ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 4
"ஆச்சார்ய ப்ரஸாதத்ல, அந்த திருவிடைமருதூர் ப்ராஹ்மணருக்கு ரெண்டு பிள்ளேள் இருந்தா. ரெண்டு பேருமே கும்மாணம் மடத்து பாடஶாலைலேயே ரிக்வேத அத்யயனம் பண்ணினா. படிப்பு முடிஞ்சதும், பெரிய பிள்ளை, தகப்பனார் பண்ணிண்டு இருந்த பூஜையையும், முத்ராதிகாரி கார்யத்தையும் கவனிச்சிண்டு ஊரோடேயே இருந்துட்டார்.
எளையவர் வேதாப்யாஸம் முடிஞ்சதும், காவ்யங்கள், ஶாஸ்த்ரங்கள் படிச்சார். நல்ல தேஜஸ்வியா, புத்திமானா, கார்யங்கள் செய்யறதுல கெட்டிக்காரரா இருந்ததால, 64-வது ஆச்சார்யாளோட விஸேஷமான அனுக்ரஹத்தை ஸம்பாதிச்சிண்டார். அதுனால, வித்யாப்யாஸம் முடிஞ்சும், திருவிடைமருதூர் வராம, கும்மாணத்துலேயே, மடத்ல இருந்துண்டு நல்ல training எடுத்துண்டு, முக்யமான பொறுப்பான கார்யங்களை ஏத்துண்டு செய்யற தகுதியை ஸம்பாதிச்சிண்டார். அந்தக் கால வழக்கத்துப்படி, வித்யாப்யாஸம் முடிஞ்சதுமே அண்ணந்தம்பி ரெண்டு பேருக்குமே கல்யாணமும் ஆய்டுத்து.
ஸெரி….இப்போ கிட்டத்தட்ட 19th ஸெஞ்சுரி மிடிலுக்கு வந்துட்டோம். அதாவுது..1843-1844. அப்போ ஜம்புகேஶ்வரத்ல அம்பாள் அகிலாண்டேஶ்வரியோட தாடங்கத்தை மறுபடி புதுப்பிச்சு ஸாத்தும்படியா இருந்துது. ஆதி ஆச்சார்யாளே ஸ்ரீசக்ராகாரமான அந்த தாடங்கங்களை அம்பாளுக்கு ஸாத்தினார். அது ஜீர்ணமாற [repair] ஸமயங்கள்ள, நம்ம மடத்து ஆச்சார்யாளா இருக்கறவா, அதை ஸெரி பண்ணி, புனர் ப்ரதிஷ்டை பண்றது வழக்கம்.
நா… சொல்ற ஸமயத்ல, இப்டி செய்யும்படி ஜம்புகேஶ்வரம் கோவில்காராளும், ஊர் ஜனங்களும் ஸ்வாமிகள்கிட்ட ப்ரார்த்தனை பண்ணிண்டா. அவரும் ஒத்துண்டு ஜம்புகேஶ்வரம் வந்து சேந்தார். தாடங்க ப்ரதிஷ்டா வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்யற பெரிய்..ய்ய பொறுப்பு, அந்த திருவிடைமருதூர் ப்ராஹ்மணரோட ரெண்டாவது பிள்ளைக்கு போச்சு. அவர் அதை ரொம்ப உத்ஸாஹமா செய்யறப்போ, ஸோதனை மாதிரி வேற ஒரு பொறுப்பு வந்துது…!
அது என்னன்னா…….
தாடங்க ப்ரதிஷ்டையை ஆக்ஷேபிச்சு, த்ருஶ்னாப்பள்ளில [த்ரிஶிரஸ் தபஸ் செய்த இடத்துக்குத்தான் த்ரிஶிராப்பள்ளி என்ற திருச்சிராப்பள்ளி] ஒரு வழக்கு கொண்டு வந்தா…! வழக்குன்னு வந்தா, லேஸ்ல முடியுமோ? அத்தன காலமும், நம்ம மடம் அங்கியே இருக்கும்படியா ஆச்சு! வழக்குக்கான வ்யவஹாரங்கள்…னா, மடத்து கௌரவத்தையே குறிச்சுதானே? அத… நிர்வாஹம் பண்றது ரொம்ப ஶ்ரமமாச்சே! அந்த பளுவோட, அத்தன நாள், வேற ஊர்ல முகாம் போடறதுக்கான வரவு-செலவு இத்யாதிகள்-ன்னு ஏகப்பட்ட ப்ரச்சனை, சிக்கல்!
அத்தனை பாரத்தையும் எளையவர் ஏத்துண்டு, ரொம்ப பக்கபலமாத் தாங்கினார். அவர் பரிஶ்ரமபட்டது வீண் போகல! …. அம்பாளோட க்ருபைனாலயும், சந்த்ரமௌலீஶ்வரர் அனுக்ரஹத்தாலயும், இந்தக் கேஸ் எல்லாக் கோர்ட்டுலயும் நம்ம மடத்துக்கு ஸாதகமாவே ஜெயிச்சுது.! ஒரு கோர்ட்டுல தோத்துப் போனா, மேல் கோர்ட்ல அப்பீல்ன்னு போய்ண்டே..தான இருக்கும்? ஆனா, எல்லாமே நம்ம மடத்துக்கு அனுகூலமாவே தீர்ப்பாச்சு.
