சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(34)*
*சிவ தல அருமைகள், பெருமைகள்.*
(நேரில் சென்று தரிசித்தைப் போல.....)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
*தென்குடித்திட்டை.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:*
வசிஸ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதி நாதர், தேரூர் நாதர், தேனுபுரீஸ்வரர், நாகேஸ்வரர், ஸ்வயம் பூதேஸ்வரர், அனந்தேஸ்வரர், ரதபுரீஸ்வரர்.
*இறைவி:*
உலகநாயகி, மங்களாம்பிகை, மங்களேஸ்வரி, சுகந்தகுந்தளாம்பிகை.
*தலமரம்:* சண்பக மரம்.
(தற்போது இல்லை.)
*தீர்த்தம்:*
சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம், பசு தீர்த்தம், காவிரி தீர்த்தம் ஆகியன.
சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள 128 தலங்களுள் இத்தலம் பதினைந்தாவதுஸதலமாக போற்றப் பெறுகின்றது.
*இருப்பிடம்:*
கும்பகோணம்--திருக்கருகாவூர் நகரப் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது.தஞ்சை- மயிலாடுதுறை இருப்புப் பாதையில் உள்ளன புகை வண்டி நிலையம்.
*பெயர்க்காரணம்:*
காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில்--திட்டில்-- அமைந்துள்ள ஊராதலால் *திட்டை* எனப் பெயர் உண்டானது.
சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலால் *ரதபுரி-தேரூர்* என்றும் அழைக்கப் பெறுகின்றது.
காமதேனு வழிபட்டதால் *தேனுபுரி* எனவும், ரேணுகை வழிபட்டதால் *ரேணுகாபுரி* என்றும் பெயர் உண்டாயின.
உலகத்தில் பிரளயம் உண்டானபோது, இத்தலம் திட்டாக உயர்ந்து இருந்தன.
இறைவன் சுயம்புவாக வெளிப்பட்டு அருள் புரிந்ததாக வரலாறு இருக்கின்றன.
ஆகையினாலே *குடித்திட்டை* எனப் பெயர் உண்டானது.
*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்.* 3-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாட, இத்தலத்திற்குக் கிடைத்த பதிகம் ஒன்றே ஒன்றுதான்.
*கோவில் அமைப்பு:*
வெட்டாற்றின் தென்பகுதியோரத்தில் இத்தலம் அமைந்திருக்கிறது.
இக்கோவிலின் நிலப்பரப்பளவு ஏறத்தாள 73 செண்ட் அளவைக் கொண்டதாகும்.
கிழக்குத் திசை நோக்கிய வண்ணம் சந்நிதி அமைந்துள்ளது.
கோயிலைச் சுற்றியிருக்கும் மதில்கள் பூராவும் செங்கற்களால் கட்டப்பட்டவையாகும்.
இத்தலத்தின் கோவிலுக்கு இராஜ கோபுரம் கிடையாது.
முகப்பு வாயிலை மட்டுமே காட்சி தர நாம் உள் நுழைகிறோம்.
அங்கே, ஒரு புறத்தில் துவார கணபதியும், மறுபுறத்தில் தண்டபாணியும் தரிசனம் தருகிறார்கள்.
மிகவும் பணிவானத் தன்மையுடன் இருவரையும் வணங்கிக் கொள்கிறோம்.
அடுத்து உள் நுழைந்ததும் முன் மண்டபம் இருக்கிறது.
மண்டபத்திலிருக்கும் ஒரு தூணில் வலப்புறமாக நால்வர் வடிவங்களும், மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
மனம் இழகி பக்தியுடன் தொழுது கொள்கிறோம்.
இவ்வடிவங்களுக்கெல்லாம் எதிரான திசையில், இத்திருக்கோயிலை 1926-ல் கற்கோயிலாக கட்டிய பவலான் குடி கிராமம் ராம. கு. ராம. இராமசெட்டியாரின் உருவம் பொறிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
அவர் தம் மனைவியாருடன் கை குவித்து வணங்கும் நிலையில் செதுக்கியிருக்கிறார்கள்.
அச்செட்டியாரின் தொண்டை எண்ணி பக்தி பெருக்கால் தலை தாழ்த்தி மதிப்பு செய்கிறோம்.
இங்கிருக்கும் அனைத்து சந்நிதிகளும் வழவழப்புத் தன்மையுடன் கூடிய கருங்கல்லால் உருவானவை.
கொடிமரம் கூட கருங்கல்லால் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதனின் முன்னால் திருநீற்றுக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
திருநீற்றுக் கோயிலிருக்கும் துவாரத்தினுள் கைகளை நுழைத்து திருநீற்றை எடுத்து அணிந்து கொள்ளலாம் என இங்கிருப்போர் சொல்ல, நாமும் திருநீற்றுக் கோயிலுனுள் திருநீற்றை எடுத்து சிந்தாது சிதையாது அன்னாந்து நெற்றி முழுமைக்கும் அணிந்து கொண்டோம்.
பலிபீடம் உயரமாக இருக்கிறது.
நந்தி இருக்க அவரையும் வணங்கித் தொழுகிறோம்.
வலப்பால் திசையில்அம்பாள் சந்நிதியில் தெற்கு முகமாகப் பார்த்த வண்ணம் அருளோட்சுகிறாள். வணங்கி அருளைப் பெற்றுக் கொள்கிறோம்.
