Announcement

Collapse
No announcement yet.

Thirukadavur temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirukadavur temple

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *திருக்கடவூர் எனும் திருக்கடையூர் தலம்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    திருக்கடவூர் என்னும் இத்தலத்தின் பெயரே திருக்கடையூர் என வழங்கப்பெற்றது.


    இவ்வாலயத்தில்தான் பிரம்மன் ஞானவுபதேசம் பெற வேண்டி இறைவனை வணங்கினான்.


    ஈசனும் தன் சிவஞானத்தை வில்வ விதையாக்கி அவ்விதையை பிரம்மனிடம் கொடுத்து, இவ்விதைகளை விதைத்து வா! இவ்விதை எத்தலத்தில் வில்வவிருக்ஷ்சமாகிறதோ அவ்விடத்தில் உனக்கு ஞானவுபதேசத்தை அளிக்கிறேன் என கூறி அவ்விதைகளை பிரம்மனிடம் அளித்தார்.


    அவ்விதைகளை பெற்றுக் கொண்ட பிரம்மன்,ஒவ்வொரு தலமாக விதைத்து வர, திருக்கடையூரில் விதைத்த போது, அவ்விதை வில்வமரமாகியது.


    அவ்வில்வ மரத்தினடியிலே சிவபெருமான் லிங்க வடிவில் புறப்பட்டெழுந்தார். அவ்விலிங்க வடிவிலேயே பிரமனுக்கு ஞானவுபதேசத்தை வழங்கினார்.


    ஆதலால்தான் இவ்வாலயம் *வில்வராண்ய க்ஷேத்திரம்* என வழங்கப்பட்டன. ஆதலால் இவ்வாலயம் நாம் செல்ல நேரும்போது, இந்த வில்வ வனநாதரைத்தான் முதலில் வணங்கிப் பின் ஆலயம் உள்செல்வது மரபு.


    இத்தலத்தின் தலமரம் *வில்வமரம்.*


    தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, மலையை மத்தாக்கி திருப்பாற்கடலை கடைந்தார்கள்.


    ஒவ்வொன்றாக வெளிப்பட்டவைகள் போக கடைசியாக அமிர்தம் கிடைத்தது. அவ்வமிர்தத்தை குடத்திலிட்டு அடைத்து வைத்து விட்டு, நீராடிவிட்டு வந்து பருகலாம் என நினைத்தார்கள்.


    அதன்படி நீராடிவிட்டு வந்து பார்த்த போது, அமிர்தகல குடத்தைக் காணவில்லை. திகைத்த அவர்கள் இறைவனை வேண்டி வணங்கினார்கள்.


    அப்போது அசரீரியாக வாக்கு ஒலித்தது...*விநாயகப் பெருமானை நீங்கள் வணங்காத காரணத்தால் அமிர்தகலச குடம் மறையும் நிலை ஆனது. எனவே விநாயகப் பெருமானை நினைத்துருகி துதியுங்கள் பலன் கிடைக்கும் என்றன.


    அதன்படி விநாயகப் பெருமானை வணங்கித் துதித்தார்கள்.


    விநாயகப் பெருமான் அமிர்தகலச குடத்தையெடுத்து மறைத்தமையால் கள்ள வாரண விநாயகர் எனவானார்.


    இவர்தான் க்ஷேத்திர வினாயகர் விநாயக பெருமானிடத்து வாங்கிய அமிர்தகலசத்தை வைத்து கரண்டியால் அள்ளியெடுக்கும்போது, அக்கலச குடம் லிங்கமாகத் தோன்றிக் காட்சி தந்தது. காட்தந்த இவரே *அமிர்தகடேச பெருமான் ஆவார்.


    சிவபெருமானை சக்தி இல்லாமல் வணங்குவது உசிதமில்லையே என்று இறைவனை வேண்டினார் மகாவிஷ்ணு.


    அதற்கு ஈசன், உன்னுடைய ஆபரணங்களை வைத்து மனோன்மணி என்ற சக்தியை நினை என்று கூறினார்.


    அப்படியே மகாவிஷ்ணு செய்ய, அம்பாள் அபிராமி தௌன்றி காட்சி கொடுத்தாள்.


    அபிராமி கிழக்கு நோக்கிய சன்னதி கன்னியாகுமரியில் கடலை நோக்கி கன்னியாகுமரி அம்மன் இருப்பது போல, இத்தலத்திலும் அம்மன் கடலை நோக்கிய வண்ணம் இருக்கிறாள்.


    இறைவனை இறைவி பார்க்கும் வண்ணமுமாய், அதேபோல் இறைவியை இறைவன் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளன.


    மிருகண்டு முனிவர் பிள்ளை பேறு இல்லாத காரணத்தால் இறைவனை வேண்டி பிள்ளை பிள்ளைபேறு கிடைக்க வேண்டினார்.


    இறைவனும் பிள்ளை உண்டாக வரமளித்ததோடு பதினாறு ஆண்டுகளே இவனுக்கு வாழும் வயது எனவருளினார். அதன்படி புத்திர பாக்கியமாக வந்தவர்தான் மார்க்கண்டேயர்.


