courtesy:
http://valmikiramayanam.in/?p=2407
ஸ்ரீ சங்கர சரிதம் – முதல் பகுதி – ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்?
शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् । प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ||
ஶூக்லாம்ப3ரத4ரம் விஷ்ணும் ஸஸி வர்ணம் சதுர்பு4ஜம்|
ப்ரஸன்ன வத3நம் த்4யாயேத் ஸர்வ விக்4நோப சாந்தயே|| 1
वागीशाद्या सुमनसः सर्वार्थानामुपक्रमे |
यं नत्वा कृतकृत्यास्यु: तं नमामि गजाननम् ||
வாகீ3ஶாத்3யா: ஸுமநஸ: ஸர்வார்தா2நாமுபக்ரமே|
யம் நத்வா க்ருதக்ருத்யா: ஸ்யு: தம் நமாமி க3ஜாநநம்||
ராமாயண த்யான ஸ்லோகங்களோட ஆரம்ப ஸ்லோகங்கள்ல இது வரும். இதுல இந்த

அப்படிங்கிற இந்த ஸ்லோகத்தை இன்னைக்கு படிக்கும் போது, மஹாபெரியவா இந்த ஸ்லோகத்தை எடுத்துண்டு ரொம்ப அழகா வ்யாக்யானம் பண்ணி இருக்கா. அதுல ஆதிசங்கர பகவத் பாதாளையும் உள்ள கொண்டு வந்துடறா. அது ஞாபகம் வந்தது. சரி, இந்த ஏப்ரல் முப்பதாம் தேதி, வைகாசி சுக்ல பஞ்சமி, சங்கர பகவத் பாதாளோட ஜயந்தி. பின்னாடியே வைகாசி அனுஷத்துல நம்ம மஹாபெரியவா ஜயந்தியும் வரும். அதனால இந்த ஒரு பதினஞ்சு நாள், சங்கர விஜயம் சொல்லலாம், சங்கர சரிதம்ன்னு சொல்லுவா, சங்கர திக்விஜயம் னு சொல்லுவா. அந்த சங்கர விஜயத்தை சொல்லுவோமே அப்படின்னு ஒரு ஆசை.
இதுக்கு முழுக்க முழுக்க எனக்கு source மஹாபெரியவளோட தெய்வத்தின் குரல் தான். அதோட அஞ்சாவது பாகத்துல ஒரு eight hundred pagesக்கு (எண்ணூறு பக்கங்கள்) ஆதிசங்கர பாகவத்பாதாளை பத்தி பெரியவா சொல்லி இருக்கா. அதை படிச்சு குழந்தைகளுக்கு சொல்லுவேன், அதையே உங்களோடேயும் பகிர்ந்துகிறேன்.
இந்த 'வாகீசத்தியாஹா ஸுமனஸஹ' அந்த ஸ்லோகத்தோட meaning சொல்றேன், வாக்குக்கு ஈசன் ஆனா, அதாவது வாக்னா சரஸ்வதி, சரஸ்வதியோட பதியான ப்ரம்மா, ஆத்யா: னா முதலிய, 'ஸுமனஸஹ'ன்னா' தேவர்கள்', ப்ரம்மாதி தேவர்கள், 'சர்வார்த்தானாம்' எல்லா கார்யத்தின் 'உபக்ரமே', ஆரம்பத்தில், 'யம் நத்வா' எவரை வணங்கி, 'க்ருதக்ருத்யாஸ்யுஹு' தங்களுடைய கார்யங்கள் நிர்விக்னமாக நிறைவேற பெறுகிறார்களோ, அந்த 'கஜானனம்' அந்த பிள்ளையாரை 'தம் நமாமி' நானும் வணங்குகிறேன், அப்படின்னு ஒரு ஸ்லோகம்.
