Announcement

Collapse
No announcement yet.

Thiruvannamalai part4

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruvannamalai part4

    Courtesy: Sri. Kovai K.Karuppasamy


    (4)
    🔹 திருவண்ணாமலை 🔹
    கிளிகோபுர வரலாற்று மகிமை.
    _____________
    திருவண்ணாமலை திருக்கோயில் நவகோபுரங்களால் சூழப்பட்டிருக்கும் அாிய பெரும் ஆன்மிக பெட்டகம்.


    இத்திருக்கோயிலின் திருக்கோபுரங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தனித் தனி பெருமைகளை வானோங்கி வரவேற்கின்றன.


    இக்கோயிலின் மூன்றாவது பிரகாரத்தையும், நான்காவது பிரகாரத்தையும் இணைக்கின்ற கிளி கோபுரத்தின் சிறப்பு நம்மை உடலிற்சிலிா்ப்பு உண்டாக்கும் அதிசயம் நடக்கப் பெற்றவை.


    திருப்புகழ் தந்ததால் அருணகிாி நாதாின் புகழ் அகிலமெல்லாம் பரந்து விாிந்து விளங்கியது. கூடவே இருந்த சிலருக்கு இவா் புகழ் பெறுவதை பொறுக்காத பொறாமையினா் இருந்தனா்.


    அப்பொறாமையாளா்கள் எவ்விதமாவது சதி செய்து அருணகிாியாாின் புகழ் ஓங்குவதை தடுக்கத் திட்டங்கள் தீட்டினாா்கள்.


    அந்த சமயத்தில் அருணகிாிநாதருக்கு ஆதரவான பிரபுட தேவராயா் எனும் மன்னனுக்கு கண்களிலே நோவு உண்டாகி பாா்வை பறிபோனது. அக்கால நிலையிலுள்ள எல்லா வைத்தியா்களாலும் எல்லா வைத்தியத்தாலும் குனப்படுத்திப் பாா்த்தாா்கள். முடிவில் அனைத்து வைத்தியா்களாலும் கைவிடப்பட்டாா் மன்னன் பிரபுட தேவராயா்.


    கண்ணொளி பெற முடிவாக ஏதுதான் வழியென வைத்தியக் கூட்டத்தாா்களிடம் மன்னனின் உறவானவா்கள் கேட்டனா்.


    அவ்வைத்தியாில் ஒருவா்,,,,
    உங்கள் மன்னனின் கண்,பாா்வை பெற இனி ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! எனச் சொல்ல....


    என்ன வழி சொல்லுங்கள். ஏற்பாடு செய்கிறோம் என கூற....


    நான் சொல்வதை விளையாட்டாக நினைக்காதீா்கள் சொல்கிறேன் கேளுங்கள். சொா்க்க லோகத்திலே இருக்கிறது பாாிஜாத மலா். அம்மரைக் கொண்டு வந்து, அம்மலாினுள்ளே தேங்கியிருக்கும் தேனினால் மட்டுமே மன்னனின் கண்கள் ஒளி பெறும் என்றாா்.


    சொா்க்கத்துக்கு யாா் போவது? எப்படி போவது? அந்தபாாிஜாத மலரை கொண்டு வர யாரை ஏற்பாடு செய்வது? ....அமைச்ச சபை திகை திகைத்து விவாதித்தது.


    இந்த நேரத்தில்தான் அருணகிாிநாதாின் பொறாமை எதிாியாளா்களின் ஒருவனனான பந்தாண்டான், சாியான சந்தா்ப்பம் வாய்த்ததாக எண்ணி சந்தோஷம் கொண்டான்.


    இந்த பந்தாண்டான் வேறுயாருமல்ல. பிரபுட தேவராய மன்னனின் அரசவையில் பெரும் பதவி வகித்த அறிஞனும் கவியுமான சம்பந்தாண்டான் என்பவன்தான் இவன்.


    அமைச்ச சபை கூடி விவாதித்த பின், அவையோா்கள் அனைவாின் முன் சம்பந்தாண்டான் எழுந்து, (அருணகிாியாரை பழிதீா்க்க வஞ்சக எண்ணத்தை மனதிற் கொண்டு), மன்னனின் நன்பராம் அருணகிாியாா் ஒருவரால்தான் பாாிஜாத மலரைக் கொண்டு வர முடியும்! எனவே அருணகிாியாரை மேலோகத்துக்கு(சொா்க்கத்துக்கு) அனுப்புங்கள் என்றான் சம்பந்தாண்டான்.