    மார்க்கண்டேயன் தன்னுடைய பதினாறு வயது பூர்த்தியாகும் அமிர்தகடேசரை வணங்கிக் கொண்டிருக்கும் போது, மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த எமன் பாசக் கயிற்றினை மார்க்கண்டேயன் மேல் வீசியெறிந்தான்.


    எமன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயனோடு இறைவனையும் சேர்த்து அப்பாசக்கயிறு விழவும், அப்போது கயிற்றினை எமன் இழுத்தமையால், லிங்கம் இரண்டாக வெடித்துப் பிளந்தது.


    உள்ளிருந்த வெளிப்பட்ட இறைவன் எமனை காலால் உதைத்து,சூலத்தினால் குத்தி, எமனை சம்ஹாரம் செய்தார்.


    அதோடு *மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு* எனும் வரத்தையும் அளித்து, தன்னுடன் அமர்த்தினார்.


    பூமாதேவி பூமி பாரம் தாங்காமல் இறைவனை வேண்டினாள். இறைவன் பூமாதேவியின் வேண்டுதலுக்காக எமனை உயிர்ப்பித்தார். அவரே *காலசம்ஹாரமூர்த்தி* எனவான காலனை வென்றவர்.


    காலசம்ஹாரமூர்த்தி இவரே ஆயுள்விருத்தி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், உக்ரரத சாந்தி ஹோமம், (59-வயது பூர்த்தி), சஷ்டி தேவதா ஹோமம் (60-ஆம் ஆண்டு நிறைவு விழா), பீமரத சாந்தி ஹோமம் (70- வயது ஆரம்பத்திற்கு), சதாபிஷேகம் (80- வயது நிறைவுக்கு), போன்ற வைபங்கள் கொண்டாட இவரை வழி பட வேண்டும் (ஆவாஹனம் செய்தல் வேண்டும்.), எனவே இந்த ஊரில் செய்வது புண்ணியமாகும்.


    இவ்வாலயத்திற்கு அப்பர் பெருமான், சுந்தரர், திருஞானசம்பந்தர் போன்றோர் பாடியுள்ளனர்.


    குங்கிலியக் கலயனார்,காரி நாயனார் அவதரித்துத் தொண்டாற்றி முக்தி அடைந்த திருத்தலமும் இதுவாகும்.


    உய்ய வந்த தேவநாயனார் அவதரித்து திருக்களிற்று படியார் எனும் சிறப்பான நூலை இயற்றியவர் இவரே. கி.பி. 1177-ஆம் ஆண்டில் இரண்டு நூல்கள் இயற்றியவர். இவர் இயற்றிய நூலை யாவரும் ஏற்க மறுத்தனர். தில்லை மூவாயிரத்தார் முன் பஞ்சாட்சற படியில் வைக்க, அதனை யானை உருக்கொண்டு அந்நூலை இறைவன் தொட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருக்கடவூரில் அந்தணர் மரபில் அவதரித்த பட்டர் அபிராமியின் திருவுருவத்தை தன் இதயத்தில் நினைத்து அம்மையின் நினைவாக இருந்த நேரத்தில், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் வழிபாடு ஆற்றிய பட்டரை கண்டு இவர் யார் என வினவ,....


    அதற்கு சிலர்,.... இவர் பித்தர். நல்லொழுக்கம் இல்லாதவர் என கூறினார்கள் அங்குள்ளவர்கள்.


    இவரின் நிலையை அறிய இன்று என்ன திதி என்று மன்னன் கேட்க....


    பட்டரின் மனதில் அம்பாள் பிரகாசிக்க, இன்று பெளர்ணமி எனக் கூற , இதைக் கேட்ட மன்னன், இன்று நிலவு வரவில்லை என்றால் மரண தண்டனை என்று மன்னன் கூறிச் சென்றான்.


    தவம் கலந்தபட்டரை பார்த்து அங்குள்ளவர்கள் தை அமாவாசை, எப்படி நிலவு வரும் என்று கேட்க, அதைக் கேட்ட பட்டர் மனம் வருந்தி அம்மை மேல் பக்தி கொண்டு அக்னியை மூட்டி, உறிகட்டி, (கயிர் உறி) அதில் அமர்ந்து அம்பாள் மேல் பாடத் தொடங்கினார்.


    முதல் பாடலாக உதிக்கின்ற செங்கதிர் என்ற பாடலைத் தொடங்கி, விழிக்கே அருள் உண்டு என்ற.பாடலை கேட்ட தேவி, தனது திருவுள்ளம் இறங்கி காதிலிருந்த சக்கர தாடங்கத்தை வானில் வீசி நிலா ஒளி உண்டாக்கினாள்.