இதுல வாக்குக்கு அதிபதியான பிரம்மா, பிரம்மாதி தேவர்கள், அப்படின்னு சொன்னதுனால, வாக் சம்பந்தமான காரியங்களுக்கு ஆரம்பத்துல, முக்கியமா இந்த ஸ்லோகத்தை சொல்லி வேண்டிக்கணும். இந்த ப்ரவசனம் மாதிரி பண்ணும் போது பிள்ளையாரை வேண்டிக்கணும் அப்படின்னு ஒரு குறிப்பு. 'ஸுமனஸஹ' அப்படின்ற வார்த்தைக்கு தேவர்கள்னு ஒரு அர்த்தம், 'பூ'ன்னு ஒரு அர்த்தம். நல்ல மனசுன்னு ஒரு அர்த்தம். இந்த நல்ல மனசுன்னுகிறதை வெச்சிண்டு, பெரியவா ஆதி சங்கர பாகவத்பாதளோட connection கொண்டு வரா. எப்படின்னா,
ஆதி சங்கர பாகவத்பாதள், ஆசேது ஹிமாச்சலம் மூணு வாட்டி நடந்து, தன்னுடைய தர்சனதுனால, ஜனங்களை எல்லாம் புனிதப்படுத்தி, தன்னுடைய வாக் அம்ருததுனால. அவாளுக்கு எல்லாம் தெளிவு ஏற்படும்படி பபண்ணிணார். அப்போ, திருவானைக்காவிற்கு வந்து இருந்தார், திருவானைக்காவில அகிலாண்டேஸ்வரி ன்னு அம்பாள். 'ஆப்ரம்மகீட ஜனனீ' அப்படின்னு எல்லாருக்கும், அம்பாள்தான் தாயார், இந்த விஸ்வத்துல இருக்கிற எல்லாருக்குமே அம்பாள் தான் தாயார், அதனால கருணையே வடிவானவள் அம்பாள். அப்படி இருக்கக்கூடிய அம்பாள், இந்த கலியில ஜனங்கள் ரொம்ப பாபம் பண்றான்னு சொல்லி, கோபமா உக்கிர ரூபத்துல அங்க இருந்தா. அப்படி அகிலாண்டேஸ்வரி ரொம்ப கோபத்தோட இருந்தா. அப்போ இந்த கோபத்தை சாந்தபடுத்தி, ஜனங்களுக்கெல்லாம் அனுக்கிரஹம் கிடைக்க பண்ணனும், அப்படின்னு சங்கரர் நினச்சார். அப்போ அவர் என்னடா பண்றது எதிர்லயே போக முடியலையேன்னு பார்த்து, "சரி, என்ன கோபமா இருந்தாலும் அம்மாக்கு தன்னுடைய பிள்ளைய பார்த்தா மனசாந்தி ஏற்படும்,சந்தோஷம் வந்துடும்" அப்படின்னு சொல்லி, ஒரு பிள்ளையாரை அம்பாளுக்கு முன்னாடி பிரதிஷ்டை பண்ணார்.
இந்த ஆதி சங்கரர் பிள்ளையாரை பிரதிஷ்டை பண்ணார் அப்படின்னு சொல்லும் போது, கணேச பஞ்சரத்னம் அப்படிங்கிற ஒரு ஸ்தோத்ரம் இருக்கு. அவ்வளோ அழகான ஒரு ஸ்லோகம், அதை ஒரு தடவை இப்போ நான் சொல்றேன்,
मुदा करात्त मोदकं सदा विमुक्ति साधकं
कलाधरावतंसकं विलासि लोक रक्षकम् |
अनायकैक नायकं विनाशितेभ दैत्यकं
नताशुभाशु नाशकं नमामि तं विनायकम् || १||
नतेतराति भीकरं नवोदितार्क भास्वरं
नमत् सुरारि निर्जरं नताधिकापदुद्धरम् |
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् || २||
समस्त लोक शंकरं निरास्त दैत्य कुन्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रं अक्षरम् |
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् || ३||
अकिंचनार्ति मार्जनं चिरन्तनोक्ति भाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारि गर्व चर्वणम् |
प्रपञ्चनाश भीषणं धनंजयादि भूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम् || ४||
नितान्त कान्त दन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तराय कृन्तनम् |
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं चिन्तयामि सन्ततम् || ५||
महागणेश पञ्चरत्नं आदरेण योन्ऽवहं
प्रजल्पति प्रभातके हृदि स्मरन्ं गणेश्वरम् |
अरोगतां अदोषतां सुसाहितीं सुपुत्रतां
समाहितायुरष्ट भूतिमभ्युपैति सोऽचिरत् ||
