Announcement

Collapse
No announcement yet.

Rava dosai - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rava dosai - Periyavaa

    "எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?'-பெரியவா


    ( யாருக்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?'னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல தூங்கப் போயிண்டிருந்த உங்களை எல்லாம் கூப்பிட்டு, யாரோ வரப்போறா தோசை வார்த்துவைங்கோன்னு சொன்னா, அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே, எனக்கு வேணும்னு கேட்டா, சிரமத்தைப் பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே? அதனாலதான் அப்படி சொன்னேன்)


    கட்டுரையாளர்-பி. ராமகிருஷ்ணன்
    நன்றி-குமுதம் பக்தி.
    (இது ஒரு மறு பதிவு)


    ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது. கிட்டத்தட்ட பத்தரை... பதினொரு மணி இருக்கும் அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர். பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.


    பரமாசார்யா அந்தப் பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டார்.


    'எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?' அப்படின்ன கேட்டார்.


    எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சர்யம்... அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா, ரவாதோசை வேணும்னு கேட்கறார். அதுவும் எனக்க திங்கணும்போல இருக்குன்னு சொல்றார். எல்லாத்தையும்விட ஆச்சரியம். கிட்டத்தட்ட பாதிராத்திரியை நெருங்கிண்டு இருக்கற இந்த சமயத்துல சாப்பிடப்போறதா சொல்றார்! ஒருநாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடறவர். அதுலயும் பெரும்பாலும் கைப்பிடி நெல் பொரியைத் தவிர வேற எதையும் தவிர்க்கறவர், ரவாதோசை வேணும்னு கேட்கறார்னா அந்த ஆச்சர்யத்தை எப்படிச் சொல்றது? மடத்துல இருந்தவா எல்லாருக்குமே அது பேரதிர்ச்சியான விஷயமா இருந்தது?


    உடனடியா மடத்தோட உக்ராண அறைக்குப் போனவா, ரவா தோசை பண்றதுக்கான பொருட்களை எல்லாம் எடுத்து தயார்படுத்த ஆரம்பிச்சா. அப்போதான் சங்கடமான ஒரு விஷயம் தெரியவந்தது.


    அது என்னன்னா, ரவா தோசை வார்க்கறதுக்கு முக்கியத் தேவையான ரவை ஒருதுளிகூட இல்லைங்கறதுதான்.


    இத்தனை நேரத்துக்கு அநேகமா எல்லா கடையும் மூடியிருக்கும். என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்ச நேரத்துல, ஊர்ல இருந்து வந்திருந்த அந்த மூதாட்டி, விறுவிறுன்னு வெளியில கிளம்பி வேகவேகமா எங்கேயோ போனா.


    கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிசா ஒரு பொட்டலத்துல ரவையை வாங்கித் தூக்கிண்டு வந்தா, ஊர் முழுக்க அலைஞ்சு ஏதோ ஒரு கடை திறந்திருக்கறதைப் பார்த்த அவசர அவசரமா வாங்கிண்டு வந்தது, ரவையைக் குடுத்துட்டு மூச்சு வாங்க அவா நின்னதுலயே புரிஞ்சுது!


    ரவா வந்தாச்சு, அப்புறம் என்ன மளமளன்னு எல்லா ப்ரிபரேஷன்ஸும் செஞ்சு, பத்து பன்னிரண்டு ரவா தோசை வார்த்து, பெரியவாகிட்டே கொண்டு போய் கொடுத்தா.


    அத்தனை தோசையிலயும் இருந்து ஒரு விள்ளல் மட்டும் எடுத்து வாயில போட்டுண்ட ஆசார்யா, 'ரொம்ப நன்னா இருக்கு. திருப்தி ஆயிடுத்து. இதெல்லாம் கொண்டு போய் உள்ளே வெச்சுட்டு எல்லாரும் தூங்கப் போங்கோ!' அப்படின்னார்.


    என்னடா இது ஒரே ஒரு விள்ளல் சாப்பிறதுக்காகவா, இந்த வேளைகெட்ட வேளைல இத்தனை ஆசையா கேட்கறாப்புல கேட்டார்னு எல்லாருக்கும் மறுபடியும் ஆச்சரியம். இருந்தாலும் எதுவும் பேசாம ஆசார்யா சொன்னமாதிரி உள்ளே கொண்டு வைச்சுட்டு தூங்கப் போனா எல்லாரும்.


