சிவாயநம. திருச்சிற்றம்பவம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
தீயினுள் புகுவதை தடுத்த நடனபுரீசன்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கவுசிக வம்சத்தில் தோன்றியவர் திரு ஞானசிந்து என்ற மகரிஷி ஆவார்.
இறைவன் மேல் அளவில்லா பக்தி கொண்டிருந்தார்.
இவர் அனுதினமும்காலையில் தனுஷ்கோடி ஸ்நானத்தையும், மதியம் கங்கா ஸ்நானமும் மற்றும் போஜனமும் செய்து, இரவில் தில்லை நடராஜரின் தரிசனம்.
இதுதான் அவருடைய நித்திய நியமாகக் கடைப்பிடித்து வந்தார்.
இம்முறை முடியாமற் தடலாங்கிப் போனால் அக்னி பெருக்கி அதனுள் உள்புகுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்ற விரதத்தையும் மேற்க் கொண்டிருந்தார்.
திரு ஞானசிந்து----பெயரைக் கேள்விபட்டிருக்கிறீர்களா? இம்மகரிஷி அக்காலத்தில் ஒரே நாளில் மேற்க் கொண்ட தொழுகையின் ஆலயத் தொலைவை கணக்கிட்டுப் பாருங்கள்!
ராமேஸ்வர தனுஷ்கோடி தீர்த்தம் எங்கிருக்கிறது? ---தில்லை சிதம்பர எல்லை எங்கே இருக்கிறது? .....வாகனமில்லா அக்காலத்தில் இம் மகரிஷி எந்தவித பக்தியை ஒழுகியிருந்தாலொலிய இது அவர்களுக்கு வசப்பட்டு அருளாயிருந்திருக்கிறது!
இப்போது அப்படியாயிருக்கிறது? அடியேன் சில ஆலயத்துக்குச் செல்ல முனைப்பு எடுத்திருக்கிறேன்- நீங்கள் வருகிறீர்களா? செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்---என்று நாம யாரையாவது கேட்டால்.....
"ஐய்யய்யோ.....
எனக்கு வேலை இருக்கிறது! வேலையை கெடுத்து என்னாலெல்லாம் வர இயலாது என்று சொல்வதை பலரிடமிருந்து நான் கேட்க நேர்ந்திருக்கிறது. நீங்களும் கண்டிருப்பீர்கள்.
'பக்தி எங்கே வாழ்கிறது? பாருங்கள்!;
கடுமையான விரதத்துடனும் சீரிய பக்தியுடனும் தொழும் வழக்கத்தை மேற் கொண்டிருந்த...திரு ஞானசிந்து மகரிஷி...ஒரு நாள் திருச்சிற்றம்பலம் வந்தார்.
"பேய் மழை" என்று நாம் சொல்வோமே அந்த மழைதான் அன்று பெய்து கொண்டிருந்தது மகரிஷி சிற்றம்பலத்திற்கு வந்திருந்த சமயத்தில்.
அவரால் மேற்க் கொண்டு பயணத்தைத் தொடர முடியாமல் தடைபட்டன.
சிவபெருமானையே வணங்கி விட்டு இரவு இத்தலத்திலேயே தங்கி விட்டார்.
பொழுது விடிந்து விட்டது. மகரிஷி மன வருத்தத்துடன் இறைவனை வேண்டினார். தன் விரதத்தை நிறைவேற்ற நிலை வந்ததையென்னி மன வேதனையோடு இறைவன் முன்பாக கண்ணீர் மல்க நின்றார். விரதம் தவறியதால் தன்னுயிரை மாய்த்து விட முடிவு செய்தார்.
வெளியில் வந்த ஞானசிந்து மகரிஷி, மரக்கட்டைகளைத் தேடி பொறுக்கி எடுத்து குவித்தார். தீயை மூட்டினார்.
"தீ".. மளமளவென்று கணக்கத் தொடங்கியது. கண்களை மூடி நடராஜ பெருமானை இமைக்குள் இருத்திக் கொண்டார். எதிரே எரிந்து கொண்டிருந்த தீ- யில் உள் புகத் தயாரானார்.
அவர் வளர்த்த தீ- யின் முன்னே நடராச பெருமான் காட்சி தந்து, ஞானசிந்து மகரிஷியின் முயற்சியைத் தடுத்தாட் கொண்டார். தவிர, அவர் என்றும் வழிபட வசதியாக இத்தலத்திலேயே தங்கியிருக்கும்படி கூறியருளி மறைந்தார்.
