Announcement

Collapse
No announcement yet.

Kalakkad Satyavageeswarar temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kalakkad Satyavageeswarar temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*

    *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.*
    *(17-வது நாள்.)*

    *அருள்மிகு சத்தியவாகீசுவரர் திருக்கோயில்.*
    *களக்காடு.*

    *இறைவன்:*அருள்மிகு சத்தியவாகீசுவரர் சுவாமி.


    *இறைவி:* அருள்தரும் கோமதி அம்மன்.


    *தீர்த்தம்:* வஸந்த தீர்த்தம்.


    *தல விருட்சம்:* புன்னை மரம்.


    *ஆகமம்:*
    சுவாமி - காமிக் ஆகமம்.
    அம்மன் - காரண ஆகமம்.


    *தல அருமை:*
    *களக்காடு மலை* எனச் சொல்லப்படும் வெள்ளி மலையின் அடிவாரத்தில் பாயும் பச்சையாய் மின் (ஆருத்ரா நதியின்) கரையையொட்டிய களாமரங்கள் அடர்ந்த காட்டிலே, தோன்றிய ஊர் களக்காடு.


    இவ்வூர் *களந்தை* என மருவி வழங்கலாயிற்று. இவ்வூர், வானவன் நாடு, பச்சை ஆற்றுப் போக்கு, சோழகுலவல்லிபுரம் என்ற பெயர்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.


    இத்திருக்கோயில் கொல்லம் ஆண்டு அறுநூற்று நாற்பதில் வீரமார்த்தாண்டவர்மன் என்ற மன்னவனால் கட்டப்பட்டன.


    இறைவன் புன்னை மரத்தடியில் தோன்றியதால் இறைவனது திருநாமம் *"புன்னை வனத்தில் நாதன்"* என்று அழைக்கப்படுகிறது. இறைவி திருநாமம் *"கோமதித் தாய்"* ஆகும்.


    இத்திருக்கோயில் கல்வெட்டில் இறைவன் திருநாமம் *புரமெலிச்வர முதலிய நயினார்* என்று குறிக்கப் பெற்றிருக்கிறது.


    புரம்- என்பது, சிவனார் முப்புரங்களை எரித்து வரம் தந்தவர் என்பது பொருள்.


    *புராணச் சிறப்பு:*
    முப்புரங்களை ஆண்டு வந்த மூன்று அசுர சகோதரர்கள் சிவ பக்தர்கள் என்றாலும், அவர்கள் தேவர்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தனர்.


    அதனால் சிவபெருமான் மூன்று கோட்டைகளையும் புன்னகையாலே எரித்து, அவர்களையும் கொன்றார்.


    இறுதியில் அசுரர்கள் மனம் திருந்தினர். அவர்களில் இருவரைக் தன் திருக்கோயில் வாயிற்காவலராகவும், மற்றொருவரைத் தான் திருநடனம் புரியும் போது பக்கத்தில் நின்று மத்தளம் வாசிக்கும்படியாகவும் இறைவன் வரம் கொடுத்தார்.


    முப்புரத்து அசுரர்கள் சிவ பூஜையை மறக்கும்படி செய்த நாரதரும், திருமாலும் கண் இழந்து, இத்தலத்திற்கு வந்து *புன்னைவனநாதனை* நோக்கித் தவம் புரிந்து கண் பெற்றனர்.


    இறைவனது திருநடனத்தை காணும் வரமும் பெற்றனர். புன்னைவன நாதர் சத்தியவாக்கு அருளினால், *சத்திய வாகீசுவரர்* என திருநாமம் வழங்கப் பெற்றது.


    புராண காலத்தில் இவ்வூருக்கு *கந்தர்ப்ப வனம்* என்ற பெயர் இருந்திருந்தன.


    *சிற்பச் அமைப்பு:*
    நூற்று முப்பத்தைந்து உயரத்துடன், ஒன்பது நிலைகளுடன் ராஜகோபுரம் அமைந்துள்ளன.


    ஒவ்வொரு நிலையிலும் அழகுறச் சிற்பங்கள் பரந்து கிடந்தன.


    மணிமண்டபத்தில் இரு பக்கங்களிலும் பதினாறு, பதினாறு தூண்களாக மொத்தம் முப்பத்திரண்டு தூண்களும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டுள்ளன.


