***சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(08)*
*திருப்பேரூர் புராணத் தொடர்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திருப்பேரூர் புராண வரலாற்றிலுள்ள, முப்பத்திரண்டு படலங்களை இன்று முதல் படல வரிசையாக வரும்.
*(1) நாட்டுப் படலம்.*
*(2) நகரப் படலம்.*
கொங்குநாடு வளத்தினாலும் புகழினாலும் உயர்ந்து நிறைந்தனவாம்.
கொடையிலே சிறந்தவனான சேரமரபின் அரச மரபில் கொங்கர் என்ற பேருடன் கோதையரசர்கள் ஆண்ட பெருமையுடையது கொங்குநாடு.
இந்நாட்டிலே கடற்கரை கூடிய நெய்தல் தவிரக் குறிஞ்சி, முல்லை, மருதம் என்ற நிலப் பகுதிகளும் அவற்றின் பெரு வளங்களும் நிரம்ப உள்ளன.
இந்தக் கொங்கு வளநாட்டிலே காவிரி, பவானி, அம்பராவதி போன்ற நதிகளும், கங்கை போலப் புனிதமாய் உபகரிக்கும் காஞ்சிமா நதியும் பரந்து பாய்ந்து வளப்படுத்திக் கொண்டிருந்தன.
இவற்றின் வளப்பத்தால் நெல், கரும்பு, கமுகு, வாழை, தென்னை,மா முதலிய செழும் பலன்களும், உயிர்களுக்கு உயிர் கொடுக்கும் ஊதியமாக எங்கும் மிகுதியாக உள்ளன.
இந்த வளநாட்டிலே சிறந்து விளங்குவது திருப்பேரூர் எனும் திருநகரமாகும்.
உலகநிலை, ஆன்மநிலை என்ற இரு நிலையிலேயும் உயிர்களுக்குச் செய்யும் எல்லா வுபகாரங்களிலும் பெரிதாயிருப்பதால் இது பேரூர் எனப் பேர் பெற்றதென்று புலவர்கள் சொல்வார்கள்.
இது பெரிய நகராகப் புடைநகர், இடைநகர், உண்ணகர் என்ற பகுதிகளோடு மிக அழகாக அமைந்துள்ளது.
அகழி மதில் ஆகிய அங்கங்களோடு சிறந்து விளங்குவதாய் அழகிய கடைவீதி முதலிய எல்லாப் பொலிவும் பெற்றுள்ளது.
பற்பல மரபினரும் குடியிருப்பனவாகிய பற்பல தெருக்களும் வரிசையாக அழகாய் அமைந்துள்ளன.
இவ்வீதிகளின் நடுவிலே ஆதி தேவனாகிய பட்டீசர் எழுந்தருளிய திருக்கோயிலானது கண்டோர் மனம் மகிழ்ந்து உய்யும் வண்ணம் இயல்பாய் வாய்த்திருந்தன.
*(3) நைமிசப் படலம்.*
நைமிசவனத்திலே யாகங்கள் செய்து சித்த சுத்தி பெற்றிருந்த சௌனகர் முதலிய முனிவர்களிடத்தே சூத முனிவர் வர, அவரை அம்முனிவர் குழாங்கள் வணங்கி, "முன்னொரு காலத்திலே பிரமாண்ட புராணத்துள் கெளமார சங்கிதையில், குமாரகண்டத்தில் திருப்பேரூர் மான்மியத்தை அருளிச் செய்தனர். அம்மான்மியத்தை மீண்டுங் கேட்க விரும்புகின்றோம்." என்று விண்ணப்பஞ் செய்யச் சூத முனிவர் சொல்லத் தொடங்கினார்.
திருச்சிற்றம்பலம்.
*திருப்பேரூர் திருக்கோயில் தொடர் படலங்கள் விரிந்து வ(ள)ரும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள்,இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*