நடனமாடி நடராசர் இத்தலத்தில் உறைந்ததால் இத்தலம் நடனபுரியானது.
அத்துடன் இத்தலம் நடராசப் பெருமானுக்கு உகந்த தலமாகி "திருச்சிற்றம்பலம்" எனப் பெயர் பெற்றது.
இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் நடனபுரீஸ்வரர். இறைவியின் பெயர் செளந்தர நாயகி ஆவார்.
இத்தலம் கொள்ளிடம் என அழைக்கப்படும் வடகாவிரிக்கும், சுப்பிரமணிய நதி எனும் மண்ணியாற்றிற்கும் இடையே அமைந்துள்ளது.
சந்திரன் சயரோக வியாதினால் பீடிக்கப்பட்டிருந்த போது, இந்நோயிலிருந்து நிவர்த்தி பெற விரும்பி, அருகே உள்ள வளர்தொட்டி என்ற தலத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரரை வழிபட விரும்பினார்.
இதற்காகவே தான் கையோடு கொண்டு வந்திருந்த சிவலிங்கத்தை "திருச்சிற்றம்பலத்தில்" இருந்த வில்வ மரத்தடியில் வைத்து விட்டு, வளர்தொட்டிக்குச் சென்றான் சந்திரன்.
பிரம்மபுரீஸ்வரரை வழிபட்ட பின் திரும்ப போய் சிவலிங்கத்தை எடுக்கக் குனிந்தான்.
லிங்கம் பூமியில் பிடித்துக் கொண்டு விட்டது. சந்திரன் இழுத்த இழுப்புக்கு லிங்கம் அசையவில்லை.
"யாம் இத்தலத்திலேயே இருக்க விருப்பமுடைந்தோம்" என்று அசரீரி ஒலித்தது.
சந்திரனும் லிங்கத்தை அப்படியே விட்டு விட்டுப் போய்விட்டான். எனவே இங்குள்ள இப்பெருமானுக்கு சந்திரேசுவரர் எனவும், இத்தலத்தை சந்திரஜோதிபுரம், சந்திரேசம் என்கிற பெயர்களுமுண்டு.
பராசர மகரிஷி யமுனா நதிக்கரையில் மச்சகந்தியைக் கண்டு மோகித்தார். இதனால் அவருக்கு சித்த பிரமை அடைந்தார்.
பின் நாரதர் வழிகாட்டுதலின்படி இத்தலத்திற்கு வந்து சந்திரபுஷ்கரணியில் மூழ்கி சிலகாலம் இங்கேயே தங்கி வழிபட குணம் பெற்றார்.
எனவே இறைவனை பராசரேசுவரர் என்றும் இத்தலத்தை பராசரேசம் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு.
இத்தலத்தின் மேற்கான திசையில்தான் வளர்தொட்டி எனும் வைப்புத்தலமும், திருப்பந்தணை நல்லூர் என்று பெயராகி, இவ்வூர் தற்போது பந்தணைநல்லூர் என அழைக்கப் பெறுகின்றது.
பசுபதீசுவரர் ஆலயம் உள்ள தலமும், தெற்கில் திருமணஞ்சேரி, திருவேள்விக்குடி, திருத்துருத்தி தலங்களும், வடக்குமுகமாக ஓமாம்புலியூர் என்கிற தலமும், கிழக்கில் மந்தாரம் எனும் வைப்புத் தலமும் உள்ளன.
இத்தலத்திலும் சில தொலைவில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவிலும்,நந்தனாருக்காக நந்தி விலகிய திருப்புன்கூர் தலமும் இருக்கின்றன.
ஆதியில் இத்தலம் வில்வவனமாக இருந்ததாம். இறைவன் வில்வமரத்தனடியில் அமர்ந்து காட்சி கொடுத்ததால், இத்தலத்தை வில்வாரண்யம் எனவும், இறைவனை வில்வனேசுவரர் என அழைக்கப்படுவதுண்டு.
துன்பம் வரும்போது இறைவனே நம்மைத் தேடி வந்து அருள்பாலிப்பார் என்ற உண்மையை பக்தர்களுக்கு உணர்த்திய தலமிது.
பந்தநல்லூர்-சீர்காழி பேருந்து வழிதடத்தில் பந்தநல்லூருக்கு கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் இருக்கின்றன திருச்சிற்றம்பலம் என்ற கோயில்.
திருச்சிற்றம்பலம்.