Announcement

Collapse
No announcement yet.

Thirueengoai malai temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirueengoai malai temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    கோவை.கு.கருப்பசாமி.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪₪
    (19)
    சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல......)
    """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    திருஈங்கோய் மலை.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


    இறைவன்:மரகதாலேசுவரர், ஈங்கோய் நாதர்.


    இறைவி: மரகத வல்லி.


    தலமரம்: புளிய மரம்.


    தீர்த்தம்: அமிர்த தீர்த்தம்.


    சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமையப்பெற்றுள்ள அறுபத்து மூன்று தலங்களுள், இத்தலம் அறுபத்து பனமூன்றாவதான தலமாக போற்றப் பெறுகின்றன.


    இருப்பிடம்:
    திருச்சி--சேலம் செல்லும் பாதையில் முசிறிக்கு அன்மையில் இத்தலம் இருக்கின்றது.


    கடம்பந்துறை (குளித்தலை)யிலிருந்து சென்று அகண்டக் காவிரியைக் கடந்தால் இத்தலத்தை அடையமுடியும்.


    பெயர்க் காரணம்:
    அம்பிகை இம்மலையை வழிபட்டதின் காரணமாய் இம்மலையை சிவசக்தி மலை என்று அழைப்பர்.


    அகத்தியர் "ஈ" வடிவெடுத்துச் சென்று சுவாமியைத் தரிசித்ததால், ஈங்கோய் மலை என்று பெயர் பெற்றது.


    இங்கிருக்கும் சிவலிங்கம் மரகதக் கல் போல நல்ல பச்சை நிறத்தில் இருப்பதால் மரகதாலேசுவரர் என்றும் இறைவனுக்கு பெயர் உண்டாக காரணமாயிற்று.


    தேவாரம் பாடியவர்கள்:
    சம்பந்தர் 1-ல் ஒரே ஒரு பதிகம் மட்டும்.


    கோவில் அமைப்பு:
    கோயிலின் அடிவாரத்தில் போக முனிவர் ஆலயம் இருக்கிறது.


    செங்குத்தான படிகளை அதிகம் கொண்டவை.


    மலையேறிச் செல்வதற்கு வசதியாக பரப்பப்பட்டுள்ளன.


    இம்மலை இருபத்தைந்து ஏக்கர் நிலப்பரப்பிளானவையுடன் கோவில் அமைந்துள்ளது.


    கோயிலில் நுழையும் போது தட்சிணாமூர்த்நி, விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.


    கோயிலில் வலமாக வரும்போது, கோவிலின் விசாலமான பழமையான திறந்தவெளி அமைப்பைக் கண்டு பக்தியுடன்ஸரசிக்கலாம்.


    கோவிலின் உள்ளே நவக்கிரகர்கள் சந்நிதியும், நால்வர் சந்நிதிகளும் உள்ளன.


    அம்பாளுக்கும், சுவாமியிக்கும், தனித்தனியே கோயிலும், விமானங்களும், துவஜஸ்தம்பங்கள் உள்ளன.


    இவை கோயிலுள்-மண்டபத்துள் சுவாமி, அம்பாள் முன் நாட்டப்பட்டுள்ளன.


    இவற்றின் நுனிமுனைப் பகுதி கல்மண்டபத்தைத் துளையிட்டு மேலே செலுத்தப்பட்டுள்ளது.


    இது பிற்காலத்தில் புதியதாகச் செய்து வைத்த அமைப்பாக இருக்கலாம்.


    துவஜஸ்தம்பத்தின் முன் விநாயகர் இருக்கிறார்.


    பாலதண்டாயுதபாணி சந்நிதிஸதனியை உள்ளன.


    ஈங்கோய் மலைக் கோயில், வாட்போக்கிமலை கடம்பத்துறையைப் பார்க்கிறது.


    கடம்பந்துறைக் கோயில் ஈங்கோயைப் பார்த்த வண்ணம் இருக்கிறது.


    இம்மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் உள்ளதெனக் காண்போர் கூறுவர்.


    தல அருமை:
    சிவராத்திரியன்று அல்லது முன் நாட்களில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது பிரவாகனப்படுகின்றது.