    ஒவ்வொரு தூணினைத் தட்டினால், *(நெல்லையப்பர் கோவில் தூணைத் கட்டும்போது, எவ்வித இசைகள் வருகிறதோ? அதுபோல!)* ஒவ்வொரு நாத ஓசை அதிர்கின்றன.


    சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தர மூர்த்தி நாயனாரும் முறையே குதிரை, யானை மீதேறி கயிலை மலை செல்லும் காட்சியும், திருக்கோயிலின் வாயிலில் வீரமார்த்தாண்டர் சிலையும் மிகச் சிறப்பான முறையில் அமையப் பெற்றிருக்கின்றன.


    இக்கோபுரத்தின் நிழல், *(தஞ்சை பிரகதீஸ்வரர் கோபரத்தின் நிழல் எப்படி கீழே விழுவதில்லையோ? அதுபோல!*) தரையில் விழுவதில்லை.


    *பூஜைகள்:*
    தினமும் ஆறு கால பூஜைகள்.


    திருப்பள்ளியெழுச்சி- காலை 6.00 மணிக்கு,


    உதயமார்த்தாண்டம் - காலை 7.00 மணிக்கு,


    கால சந்தி - காலை 8.00 மணிக்கு,


    உச்சிக் காலம் - காலை 11.00 மணிக்கு,


    சாயரட்சை - மாலை 6.00 மணிக்கு,


    பள்ளியறை - இரவு 8.30 மணிக்கு.


    *திருவிழாக்கள்:*
    சித்திரை --வருடப் பிறப்பு,
    வைகாசி -- பிரமோற்சவம் திருவிழா,
    ஆனி --திருமஞ்சனம்,
    ஆடி - சங்காபிஷேகம்,
    ஆவணி -- விநாயகர் சதுர்த்தி,
    புரட்டாசி -- நவராத்திரி விழா,
    ஐப்பசி -- திருக்கல்யாணம்,
    கார்த்திகை --சோமவாரம், திருக்கார்த்திகை தீப விழா, திருவனந்தல்,
    மார்கழி -- திருவாதிரை,
    தை -- தெப்பத் திருவிழா,
    மாசி -- சிவராத்திரி,
    பங்குனி -- உத்திரம்.


    *இருப்பிடம்:*
    இத்திருக்கோயில் பணகுடி --சேரன்மகாதேவி சாலையில் அமைந்துள்ளது.


    திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாக நாற்பது கி.மி. தூரத்தில் இவ்வூர் அமைந்திருக்கிறது.


    திருநெல்வேலி, நாகர்கோவில், பாபநாசம் மற்றும் தென்காசி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கிறது.



    புவியியல் சம இரவு பகல் நாட்கள் என கூறப்படும், சூரியன் நில நடுக்கோட்டிற்கு நேரே பிரகாசிக்கும் தினங்களான *மார்ச்*- இருபதுடன் கூடிய தினங்கள், *செப்டம்பர்* இருபத்திரண்டை யொட்டிய மூன்று தினங்கள் ஆகிய நாட்களில் சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி மூலவர் மீது தழுவும் வண்ணம் கட்டப்பட்ட இத்திருக்கோயில், வானியல் கண்ணோட்டம் கொண்டு கட்டப்பட்ட தமிழர்களின் கட்டிடக் கலையின் உன்னதத்திற்கு எடுத்துக்காட்டு.





    *குறிப்பு:*
    இந்து தர்மத்தில், மானிடர்களின் பாவபுண்ணிய கணக்குகளை எழுதுபவர் என நம்பப்படும் *சித்திர புத்திர நயினாருக்கு* தனிச் சந்நிதி இந்தத் திருத்தலத்தில் அமையப் பெற்றிருக்கிறது.


    *அஞ்சல் முகவரி:*
    செயல் அலுவலர்,
    அருள்மிகு சத்தியவாகீசுவரர் திருக்கோயில்,
    களக்காடு,
    நாங்குநேரி வட்டம்,
    திருநெல்வேலி- 627 501,


    *தொடர்புக்கு:*
    04637--222888.


    *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் அடுத்த பதிவு அருள்மிகு செளந்தர பாண்டீஸ்வரர் திருக்கோயில். மேலக்கருவேலன்குளம்.*


    திருச்சிற்றம்பலம்.



    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X