயல்களையெல்லாம் கலிக்கம்பர் தாமே செய்து துலங்காத சிந்தையுடன் அத்தொண்டருக்குத் திருவமுது செய்வித்தார்.


    அதன் பின்னர் அளவற்ற பெருமை பெற்ற கலிக்கம்ப நாயனார், தமக்கேற்ற திருத்தொண்டின் வழியிலே வழுவாமல் நின்று சிவபெருமானுடைய திருவடி நீழலை அடைந்தார்.


    *கைதடிந்த வரி சிலையான் கலிக்கம்பன்....அடியார்க்கும் அடியேன்.*


    திருச்சிற்றம்பலம்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*


    Poiyyadimai allada pulavar-8- nayanamar stories
    Posted: 27 Jul 2017 10:27 PM PDT
    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை. கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    *(8) நாயனார் சரிதம்.*
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    *பொய்யடிமையல்லாத புலவர்.*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    பொய்யடிமையில்லாத புலவர் என்போர், நீலகண்டப் பெருமானின் திருமலரடிக்கே ஆளானவர்கள்.


    அதுவே மெய்யுணர்வின் பயன் என்று துணிந்து விளங்கியவர்கள்.


    இவர்கள் செய்யுட்களில் திகழும் சொற்களைப் பற்றிய தெளிவும், செம்மை தரும் பயனுடைய நூல்கள் பலவற்றைப் பயின்ற ஆய்வுணர்வும் உடையவர்கள்.


    அவைகளால் பெறும் மெய்யுணர்ச்சியின் பயன் சிவபெருமானின் மலரடிகளை வணங்குதலே என்ற கருத்தின் வழி நின்று தொண்டாற்றியவர்கள்.


    சிவபெருமானின் செயலையன்றி வேறெதையும் வாய் திறந்து படாத நெறியில் நின்று தொண்டு செய்த மெய்யடிமையுடையவர்கள்.


    அவர்களுடைய பெருமையை அறிந்து உரைக்க வல்லவர்கள் யார்தான் உண்டு?


    *பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியோம்.*


    திருச்சிற்றம்பலம்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X