Announcement

Collapse
No announcement yet.

Perur temple part27

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part27

    **சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *(27)*
    *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    *வியாதன் கழுவாய்ப் படலம்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    காசித் தலத்திலே, சிவபிரானைத் தொழுது பல முனிவருந் தவஞ் செய்யும் போது ஒரு நாள்.......'விட்டுணுவே பரம்பொருளென்றும், உருத்திரனே பரம்பொருளென்றும் கலகஞ் செய்து, வியாச முனிவரை வினவினர்.


    அதற்கு வியாச முனிவர்," *"வேதங்களெல்லாம் விளக்கும் பரம்பொருள் விட்டுணுவே"* என்றபோது விட்டுணுவைச் சார்ந்த முனிவர்கள் மகிழ்ந்தனர்.


    உருத்திரமூர்த்தியே பரப்பிரமென்னும் முனிவர் குழாங்கள் வியாச முனிவரை நோக்கி, *"உயர்ந்தோர் அனைவருஞ் சிவபிரானே பரமென்று தெளிந்திருக்கவும்,* அதற்கு விரோதமாக விரோதமாக நீவிர் கூறினமையால், விசுவேசர் சந்நிதானத்தில் விட்டுணுமே பரமென்று கூறுவீராயின் அதனை உறுதியாகக் கொள்வோம்" என்றனர்.


    அதனைக்கேட்ட வியாச முனிவர் தீயூழினாற் சற்றும் அஞ்சாது கங்காநதியில் மூழ்கி, விசுவேசர் திருமுன்னர்ச் சென்று சிரசின் மீது இரண்டு கைகளையும் மேலுயர்த்திக் கொண்டு, *"விட்டுணுவேபரம்"* என்று சொன்னார்.


    அதனையுணர்ந்த திருநந்தி தேவர் வியாச முனிவரை நோக்கிக் கோபித்துச் சாபமிட்டவளவில், மேலேயுர்த்திய கையோடு நாவுந் தழுதழுக்க, விசுவேசர் சந்நிதியில் நாட்டிய வெற்றித் தம்பம்போல வியாச முனிவர் நின்றார்.


    விட்டுணுவைப் பரமென்று கருதும் மதத்தாரன்றி மற்றைய பல மதத்தினரும் விசுவநாதரே பரப்பிரமமென்று மெய்ம்மையாக வுணர்ந்து உய்ந்தார்கள்.


    அப்பொழுது வியாச முனிவர் விட்டுணுவைத் தியானிக்க அவர் அங்கே வந்து வியாசரை நோக்கி "ஏ வியாசனே, நீ என்னையுங் கெடுக்க, இங்கே எத்தனைப் பெருங் கொடுஞ் செய்கை புரிந்தாய்? சிவபெருமான் அருட்சத்தி எங்கும் வியாபித்திருத்தலால் என்போன்ற தேவர்களாகிய பசுக்களையும் பதியென்று வேதங்கள் உபசரித்து ஓதியதாம். ஆதலால், ....


    தசஷணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்குஞ் சிவபிரான் திருவடிகளைத் தியானித்து உய்யக் கடவாய்" என்று சொல்லி மறைந்தனர். வியாச முனிவர் அதனைக் கேட்டுச் சிவபெருமானைச் சிந்தித்துக் காத்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தார்.


    பிரமாவும், விட்டுணுவும் இரு பக்கத்தும் பாதுகைகளைத் தாங்கும் வண்ணம் இடபாரூடராய் விசுவநாதர் எழுந்தருளி வியாசரை நோக்கி "நின்னாலே முதல்வனாகச் சுட்டப்பட்ட விட்டுணு நமது அகத்தொண்டின் கண்ணே நிற்பதைக் காண்பாய்.


    நமது தன்மையிற் சிறிதும் அறிவாய். நீ புரிந்த குற்றம் பெரிதாயினும் நம்மைத் தியானித்தபடியால் திருப்பேரூரைச் சார்வாயாகிற்றீரும்" எற்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். உடனே வியாச முனிவர் திருப்பேரூர் சேர்ந்து காஞ்சி நதியில் மூழ்கி, வெள்ளியங்கிரியை அடுத்து சுவாமியைத் தரிசித்துத் துதித்தவளவில் கைகளுந் தாழ்ந்து நாவும் அசைவுற்றது. அப்பொழுது கைகளாற் சிவபூசை செய்து நாவினாற் புகழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்தனர்.


    திருச்சிற்றம்பலம்.


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*


    *அவன் அருள் தானே வரும்.!*
    *அவனருள்தானே வரும்.!*
Working...
X