    கொஞ்ச நாழியாச்சு. ஆந்திராவுல இருந்து நாலைஞ்சு வைதீகாள் (வேத மந்திரங்கள் சொல்லி புரோகிதம் பண்ணறவா) பெரியவாளை தரிசிக்கணும்னு மடத்துக்கு வந்தா. வழியில் ஏதோ தடை ஏற்பட்டதால வர்றதுக்கு இத்தனை நேரம் ஆச்சுன்னும், சொன்னா. ராத்திரி மடத்துலயே தங்கி இருந்துட்டு, விடியற்காலம்பற ஆசார்யாளை தரிசனம் பண்றதாகவும் அனுமதிக்கணும்னும் கேட்டா.


    விஷயத்தை பரமாசார்யாகிட்டே சொல்லப் போனார் ஒருத்தர். ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாலேயே, 'என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும். அவாள்லாம் பாவம் பசியோட வந்திருப்பா, ரவாதோசைகளை எடுத்து வைக்கச் சொன்னேனே, அதையெல்லாம் அவாளுக்கு சாப்பிடக் குடு..!' சொன்னார் மகாபெரியவா.


    விஷயத்தை சொல்லப் போனவர் அப்படியே திகைச்சு நின்னுட்டார். சிலபேர் வருவாங்கறதை முன்கூட்டியே தெரிஞ்சுண்டதே ஆச்சரியம். அதோட அவா பசியோட இருப்பா, அவாளுக்காக ஏதாவது பண்ணிவைக்கணும்கறதையும் மகாபெரியவா தெரிஞ்சுண்டிருக்கார்னா எப்பேர்பட்ட ஞானதிருஷ்டி அவருக்கு இருக்கணும்னு நினைச்சு அவர் அப்படியே மலைச்சு நிற்க, பெரியவா தன்னோட பெருமையெல்லாம் ஒண்ணும் இல்லைங்கறமாதிரி, பேசத் தொடங்கினார்.


    'என்ன அப்படியே நின்னுட்டே? யாருக்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?'னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல தூங்கப் போயிண்டிருந்த உங்களை எல்லாம் கூப்பிட்டு, யாரோ வரப்போறா தோசை வார்த்துவைங்கோன்னு சொன்னா, அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே, எனக்கு வேணும்னு கேட்டா, சிரமத்தைப் பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே? அதனாலதான் அப்படி சொன்னேன்... போய் தோசையை எடுத்து அவாளுக்கெல்லாம் குடுங்கோ... வேதம் சொல்றவா, வெறும் வயத்தோட தூங்கக்கூடாது... எல்லாரும் திருப்தியா சாப்டுட்டுத் தூங்கட்டும். பாவம் ரொம்ப தூரம் அலைஞ்சு வந்திருக்கா! சொல்லி முடிச்சார் பரமாசார்யா


    வந்திருந்த வைதீகாள் எல்லாரும் ஆந்திராவை சேர்ந்தவா. அவாளுக்கு ரவாதோசைன்னா ரொம்ப இஷ்டமாம். தங்களுக்காக பெரியவா நடத்தின லீலையைக் கேட்டு சிலாகிச்ச, கண்ணுல ஜலம் வழிய நெகிழ்ந்து போனா. அந்த மகேஸ்வரனே தன்னோட பிரசாதத்தை தங்களுக்குத் தந்ததா நினைச்சுண்டு ஆனந்தமா சாப்பிட்டா. நிம்மதியா தூங்கி எழுந்து மகாபெரியவாளை மனம் குளிர தரிசனம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிண்டு சந்தோஷமா புறப்பட்டா.


    சுவாமிக்கு நைவேத்யம் பண்றதே. அது பிரசாதமா பலருக்கும் கிடைக்கணும்கற நல்ல நோக்கத்தோடதான். இங்கே சுவாமி தானே கேட்டு வாங்கிண்டு அதை மத்தவாளுக்கு கிடைக்கப் பண்ணின மாதிரி மகாபெரியவா, வரப் போறவாளைப் பத்தி முன்கூட்டியே தெரிஞ்சுண்டு, அவாளுக்குப் படிச்ச ரவா தேசையை தனக்கு வேணும்னு கேட்டு செய்யச் சொல்லி அதையே அவாளுக்கு கிடைக்கப் பண்ணியிருக்கார்னா, அவரை பரமேஸ்வரனோட அம்சம்னு சொல்றதுல என்ன தப்பு இரு்க முடியும்?

  • #2
    Re: Rava dosai - Periyavaa

    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X