Announcement

Collapse
No announcement yet.

Meenakshi sundareswarar temple, Tirunelveli junction

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Meenakshi sundareswarar temple, Tirunelveli junction

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*

    *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.*
    *(11-வது நாள்.)*

    *அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்.*
    *சிந்துபூந்துறை, திருநெல்வேலி.ஜங்.*

    *இறைவன்:*
    அருள்மிகு சுந்தரேசுவரர்.


    *இறைவி:* அருள்தரும் மீனாட்சி அம்மன்.


    *தீர்த்தம்:* பரணி தீர்த்தம்.


    *தல விருட்சம்:* வில்வம் மரம்.


    *ஆகமம்:* காமிக ஆகமம்.


    *தல அருமை:*
    ஆதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ள இடத்தில் வில்வ மரம் இருந்தது.


    இம்மரத்தடியில் அப்போது செல்வ விநாயகர் சந்நிதியை அமைத்திருந்தார்கள்.


    காலங்கடந்து பின், சிந்து பூந்துறை கிராமத்தில் சிவாலயம் இல்லாதிருக்கிறதே? என்ற அக்கிராமத்தார்கள், அப்போதிருந்த செல்வவிநாயகர் சந்நிதியின் மேல்பாகத் தெற்கில் மீனாட்சியம்மை சந்நிதியை மும், இதன் வடபுலத்தில் சுந்தரேசுவரர் சந்நிதியை மும் புணரமைத்தார்கள்.


    காலஞ்செல்ல காலஞ்செல்ல, இன்னபிற சந்நிதிகளையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.


    *சிறப்பு:*
    இத்திருத்தலம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலை ஒத்த சிறப்பினைக் கொண்டதாகும்.


    *பூஜை காலம்:*
    காமிக ஆகம விதிப்படி தினமும் நான்கு கால பூஜை நடக்கிறது.


    கால சந்தி-- காலை 8.00 மணிக்கு.
    உச்சிக்காலம்-- காலை 10.00 மணிக்கு.
    சாயரட்சை-- மாலை 6.00 மணிக்கு.
    அர்த்தசாமம்-- இரவு 9.00 மணிக்கு.


    *திருவிழாக்கள்:*
    வருஷாபிஷேகம்,
    விநாயகர் சதுர்த்தி,
    நவராத்திரி,
    கந்த சஷ்டி,
    திருவாதிரை,
    மகாசிவராத்திரி.


    *இருப்பிடம்:*
    திருநெல்வேலி இரயில் நிலையத்திலிருந்து 1.கி.மி தொலைவிலும், திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து மதுரை சாலையின் அரேகிலையே சிந்துபூந்துறை கிராமத்தில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.


    திருச்சிற்றம்பலம்.



    *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் அடுத்த பதிவு அருள்தரும் திரிபுராந்தீசுவரர் திருக்கோயில் வ(ள)ரும்*

    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X