courtesy:Sri.Kovai K.Karuppasamy
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴 திருவொற்றியூர் 🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருவொற்றியூர் தொண்டை மண்டல சிவத்தலங்களில் முக்கியமான ஒன்று . இத்தலம் காலத்தால் மிக பழமையானது ஆதலால் ஈசன் திருநாமமே ஆதிபுரிஸ்வரர் என்பது தான் . அதோடு இங்குள்ள லிங்கம் புற்று மண்ணால் ஆனது என்பதால் புற்றிடம் கொண்டார் என்றும் பெயர் . புற்றில் பாம்புகளுடன் இருந்தால் படம்பக்கநாதர் வான்மீகநாதர் என்றெல்லாமும் அழைப்பர் . இத்தனை பெயர்கள் இருந்தாலும் கோயிலின் பெயர் என்னவோ தியாகராஜ சுவாமி கோயில் .
திருவாரூர் போல் தியாகராஜருக்கு இங்கும் புகழ் அதிகம் . வசந்த உற்சவமும் அமர்ந்தாடும் பெருமானின் துள்ளல் புறப்பாடும் பிரசித்தி . இங்கு விடங்கர் கிடையாது அதுமட்டும் தான் வித்தியாசம் .
நல்ல விஸ்தீரணமான பெரிய கோயில் . கோயில் முழுவதும் ஏகப்பட்ட லிங்கங்கள் 27 நட்சத்திரங்களும் 27 லிங்கங்கள் உள்ளன . அதுதவிர வெட்ட வெளியில் பிரமாண்டமாக நிற்கும் ஆகாஷ லிங்கம் உள்பட பஞ்ச பூத தளங்களுக்கான லிங்கங்கள் ஜதீஸ்வரர் நந்தவனக் நாயகர் என்று நிறைய சன்னதிகள் உள்ளன .
பிரதானவர் நம்ம ஆதிபுரிஸ்வரர் தான் . அழகோ அழகு கொஞ்சும் அகலமான மூலஸ்தானத்தில் அகன்ற பெரிய லிங்கங்கமாக வீற்றிருக்கிறார் ஆதிபுரிஸ்வரர் .
ஈசனுக்கு இங்கு நித்திய அபிஷேகம் கிடையாது . ஆண்டுக்கு மூன்று நாள் புனுகு அபிஷேகம் மட்டும் தான் . அந்த நாளில் லிங்கத்தின் முழு உருவையும் தரிசனம் செய்ய முடியும் . மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சார்த்தி வைத்து இருப்பார்கள் . ஆயினும் புற்று லிங்கத்தின் முகப்பு தெரியும் .
மூலஸ்தானத்தின் முன் மண்டபத்தில் நிற்கும் போதே ஓர் அலாதி ஆனந்தத்தை உணரமுடிகிறது . ஈசனை சுற்றி நாலாப்பக்கமும் சர விளங்குகள் தொங்க விடப்பட்டும் சுவரில் இரண்டு வட்ட விளக்குகள் பதிக்க பெற்றும் மின்விளகின்றி தீபத்திலேயே ஜகஜோதியாக ஒளிர்கிறது மூலஸ்தானம் . ஈசன் சன்னிதியில் எவ்வளவு நாழி நின்றாலும் பிரிந்து வர மன ஒப்பவில்லை .
சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு முலையில் உள்ளது கலயநாயனாருக்கு தனி சன்னிதி உள்ளது . இவர் இந்த தலத்தில் வாழ்ந்த நாயனார் . விளக்கு ஏற்றுவதையே தொண்டாக செய்தவர் .
சுந்தரரின் காதல் திருமணம் ஈசன் சாட்சியாக நடந்த இடம் இத்தலத்தின் தலவிருட்சமான மகிழமரத்தடிதான் . அப்பர் , சம்பந்தர் , வள்ளலார் , பட்டினத்தார் உள்ளிட்ட அடியார்கள் இத்தலத்து ஈசனை பாடிப்ப்ரவியுள்ளனர் .
இத்தலத்து அம்பிகையின் திருநாமம் வடிவுடையம்மன் . பெயருக்கு ஏற்ற எழிலான தோற்றம் . தன் அருட்திறத்தால் பக்தர்களை ஈர்த்து வருகிறாள் . செவ்வாய் , வெள்ளி கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது அதிலும் பௌர்ணமி அன்று மிக அதிகம் காரணம் சென்னை சுற்றியுள்ள இச்சா சக்தி , கிரியா சக்தி , ஞான சக்தி எனும் முப்பெரும் சக்திகளில் இவள் இச்சா சக்தி . பௌர்ணமி நாட்களில் முன்று சக்திகளையும் தரிசிக்க பெரும் பலன்கிட்டும் என்பது ஐதிகம் .
சுந்தரர் சங்கிலி நாத்தியாரை ஈசன் சாட்சியாக மணந்த மகிழ மரம் இன்றும் ஆலயத்தின் தலவிருட்சமாக தழைத்து நிற்கிறது . மரத்தை சுற்றி பெரும் மேடையும் அமைந்துள்ளனர் . அதன் அருகில் ஒரு சிறு மண்டபம் இருக்கிறது. நீங்கள் அவசியம் அதனுள்ளே கவனித்து பார்க்க வேண்டும் . எனெனில் அதுதான் ஈசனின் திருப்பாதம் .
சுந்தரர் திருமணத்திற்கு சாட்சியாய் வந்து நின்ற இடம் . இங்குள்ள நால்வர் சன்னதியில் சுந்தரர் மட்டும் எல்லோரோடும் சேர்ந்து நிற்காமல் சற்றே விலகி சங்கிலி நாச்சியாருடன் சேர்ந்து நிற்பது விசேஷ காட்சி .
வெளிப் பிரகாரத்தில் கௌலிஸ்வரர் சன்னதி கவனிக்க தக்கது . ஈசன் லிங்கமாக இல்லாமல் முழு உருவத்தில் தியான கோலத்தில் அமர்ந்து இருக்கிறார் . ஆறு அடியில் நல்ல ஆஜானுபாவான தோற்றம் .
கோயிலின் வடமேற்கில் புத்தம்புதியதாய் எழுந்து நிற்கிறது திருவொற்றியூஸ்வரர் என்ற சன்னதி கொண்ட அழகிய ஆலயம். அப்பப்பா அங்குள்ள சிற்பங்கள் அத்தனை அழகோ அழகு . நால்வர் , சனகாதி முனிவர்கள் , நாரத தும்புருக்கள் , பதஞ்சலி , வியாக்ரபாதர் , தூண்களில் 63 நாயனார்கள் சந்தானக்குரவர்கள் என ஒவ்வொரு சிற்பமும் நெஞ்சையள்ளுகிறது . அவரை தரிசித்தது விட்டு வந்தால் அருகில் நந்தவன நாயகர் அழகிய நந்தவனம் மையத்தில் ஈசன் சன்னதி . பத்து இதழ் கொண்ட மகாவில்வம் உள்பட அனேக மரங்கள் . அதை தாண்டினால் பைரவருக்கு என்று தனிக்கோயில் . அடுத்து தலவிருட்சம் , ஏகபாதமூர்த்தி எல்லாம் தரிசித்தது விட்டு அம்பளையும் கண்குளிர பார்த்து விட்டு சந்தோஷமாக வரலாம் .
திருச்சிற்றம்பலம்.