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
கலாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அனாயகைக நாயகம் வினாஶிதேப தைத்யகம் |
நதாஶுபாஶு நாஶகம் னமாமி தம் வினாயகம் || 1 ||
நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம் |
நமத்ஸுராரி னிர்ஜரம் நதாதிகாபதுத்டரம் |
ஸுரேஶ்வரம் நிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம் |
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் னிரன்தரம் || 2 ||
ஸமஸ்த லோக ஶங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம் |
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||
அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ நன்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச நாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||
நிதான்த காந்த தந்த காந்திம் அந்தகாந்தகாத்மஜம் |
அசின்த்ய ரூபமம் அந்தஹீன மன்தராய க்ருந்தனம் |
ஹ்ருதன்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகினாம் |
தமேகதந்தமேவ தம் விசின்தயாமி ஸந்ததம் || 5 ||
மஹாகணேஶ பஞ்சரத்னமாதரேண யோsன்வஹம் |
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன் கணேஶ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோஉசிராத் ||
இந்த பதினைந்து நாளுமே, கூடக்கூட ஆதி சங்கர ஸ்தோத்திரங்கள் எல்லாம் நான் பாராயணம் பண்றதுனு வெச்சுக்க போறேன். ஏன்னா ஆதி சங்கரருடைய புஸ்தகங்கள்ல , நான் இந்த ஸ்தோத்ரங்கள் தான் தெரிஞ்சிண்டு இருக்கேன். அவருடைய ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்கள் ரொம்ப intellectualஆ இருக்கும்னு சொல்லுவா. அப்பறம் ப்ரகரண க்ரந்தங்கள் அப்படின்னு விவேகசூடாமணி போன்ற புஸ்தகங்கள் இருக்கு. அது எல்லாம் காட்டிலும் இந்த ஸ்தோத்ரங்கள்லயே பக்தியோட கூட, ஞானமும் இருக்கு அப்படின்னு பெரியவா சொல்லி இருக்கா. அதனால இந்த கணேச பஞ்சரத்னத்தை சொன்னா பிள்ளையார் அங்க வந்துடுவார்.
இந்த ஸ்லோகத்தோட மெட்டே ஒரு யானை காதை அசைச்சிண்டு வர மாதிரி ஒரு மெட்டுல அழகான வார்த்தைகள். அதுல 'ஹ்ருதந்த்ரே நிரந்தரம் வஸந்தேமேவ யோகிநாம்' யோகிகளுடைய ஹ்ருதயத்தில் நித்யம் வசிக்க கூடிய, இந்த யானை முகத்தோன் ஆனா கணபதியை, 'தம் ஏகதந்தம் ஏவ விசிந்தயாமி ஸந்ததம்' நான் எப்பவும் அந்த பிள்ளையாரை, 'ஸந்ததம் விசிந்தயாமி' அப்படின்னு சொல்றார். அப்படி ஆதிசங்கரர் தியானம் பண்ணனதுனால அங்க பிள்ளையார் வந்துட்டார். பிள்ளையாரை அந்த அகிலாண்டேஸ்வரிக்கு எதிர்ல பிரதிஷ்டை பண்ண உடனே, அம்பாள் குளுந்துடறா. திரும்பியும் அந்த உக்கிரமான கோபம் வந்துடக் கூடாதுங்கிறதுக்காக, உக்கிர கலையை, ரெண்டு தாடங்கம் பண்ணி, ரெண்டு காதுலேயும் ஸ்ரீ சக்ரம், சிவ சக்ரம்ன்னு சொல்லுவா, அப்படி ரெண்டு தாடங்கங்கள் பண்ணி, அதை அம்பாளோட காதுலேயே போட்டு இருக்கார். அந்த அம்பாளோட தாடங்கத்தோட மஹிமை, தனியா, அம்பாளோட பாதிவ்ரத்யத்தை காண்பிக்கறது அப்படின்னு சௌந்தர்ய லஹரி ஸ்தோத்ரம் இருக்கு. அப்படி அந்த அம்பாளை ஆதி சங்கரர் குளிர பண்ணினார்.