இந்த கோர்ட்-கேஸ் இழுத்தடிப்பு, தீர்ப்பு…அது-இதுன்னு, எல்லாத்துக்கும் எத்தன வர்ஷமாச்சுங்கறதை, இந்த கதையை சொன்ன பாட்டி, எப்டி சொன்னா தெரியுமோ?
"அந்தக் காலத்து… கெழம் கட்டைகளுக்கு பஞ்சாங்கப்படியோ, காலண்டர்படியோ சொல்லத் தெரியலியாம்! அதுனால என்ன சொன்னான்னா….. ஸ்ரீமடம், திருவானைக்கா போனவொடனேயே, ஸ்வாமிகள் சந்த்ரமௌலீஶ்வரருக்கு அபிஷேகம் பண்றச்சே, அவரோட தலேல எலுமிச்சம்பழம் பிழிஞ்சார்…! அப்போ…அதோட மேல் மூடில, அவர் அப்டி லாவகமா அதுக்கின வெதையெல்லாம், அவர் அந்த மூடியை பக்கத்ல இருந்த தொட்டிமித்தத்துல எறிஞ்சப்போ, அந்த வெதையெல்லாம் அங்க மண்ணுல விழுந்தது. அந்தக் காலத்ல தொட்டிமித்தத்ல கருங்கல் தளம் கெடையாது! மண்ணுதான் இருக்கும்….
அப்டி ஸ்வாமிகள் போட்ட வெதைகள், மொளச்சு, செடியாகி, மரமாகி, காய்ச்சு, பழுத்து, "நம்ம சந்த்ரமௌலீஶ்வரருக்கே திரும்பவும் வந்திருக்கோம்"ன்னு, ஸ்வாமிகள் கைக்கு வந்து, அந்த சாறால பழேபடி அவர் அபிஷேகம் பண்ணினாவிட்டுதான்….. அங்கேர்ந்து மடம் கெளம்பித்தாம்!
ஸாதாரணமா, ஒரு எலுமிச்சை, காய்ச்சு பழுக்கறதுக்கு…. ஸுமார் நாலஞ்சு வர்ஷம் ஆகுங்கறதால, கேஸ்களும் அத்தன வர்ஷம் நடந்திருக்கணும்"ம்பாளாம்!
( பெரியவா சொல்ற அழகே அழகு!!)
கேஸ் முடிஞ்சதும்… அந்த ஸந்தோஷம்…. அதோட.. இத்தன நாளா… நின்னு போயிருந்த தாடங்க ப்ரதிஷ்டயை இப்போ பண்ணக் கெடச்சிருக்கேங்கற ஆர்வம்..! .ஒரு பெரிய ஸோதனையை குடுத்து, நம்மளோட பலத்தையும், அவளோட அருளையும் அம்பாள் இன்னும் பலப்படுத்தி குடுத்திருக்காங்கற நன்னி[நன்றி]…..எல்லாமா சேந்து, தாடங்க ப்ரதிஷ்டயை ரொம்ப விமர்ஸையா, அமோஹமான வைபவமாக்கிடுத்து! இந்த அத்தன பெருமைலயும், எளையவருக்கு ஒரு பெரிய்…ய share போச்சு!
ஆனா, கேஸ் எல்லாம் நடந்துண்டிருக்கச்சயே, அவருக்கு ஒரு பெரிய்ய குடும்ப கஷ்டம் உண்டாச்சு! அவரோட எளவயஸ் பத்னி, திடீர்னு கண்ணை மூடிட்டா! மடத்துக்குன்னே தன்னை முழூஸ்…ஸா அர்ப்பணம் பண்ணிண்ட எளையவர் கூட, அதைப் பெரிய கஷ்டமா நெனச்சாரோ இல்லியோ? ஆனா, கேஸ் போட்டவாள்ளாம்... "இவர் பண்ற தகிடுதத்தத்துக்காகத்தான் அம்பாள் மண்டைல போட்டுட்டா"ன்னு பொரளி பண்ணினா…! அவர் அதையும் சட்டையே பண்ணல! ஆனா, இப்டி அவர் பொண்டாட்டியையும் பறிகுடுத்துட்டு, இந்த மாதிரி பொரட்டு பேசறவாளோட பேச்சுக்கும் ஆளானது, ஸ்வாமிகளோட கருணையான மனஸை தொட்டுடுத்து!
அதுனால அவர் என்ன பண்ணினார் தெரியுமோ?….. தாடங்க ப்ரதிஷ்டை பண்ணின கையோட, அகிலாண்டேஶ்வரி ஸன்னதிலேயே, எளையவருக்கு ரெண்டாங்கல்யாணமும் பண்ணி வெச்சுட்டார்!
எட்டு வயஸ் கொழந்தையொண்ணு எளையவரோட, எளைய ஸம்ஸாரமாச்சு! இப்டியொரு உத்தமமான புருஷனைக் குடுத்த அம்பாளை, அந்தக் கொழந்தை…. தான், பாட்டியாகி கண்ணை மூடற வரைக்கும், நித்ய பூஜை பண்ணிண்டு வந்துது. நல்ல வ்ருத்தாப்யத்லேயும் கூட, பாட்டி கும்மோணத்ல இருக்கற நாகேஶ்வர ஸ்வாமி கோவிலுக்கு நாள் தவறாம போவா!
இந்தக் கதையெல்லாம் சொன்னது அந்தப் பாட்டிதான்!……… இரு..! இன்னும் கதை இருக்கு!
compiled & penned by gowri sukumar