Announcement

Collapse
No announcement yet.

Perur temple part36

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part36

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும்.பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(36)*
    ☘ *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* ☘
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *குலசேகரன் குட்டநோய் தீர்த்த படலம்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    மலைநாட்டிலே, சேரர் குலத்தில் குலசேகரரனென்னும் மன்னன் உதித்தார்.


    அவர் அரசாட்சி புரியுங்கால், அவன் உடலின்கண்ணே குட்டநோய் வந்து சேர்ந்தது.


    இந்நோயோடு போராடிக் கொண்டு அரசாள்வதில் அவனுக்கு வேறுப்பாக இருந்தது.


    உடனை, வைத்தியர்களை வரவழைத்து *"என்னை வருத்துகின்ற நோயை வருத்தொழிக்கக்க செய்வீர்"* என வேண்டினான்.


    மன்னனின் வேதனையை கேட்ட வைத்தியர்கள், வாகட நூல்வழியே சூரணம், இலேகியங்கள், நெய், குளிகை, நீறு, சிந்தூரம் முதலிய *மருந்துகள் அமைத்துக் கொடுப்பதே கடனும்,*


    *அரசனுக்கு அம்மருந்தை அருந்துவதே கடனும்*


    *நோய்க்கு வருத்துவதே கடனுமாயினவன்றி நோய் நீங்காமையால் மருந்தினைக் கைவிட்டு அரசன் அறங்கள் பலவற்றையுஞ் செய்து வந்தான்.*


    இவ்வளவானவளவிலும் நோய் நீங்கப் பெறாது போகவே, *சிவத்தல யாத்திரையை செய்து வந்தான்.*


    இச்சிவத்தலயாத்திரையை விரும்பிச் செய்து வருங்கால் வியாதி அதிகமாகாமலும் குறைவுமாகாமலும் சமநிலையிலே இருப்பதை மன்னன் உணர்ந்தான்.


    இதனால் களிப்புற்ற மன்னன் ஆண்டுகள் தோறுஞ் சிவத்தல சேவை செய்து ஒரு வருடத்திற்குள்ளாக தனது பதியை விட்டுப் பல தலங்களையும் சென்று வணங்கிப் பணிந்து, பின் இராமன் வழிபட்ட இராமேச்சுரத்தை அடைந்து பெருமானை வணங்கினான்.


    இராமேச்சுரத்தை வணங்கித் திரும்பி வரும்பொழுது நேர்பட்ட நாரதமுனிவர், *கோவை திருப்பேரூர் சென்று, அங்குள்ள காஞ்சிமா நதியில் மூழ்கி, சுவாமியையும் அம்மையையும் தரிசித்தால் உன்னை அன்டிய குட்டநோய் அக்கணமே ஒழிந்தொழியும்!* என கூறினார்.


    மன்னன் அவ்விதமே சென்று காஞ்சிநதியில் மூழ்கி இறைவனையும் இறைவியையும் பணிந்து வணங்கித் தொழ, அக்கணமே குட்டநோய் விட்டொழிந்து போனது. மேலும் அழகிய தேசாகுவான திரேகத்தையும் பெற்றான்.


    பின்பு அரசன் *"நேசம் சிறிதுமில்லாது பாசம் பெரிதுமுடைய நீசனேனிடத்தும் ஈசனார் செய்த பெருங்கருணை யிருந்தபடி என்னை"* என்று நைந்து நைந்துருகிப் பட்டீசப் பெருமானுக்கு முட்டில்லாத பல திருப்பணிகள் செய்வித்து, அப்பட்டீசர்- பச்சைநாயகியை விட்டு நீங்காது வதிந்து பக்தி செய்து பெத்த நிலைகுலைந்து முத்திநிலை சித்திக்கப் பெற்றான் அம்மன்னன்.




    திருச்சிற்றம்பலம்.


    கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் இன்னும் வ(ள)ரும்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X