நம்ம தமிழ்நாட்டுக்கும் ஆதி சங்கரருக்கும் நிறைய தொடர்பு இருக்கு. அங்க திருச்செந்தூர்ல சுப்ரமண்ய புஜங்கம் பாடி இருக்கார். அப்பறம் திருவிடைமருதூர்ல பகவான் அவருக்கு ரெண்டு கைகளையும் தூக்கி அத்வைதமே சத்யம் அப்படின்னு பிரமாணம் பண்ணி இருக்கார். ஆதி சங்கரர் புத்தர்களோடு வாதாடும் போது. இங்க கேரளத்தில் காலடியில் தான் பிறந்தார். தமிழ்நாட்டுக்கு நிறைய வந்திருக்கார். ராமநாத ஸ்வாமியை தரிசனம் பண்ணி பாடி இருக்கார். திருப்பதியில் தனாகர்ஷண யந்த்ரம் பிரதிஷ்டை பண்ணினார். கடைசியில் காஞ்சீபுரத்துக்கு வந்து இருக்கார். இங்கே காஞ்சீபுரத்துலேயும் காமாக்ஷி தேவி உக்ரமாக இருந்த போது சாம்யம் பண்ணி ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை பண்ணி இருக்கார். இங்கே சர்வக்ஞ பீடம் எறி இருக்கார். சௌந்தர்ய லஹரி ஸ்தோத்ரம் பாடி இருக்கார். அப்பறம் ஒரு மடம் ஸ்தாபனம் பண்ணிட்டு காமாக்ஷி அம்பாளோடு ஐக்கியம் அடைந்தார் னு சங்கர விஜயத்துல சொல்லி இருக்கு. அந்த சங்கர விஜயத்தை நாம் பார்ப்போம்.
இந்த சங்கர சரித்ரத்தை எதுக்காக படிக்கணும் அப்படின்னு மூலத்துலேர்ந்து பார்த்தோம்னா, இப்ப இந்த உலகத்துல பணம் சம்பாதிக்கறோம். சுகத்தை தேடறோம். அனுபவிக்கறோம். ஆனா அதெல்லாம் வந்து ரொம்ப அல்ப சுகமாக இருக்கு. சாப்பிட்டா திருப்தியாக இருக்கு. ஆனா சாப்பிட்டு முடிஞ்ச உடனே அந்த சுகம் போயிடறது. கொஞ்சம் ஜாஸ்தியாக சாப்பிட்டா அது உடம்பை கெடுத்துடறது. அப்படி இந்த உலகத்துல கிடைக்க கூடிய சுகங்கள் எல்லாம், புலன்கள் மூலமாக அனுபவிக்கறது எல்லாம் வடிஞ்சு போயிடறது. அது சிற்றின்பமாக இருக்கு. இது நமக்கு நம்முடைய அனுபவத்துலேர்ந்து தெரிகிறது. இப்படி அல்லாமல், மாறாத அழியாத ஒரு சந்தோஷம் ஒண்ணு இருக்கு அப்படிங்கறது, மகான்களுடைய அனுபவம்.
அதை வேதத்துல பிரவ்ருத்தி மார்க்கம், நிவ்ருத்தி மார்க்கம் அப்படின்னு ரெண்டாக சொல்றா. பிரவ்ருத்தி மார்க்கம் னா உலகத்தில் பிரவ்ருத்திச்சு கார்யங்கள் பண்ணி அதை ஒழுங்கா orderly யாக பண்றது பிரவ்ருத்தி மார்க்கம். இந்த கார்யங்களை எல்லாம் விட்டு விட்டு ஞான விசாரம் பண்ணி பிரம்ம நிஷ்டைல இருக்கறது நிவ்ருத்தி மார்க்கம். இந்த ரெண்டு மார்க்கமும் மறையாம இருக்கணும், எல்லாருக்கும் தெரியணும். ஒவ்வொருத்தரும் பிரம்மச்சர்யம், க்ருஹச்தாஷ்ரமம், வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற வழியில் போய் வாழ்க்கையில் முடிந்த முடிவான ஜீவன் முக்தியை அடைய வேண்டும் அப்படிங்கறது தான் goal. "ஜீவஸ்ய தத்வ ஜிஞாஸா" வாழ்க்கையின் பயன் அது தான் அப்படிங்கறதை ஞாபகப் படுத்தறதுக்காக, மேலும், புன்யசாலிகளுக்கு அந்த வழியில் போக வழி காண்பிக்கறதுக்காக பகவான் தானே அவதாரம் பண்ணி, ஞானாசார்யனாக, ஆதி சங்கரராக வந்து வழி காட்டினார்.