    சுவாமிக்குத் தீபாரதனை செய்யும் போது தீபஒளி லிங்கத்தில் ஊடுருவிப் பதிந்து நமக்குத் தெளிவாக தெரியச் செய்கின்றது.


    ஒரே நாளில் காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பந்துறை), நண்பகலில் வாட்போக்கியையும், மாலையில் ஈங்கோய் மலையையும் தரிசித்து, தரிசனத்தை நிறைவு செய்வது சிறப்பு.


    சிவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தி.


    மகாசிவராத்திரியின் போது மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படரும்.


    அந்தச் சமயத்தில் லிங்கத்திருமேனி நிறம் மாறி காட்சியளிக்கும். இது மிக சிறப்பான காட்சியானதாகும்.


    அம்மனின் சக்தி பீடங்களில் இது சாயா பீடமாகும்.


    அம்பாளுக்கு சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை இதுவென்பதால், இம்மலையையே சக்தி மலை எனவும் சொல்வர்.


    இதனை உணர்த்தும் விதமாகவே முக மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன.


    அம்மன் நின்ற கோலத்துடன் காட்சியருள் தருகிறாள்.


    அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் உள்ளன.


    கருவறைக் கோஷ்டத்தில் மகிசாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்குக் கீழே மகிசாசுடனும், மற்றொரு துர்க்கை சாந்தம் கலந்த சொரூபியாக காட்சியருள் தருகின்றாள்.


    ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களைக் கான்பது அரிதான அமைப்பாகும்.


    தென்திசை வந்த அகத்தியர் சிவனை வழிபட இங்கு வந்தார்.


    அப்போது கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது.


    தனக்குக் உன்னைக் காணும் பாக்கியம் வேண்டும் என வேண்டினார்.


    மலையடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வந்தால் தன்னை நீ வணங்க முடியும் என அசரீரி ஒலிக்க,.......


    அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடிய போது "ஈ" வடிவம் பெற்றார்.


    பின் மலைக்குப் பறந்து சென்று சந்நிதிக் கதவின் சாவித் துவாரம் வழியாக சுவாமி கருவறைக்கு முன் வந்து, சுவாமியைத் தரிசனம் செய்தார்.


    பின்பு பழைய வடிவத்தைப் பெற்றுக் கொண்டார்.


    அகத்தியர் ஈ வடிவில் வழிபட்டதால் திருஈங்கோய் மலை என்றும், சிவனுக்கு ஈங்கோய் நாதர் என்றும் பெயர் ஏற்பட்டது.


    நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது ஈங்கோய் எழுபது எனும் நூலைப் பாடியுள்ளார்.


    தல பெருமை:
    ஆதிசேடனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர்? எனப் போட்டி ஏற்பட்டது.


    வாயு பகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமான காற்றை வீசச் செய்தான்.


    ஆதாசேடன் மந்திரமலையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டார்.


    அப்படி இறுக்கமாக மலையை இறுக்கிக் கொண்டதனால், மலையான் சிறு சிறுமலை பாகங்கள் பூமியில் தெரித்து விழுந்தன.


    அவ்வாறு விழுந்த மலைபாகத்தின் ஒருபகுதியே இம்மலையாகும்.


    பின் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும், ஈசன் சமாதானம் செய்து வைத்துவிட்டு, இம்மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளிக் கொண்டார்.


    மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், மரகதாலேஸ்வரர் எனப் பெயரானார்.


    திருவிழா:
    பங்குனியில் பிரம்மோற்சவம்.
    மாசி மகம்.
    தைப் பூசம்.
    பெளர்ணமி பூஜைகள் ஆகியவைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


    பூஜை
    சிவாகம முறையில் நான்கு கால பூஜை.


    காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.


    அஞ்சல் முகவரி:
    அருள்மிகு, மரகதாசலேஸ்வரர் திருக்கோயில்,
    திருவிங்க நாதமலை,
    (திருஈங்கோய் மலை.)
    (வழி) மணமேடு,
    தொட்டியம் வட்டம்,
    திருச்சி மாவட்டம்.-621 209


    தொடர்புக்கு
    மணி குருக்கள். 94439 50031
    94431 92145


    தொலைபேசி 04326--262744,
    99441 20135


    திருச்சிற்றம்பலம்.
Working...
X