இதற்கு எதிரான திசையில் இருக்கும் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிக்குரியவர்களின் உருவங்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன.
இவ்வுருவச் சிற்பங்கள் பன்னிரண்டும் உரிய கட்டமைப்பில் கல்லினால் செதுக்கப்பட்டிருக்கின்றன. அன்னாந்து பார்த்து ரசித்துக் கொள்கிறோம்.
குருபகவான் தனிச் சந்நிதியில் இருக்கிறார்.
இதற்கடுத்ததாகத்தான் முன் சொன்ன விபரப்படி துவார விநாயகரும், மறுபுறம் கந்தக்கடவுளாரும் காட்சி தர வணங்குகிறோம்.
வெளிப்பிரகாரத்தில் இருக்கும் படிகள் வழியாக மேலேறிச் சென்று நின்று விமானத்தைத் தரிசிக்கலாம்.
கொடிமரம் இல்லாத காரணத்தினால் அந்த மனக்குறையைப் போக்க, விமானத்தை பணிவான வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறோம்.
இந்த விமானங்கள் கருங்கல்லிலானது.
உள் வாயிலில் நுழைந்து செல்லும் போது, சூரியன், விநாயகர் சந்நிதிகளைக் காண்கிறோம்.
அடுத்து, சிறப்பு பெற்ற சிவாச்சூர் காளிதேவியின் மகாமேருவும் சிவலிங்கமும் மரப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அடுத்து இதற்கடுத்ததாக பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, நடராச சந்நிதிகள் இருக்கின்றன.
நவக்கிரக சந்நிதி உள்ளன.
மூலவர் சந்நிதி கிழக்குப் பார்த்த வண்ணமிருக்கிறது. நன்றாக கூர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள்,........சிவலிங்கத் திருமேனி சிறியவுருடன் அருள் வடிவமாகக் காட்சி தருகின்றார்.
இவரின் முன்னால் நந்தி பெருமான் செம்பிலான உலோகத்தால் அமைக்கப்பட்டிருக்கிறார்.
அதுபோலவே பலிபீடத்தையும் அமைத்திருக்கிறார்கள்.
மூலவர் சுயம்புத் திருமேனியானவர்.
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணா மூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், மற்றும் துர்க்கையும் அருள்கிறார்கள்.
சண்டேஸ்வரர் சந்நிதிக்கு வந்த நாம், அவருக்குண்டான முறையைக் கடைபிடித்து வணங்குகிறோம்.
இக்கோயிலின் எதிரிலேயே சூல தீர்த்தம் இருக்கின்றன.
இச்சூல தீர்த்தத்தைச் சக்கரத் தீர்த்தமென்றும் கூறுகிறார்கள்.
இத்தீர்த்தம் பாவத்தைப் போக்க வல்மையானத் தன்மையைக் கொண்டதாகும். தீர்த்த்தை அர்சித்துக் கொள்கிறோம்.
*தல அருமை:*
குடித்வீபம் (குடித்திட்டை) எனப்படுகிறது.
இத்தலத்தை,,,,வசிட்டர்,தேவர், பைரவர், முருகன், பிரமன், திருமால், காமதேனு, ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்டனர்.
சிவலிங்கத் திருமேனியின் மீது வரி வரியான கோடுகள் நான்கு பட்டைகளாகக் காணப்படுகின்றன.
பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் செரிய வைத்திருக்கின்றனர். இவ்வமைப்பு மிகவும் வியப்புக்குரிய சிறப்பு.
இருபத்து ஐந்து மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமி மீது பிரவாகனப்படுகிறது
தொன்று தொட்டு சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக் கல் இருந்து வந்ததாகவும், 1922-ஆம் ஆண்டில் இவ்விமானத்தை புணர்நிர்மானம் செய்த போது, சந்திரகாந்தக் கல்லை அப்படியே வைத்துக் கட்டிவிட்டனராம்.
அதுவே சந்திரனினடமிருந்து ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துக் கொண்டு, சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தலபுராணம் சமஸ்கிருதத்தில் தக்ஷிண குடித்வீப மஹாத்மியம் என்ற பெயரில் உள்ளது.
திரு. வி.பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள சுயம்பூதேஸ்வரர் புராணத்தை ---- இத்தல புராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
நவக்கிரகத்திலிருக்கும் வியாழன் (குரு) தனி சந்நிதியில் சிவனுக்கும், அம்பாளுக்கும் நடுவில் நிற்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
*திருவிழா:*
சித்திரையில் பெரு விழா.
மகாராத்திரி,
திருக்கார்த்திகை,
குருபெயர்ச்சி,
ஆவணி மாதம் 15, 16, 17 -ஆம் தேதிகளில் மற்றும் பங்குனி மாதம் 25, 26, 27-ஆம் தேதிகளில் சூரிய பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது.
*பூஜை:*
சிவாகம முறையில் நான்கு கால பூஜை.
காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்,
திட்டை,
பசுபதி கோயில் அஞ்சல்- 614 206,
தஞ்சை மாவட்டம்.
*தொடர்புக்கு:*
சுவாமிநாத குருக்கள்:
04362-- 252858,
94434 45864.
திருச்சிற்றம்பலம்.
*நாளைய.....தலம், திருப்புள்ளமங்கை. வ(ள)ரும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*