இதை எப்படி புரிஞ்சுக்கலாம் னா கம்ப ராமாயணத்தோட சுந்தர காண்டத்தில் கடவுள் வாழ்த்து பாடல் ஒண்ணு இருக்கு
'அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால் அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே மறைகளுக் கிறுதி யாவார்.'
அலங்கல் என்றால் மாலை, பூமாலை. ஒரு சாயங்கால வேளையில் ஒரு பூ மாலையை பார்த்து ஒருத்தன் அரவு, பாம்புன்னு நினைச்சு பயந்துண்டுட்டானா, பயந்து அடிச்சுண்டு அங்கேர்ந்து ஓடி வரான் "ஐயோ ஐயோ பாம்பு பாம்பு" னு எதிரில் வர ஒருத்தன் "டேய், இங்கே எங்கேடா பாம்பு வரப் போறது. வா போய் பார்க்கலாம் " அப்படின்னு சொல்லி அங்கே போய் பார்த்தால் "ஒ! மாலையா, நான் பாம்புன்னு நினைச்சு பயந்துட்டேன்" அப்படிம்பான்.
அப்படின்னா பாம்பு னு நினைச்ச போது பயம் இருந்தது. இப்போ மாலைங்கற தெளிவு வந்த போது அவனுக்கு பயம் போயிடுத்து. அப்போ அது மாலை தானே! அது பாம்பு கிடையாது. அப்படி பரம்பொருள் இந்த ஐந்து பூதங்களாகவும் இந்த உலகமாகவும் காட்சி அளிக்கிறது. இந்த உலகத்தை பரம்பொருளாக உணர்ந்தவனுக்கு இதிலிருந்து, இந்த உலகத்தில் அவனுக்கு காமமோ, கோபமோ, பயமோ, மத மோஹ மாத்சர்யங்களோ எதுவும் இல்லாமல் அவன் சாந்தமாக ஆனந்தமாக இருக்கான். இதில் ரொம்ப ஈடுபட்டு இதை ரொம்ப உண்மைன்னு நினைச்சுண்டு இருக்கறவாளுக்கு, இதிலேர்ந்து அவாளுக்கு பயங்கள் ஏற்படறது. ஆசை ஏற்படறது. இதையே வந்து திருமூலரும்
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே
அதாவது ஒரு தச்சன் ஒரு யானை பண்ணி வெச்சுருக்கானாம், இன்னொரு தச்சன் அது எப்படி இருக்குன்னு பாக்கறதுக்காக வரான், அப்போ தன்னோடைய குழந்தைய கூட்டிண்டு போறான். அந்த ஐஞ்சு வயசு குழந்தைய கூட்டிண்டு வரான், அந்த யானையை பார்த்தே உடனே, கோவிலுக்காக பண்ண யானை ஓரளவு பெருசா இருக்கு, அத பார்த்தவுடனே இந்த குழந்தை வந்து, "ஐயோ யானைப்பா யானைப்பா"ன்னு பயப்படறது. அப்பா சொல்றார், "யானை இல்லைடா மரம் தான் இது"ன்னு அவருக்கு மரம்ங்கற அறிவு இருக்கறதால அவருக்கு அதுல யானை தெரியலை மரம் தான் தெரியறது, இந்த பையனக்கு பார்த்த போது மரம் தெரியலை யானைதான் தெரியறது, அந்த மாதிரி இந்த உலகத்தை, இதுல இருக்கற இந்த பரம்பொருளாக காட்சி அளிப்பது பகவான்தான் அப்படின்னு தெரிஞ்சவாளுக்கு, இந்த உலகம் அவா கண்ணனுக்கு தெரியல. இந்த உலகத்தை சத்தியமா நினைக்கறவாளுக்கு கடவுள் தெரியல. அப்படி இந்த உலகத்துல நாம அக்ஞானத்தோடு இருந்தாலும், அந்த உண்மைய மஹான்கள் சொல்றா.