    அவ்வொளி கண்டு காவேரி பூம்பட்டினத்தை பூம்புகார் என்று வழங்கும் இடத்தில் தங்கியிருந்த அரசனுக்கு நிலவு தெரிய வர, திடுக்கிட்டுத் திருக்கடவூர் புறப்பட்டு இப்படிப்பட்ட பக்தியுள்ளவரை நிந்தனை செய்து விட்டோமோ என்று வருந்தி பட்டரின் காலில் விழுந்து *அபிராமி பட்டர்* என்ற பட்டத்தை அளித்து தஞ்சை தரணியிலேயே ஒரு காணி நிலம் இருந்தாலும் ஒரு மரக்கால் நெல் அளக்க வேண்டும் என்று கட்டளையிட்டுச் சென்றார்.


    இறைவனை வழிபட்டவர்கள் புண்ணிய வர்த்தனர், பாவ விமோசனர், குங்குலிய கலிய நாயனார், காரி நாயனார், சப்த கன்னிகள், நவதுர்க்கை, சிபி, பிரம்மன், வாசுகி, சோம சர்மன், சிவ சர்மன், ஏமகிரிடன், இரத்தின கயிடன், சந்திரபூஷனன், பிருமாதிராஜன், இரத்தினாகரன், பஞ்ச சூர்யர்கள், மார்கண்டேயர் இன்னும் பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு முக்தியின்பம் பெற்றார்கள்.


    முதலாம் இராஜராஜன், மூன்றாம் இராஜராஜன், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், குலசேகர பாண்டியன், விஜயநகர வேந்தருள் கிருஷ்ண தேவராய முக்கண்ணமுடையார், திருபுவன சக்கரவர்த்தி, ராஜராஜன், விக்ரம சோழன், விஜய ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன், ஜடாவர்மன், வீரபாண்டியன், விருப்பண்ண உடையார், கொழும்பு அரசன், போன்றோர்கள் இவ்வாலயத்தை கட்டிய தொடர்புடையவர்கள்.


    அமிர்தகடேஸ பெருமானுக்கு கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட் கிழமையும் 1008 சங்கு வைத்து பூஜை செய்வர். பூஜை செய்தபின் அச்சங்குத் தீர்த்தத்தை உட்கொண்டால் சகல வியாதிகளும் ஒழிந்து போகும்.


    பிரஹதீச மஹாராஜனின் பாவப்பிணி நீக்கப்பட்டதன் காரணமாக இச்சோமவாரம் ஏற்பட்டது.


    காலசம்ஹார திருவிழா சித்திரை மாதத்தில் 18-ஆம் நாள் திருவிழாவாக நடைபெறும்.


    அதில் முக்கியமான திருவிழா சித்திரை மாதத்தில் மகம் நக்ஷத்திரத்தில் காலசம்ஹாரம் நடைபெறும்.


    இவ்விழாவைக் காண கோடிக் கண்கள் வேண்டும்.


    அபிராமி அம்மனுக்கு ஆடி மாதம் 10-ஆம் ஆடி பூரம் உற்சவம் நடைபெறும்.


    புரட்டாசி 9-ஆம் நாள் நவராத்திரியும் நடைபெறும்.


    தை அமாவாசை அன்று அபிராமி பட்டரின் வரலாற்று சிறப்புடைய அமாவாசையை பெளர்ணமியாக்கும் விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.


    தீர்த்தங்கள்:, விசேஷ கால தீர்த்தம், காலனால் பூசிக்கப்பட்ட கால காளீஸ்வரர் ஆலய தீர்த்தம், அமிருத புஷ்கரணி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்,


    பங்குனி மாதம் சுக்ல பட்சம் அசுவனி நக்ஷத்திரத்தில் திருக்கடவூர் மயானம் என்னும் ஷேத்திரத்தின் கிணற்றில் நீராடினால், காசிக்குச் சென்று வந்த பலன் உண்டாகும்.


    இத்தீர்த்தம் தினந்தோறும் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வர பெருமான், அபிராமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது.


    அந்த தீர்த்தத்தோடு சேர்ந்து வந்த முல்லைக் கொடி செடி, (ஜாதிமுல்லை) பிஞ்சிலம் இதுவும் இக்கோயிலில் தலவிருட்ஷம்.


    பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது கிரஹ தோஷங்கள் நிவர்த்தியாகும். மனதில் நினைத்த காரியமாவும் கைகூடும்.


    இவ்வாலயத்தில் நவக்கிரஹங்கள் கிடையாது. நவக்கிரஹங்கள் ஒன்பதும் ஒரு மனிதனை ஆட்டிவிக்கும் செயல் கொண்டது.


    எமனோ மனிதன் உயிரைக் கொண்டு செல்லக்கூடிய சக்தி படைத்தவர். அந்த எமனையே இவ்வாலயத்தில் சம்ஹாரம் செய்ததனால் நவக்கிரஹத்திற்கு சக்தி இல்லை.


    * ஒன்பதும் ஒன்றாகி உருவான இறைவன் அமிர்தகடேஸ பெருமான் ஆவார்.*


    திருச்சிற்றம்பலம்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X