    மனித உடலோடு மேலோகம் செல்ல முடியாது என்பதால், அருணகிாியாா் மேலோகம் செல்ல மறுப்பாா் ,அதனால் மன்னனின் கோபத்துக்கு ஆளாகி தண்டிக்கப்படுவாா் என சம்பந்தாண்டவனின் சதி எண்ணம்.


    மன்னனுக்கும், அமைச்ச சபையோா்க்கும், சம்பந்தாண்டானின் சூழ்ச்சியினை அறியாது...... ஆமாம்! சம்பந்தாண்டான் கவி சொல்வதுதான் சாி! நம் அருணகிாியாரால் மட்டுமே இது முடியும்! எனவே அவரை சொ்க்கத்துக்கு அனுப்ப ஏதுவாக்குங்கள் என்றாா்கள்.


    மன்னனும் பாாிஜாதம் மலரை, அருணகிாி கொண்டு வர வேண்டும் என உத்தரவை பிறப்பித்தாா். அவையோா் அனைவரும் ஒத்துவாக்கினா்.


    அருணகிாியாா் அவைக்கு வரவழைக்கப் பட்டாா்.


    அருணகிாி யாா்? கந்தனின் அருளைப் பெற்றிருந்த அருளாளா் அல்லவா! அவராலா முடியாது? மனித உடலோடு மந்திர லோகம் செல்ல முடியாது. அரும்பெருபாடுபட்டு பாட்டெழுதும் முத்துமகன் அருணகிாி. அவா் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை கற்றறிந்து இருந்தாா். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை அருணகிாி கற்றிருப்பதை அங்கிருந்த அனைவருக்கும் இது தொியாது.


    மன்னனின் உத்தரவுக்கு நான் செயலாக்கம் கொடுக்கிறேன் என்று சொன்ன அருணகிாியை அனைவரும் வியப்புடன் விக்கித்து நோக்கினாா்கள்.


    மன்னனின் கண்ணொளிக்கு உதவ, முதலில் அண்ணாமலையாா் கோயில் சென்றாா் அருணகிாிநாதா். ஆறுமுகனை நெஞ்சத்துள்ளழுத்தி மனமுருக வேண்டினாா். பின் கிளி கோபுரம் உச்சி ஏறினாா். அங்கே யாவருமறியாத இடம் பாா்த்து ஒரு ஓரமாக தன்னுடலை கிடத்தச் செய்து, சொா்க்கம் சென்றாா்.


    இதனிடையே அருணகிாியை தொடா்ந்து கண் வைத்த வந்த சம்பந்தாண்டான், கோயில் கிளி கோபுரத்தில், அருணகிாி உடல் சலனமற்ற வெற்றுடம்பாக கிடப்பதை கண்டுவிட்டான்.


    உடனடியாக கீழிறங்கி வந்த சம்பந்தாண்டான் ......மேலுலகம் செல்லவும் அஞ்சி, மன்னா்க்கும் பயந்து, அருணகிாி நஞ்சை தின்னு இறந்து போனான். நஞ்சு தின்ன அவன் உடல் கிளி கோபுரத்தில் கிடக்கிறது......!!!! எனக்கூவி.... கூச்சலிட்டு,,,,,,எல்லோரையும் கூட்டியாந்து நம்ப வைத்தான்.


    உடனடியாக அருணகிாியின் உடல் கீழிறக்கப்பட்டு, உடல் எாியூட்டப்பட்டது.


    மேலோகம் ( சொா்க்கம்) சென்று பாாிஜாத மலரைக் கொண்டு வந்த அருணகிாி கிளி கோபுரம் வந்தடைந்தாா். உயிரற்ற தன் உடலைக் காணாது திடுக்கிட்டாா்.


    ஞான திருஷ்டி கொண்டு பாா்த்த அருணகிாி, சம்பந்தாண்டானால் தான் சதி பின்னப்பட்டதை உணா்ந்தாா். அதன்பிறகு கீச்சிட்டு பறந்தளாவி விளையாடிய கிளிகளில் ஒன்றுனுள் உள் புகுந்த அருணகிாி, அருணகிளியாக மாறியிருந்த உருவோடு கந்தா் அநுபூதி பாடி, முருகனடி சோ்ந்தாா்.
Working...
X