Announcement

Collapse
No announcement yet.

Perur temple part15

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part15

    **சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *( 15 )*
    *திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


    *அபயப் படலம்.*


    சிவபெருமான் தன்னைத் தக்கன் வேற்றுமை செய்து தேவர்களோடு யாகம் புரிந்தமைபற்றி, வீரபத்திரக் கடவுளைக் கொண்டு அவர்களைத் தண்டித்தார்.


    யாகத்தை அழித்தார். எஞ்சியேயான பாதகத்தையும் நுகர்வித்துப் போகும்படி திருவுளங் கொண்டார்.


    அக்காரணத்தினால், மாயையிடத்தே காசிப முனிவர் கலந்து, சூரன், சிங்கமுகன், தாரகன், என்னும் மூவரைப் பெற்றார்.


    அம்மூவரும் ஆபிசார வேள்வி இயற்றிச் சிவபிரானிடத்திலே வரம்பெற்றுத் திருமால் முதலான தேவர்களின் ஆற்றலை அகற்றி, ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் ஆணை செலுத்தினார்.


    அப்போது இந்திரன் முதலானோர் திருக்கைலாச பதியைச் சேர்ந்து சூரன் முதலியோரைப் போக்கித் தங்களைக் காக்கும் வண்ணம் விண்ணப்பம் பண்ணினார்.


    அதற்குச் சிவபிரான் "சூரன் முதலியோரை வெல்லும்படி நமது நெற்றிக் கண்ணிற்றோன்றும் ஆறுமுகன் வருமளவும், ஆதிபுரியை அடைந்து நீவிர் வதிந்தால் அசுரர் பயம், பிணி,துன்பங்கள் அணுகமாட்டா. பாவமும் அகலும். முருகனதுருவமாகிய மருதவரையும் அங்கேயுள்ளது; அங்கே செல்லுங்கள்" என்று விடை கொடுத்தார்.


    அவ்வாறே திருமாலாதி தேவர்கள் திருப்பேரூரைச் சார்ந்து பயம் ஒழியப் பெற்று காஞ்சிமா நதியில் மூழ்கிக் காலைக் கடன்களை முடித்து, ஆதிலிங்கேசரையும் வெள்ளியம்பலத்தையும் பணிந்தனர்.


    சிவமாகிய வெள்ளிமலை, உமாதேவி மலை, பிரமமலை, விட்டுணுமலை, மருதமலை ஆகிய ஐந்து மலைகளிலுமுள்ள தீர்த்தங்களில் மூழ்கி, அக்கிரிகளைத் தரிசித்துச் சிவலிங்க பூசை செய்து, மருதமலையில் முருகக் கடவுளை நோக்கித் தவம் புரிந்துகொண்டிருந்தார்கள்.


    இப்பஞ்ச கிரிகளும் திருப்பேரூரின் மேற்றிசை மலைத் தொடரில் உள்ளன.


    திருச்சிற்றம்பலம்.


    *திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் தொடர்ந்து வ(ள)ரும்.*


    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X