"நாளைக்குப் போ"- பெரியவா.
(பெரியவா ஆக்ஞையை ஏற்காததால் வந்த வினை)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-6
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு பக்தர் ஸ்ரீ மடம் முகாமுக்கு வந்து,
பத்து நாள்களுக்கு மேல் தங்கியிருந்தார்.
தினசரி தரிசனம், அனுஷ்டானம்,பூஜை பார்த்தல்
என்று நாள்கள் சென்றன. லீவு முடிந்து விட்டதால்
அன்றைக்குப் புறப்பட வேண்டும்.
"நாளைக்குப் போ" என்றார் பெரியவாள்.
"லீவு முடிந்து விட்டதே! மறுநாள் ஆபீஸில்
இருக்கணுமே!" என்று சொல்லிவிட்டுப்
புறப்பட்டு விட்டார் பக்தர்.
அவர் புறப்பட்டுச் சென்ற பஸ் நடுவழியில்
நிறுத்தப்பட்டது.ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்,
கல்வீச்சு.பக்தர் தலையில் ஒரு கல் விழுந்தது.
ரத்தகாயம்.ஹர்த்தால் மேலே போக முடியவில்லை.
திரும்பிவந்து பெரியவாளிடம் கண் கலங்கி
விவரம் கூறினார்.
'பெரியவா ஆக்ஞையை ஏற்றிருந்தால் தலையில்
காயம் இல்லாமல் தப்பியிருக்கலாம்" என்று
அன்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார் பக்தர்.