மஹாபெரியவான்னு ஒருத்தர் இருந்ததுனாலே, இதை நம்ம explainஏ பண்ணவேண்டாம், இப்படி இரு நூறுவருஷம் இந்த உலகத்துல வாழ்ந்து, ஆனா கொஞ்சம் கூட இதுல வந்து பற்றில்லாம, ஒரு ப்ரம்மச்சர்யத்தோட, சன்யாஸ ஆஸ்ரமத்துல, ஒரு நூறு வருஷங்கள், ஒரு வாய் பொரியை சாப்பிடுண்டு, தினம் கிலோமீட்டர் கணக்கா தேசம் முழுக்க நடந்து, எல்லாருக்கும் ஞான உபதேசம் பண்ணி, இப்படி ஒருத்தர் இருக்க முடியுமா, அப்படின்னா, அவருக்கு என்ன source of energy ன்னா, அது தான் ஞானம். அத மாதிரி ஒண்ணு இருக்கு அப்படிங்கறது பெரியவாளை பார்த்ததுனால நமக்கு தெரியறது, இப்படி இரு நிலை இருக்கு அப்படின்னு, நமக்கு நம்முடைய நிலையை விட இது ரொம்ப உயர்ந்த நிலை அப்படிங்கறது, அப்பபோ பளிச் பளிச்சுன்னு புரியறது.
ஒவ்வொருநாளும் எழுந்துக்கறோம் ,சாப்பிடறோம், என்னனமோ அலைஞ்சு திரிஞ்சு அவஸ்தை படறோம். ஆனா மஹாபெரியவாளை பார்த்தாலே, இது மாதிரி ஒரு சந்நிதியை நினச்சாலே, அந்த மாதிரி ஒரு சந்நிதில போய் நின்னாலே, நம்ம மனசு அடங்கி, எல்லா கவலைகளும் ஒழிஞ்சு பரம சாந்தமான ஒரு அனுபவம் ஏற்படறது. அதுனால அப்படியே உடம்பே recharge ஆன மாதிரி இருக்கு.
அந்த அனுபவத்துனால இது அடைய வேண்டிய நிலை "நராணாம் அயன: நாராயண: அப்படின்னு மனிதர்கள் அடைய வேண்டிய உத்தமமான நிலை பகவான் , அந்த பகவானே குரு ரூபமா வந்து அதோட taste ஐ காண்பிச்சுட்டார், இவ்வளவு இனிமையா ஒண்ணு இருக்குமா, இவ்வளவு பேரானந்தமா, சாந்தாம ஒரு நிலை இருக்குமா பார்த்து, அப்படி அது தெரிஞ்சதுனால இந்த நிவ்ருத்தி மார்கத்தை பத்தி கேட்டு, அது என்ன அப்படின்னு பார்க்கறோம்.
நிவ்ருத்தி மார்கத்து மூலமா அத்வைத சித்தியை பேசறதுக்காகத் தான் ஆதிசங்கர பகவத் பாதாள் அவதாரம் பண்ணிணார். இன்னிக்கு இந்த பீடிகை ரொம்ப philosophical ஆ போயிடுத்து. நாளைலேர்ந்து முழுக்க கதையா தான் இருக்கும், குழந்தேளுக்கு சொல்ற மாதிரி, அந்த கேரள க்ஷேத்ரம், பரசுராம க்ஷேத்ரம் எப்படி உருவாச்சு, அதுல சிவகுரு ஆராயம்பாங்கற தம்பதி எப்படி பஜனம் பண்ணி, ஆதிசங்கரர் அவதாரம் பண்ணினது, கூடக்கூட நம்ம மஹாபெரியவா அவதாரம் பண்ணினது, இப்படி சேர்த்துண்டு சொல்லலாம்னு ஆசை படறேன்.
நம: பார்வதி பதயே: ஹர ஹர மஹா தேவா
(transcript will be completed in a short while. You can listen to the rest in the audio below)
ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்? (16 min audio in tamil. same as the script above)
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…