Announcement

Collapse
No announcement yet.

Perur temple part5

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Perur temple part5

    *சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    *(05)*
    ☘ *திருப்போரூர் திருக்கோயில் தொடர்.* ☘
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    அழகிய கலை நுட்பங்கள் கொண்ட அற்புத சிற்பங்கள் கொண்ட காலத்தால் அழியாத கனக சபையில் ஆனந்த தாண்டவ நடராசர் சிவகாமியம்மையுடன் தாண்டவம் முடியும் கோலத்தில் அருள் பாலிக்கும் மேலைச் சிதம்பரத் தலம்.
    காஞ்சி மா நதி என்னும் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தேவார வைப்புத்தலம்.
    சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர் பாடிய தலம். கச்சியப்ப சிவாச்சாரியார் தலபுராணம் பாடிய தலம்.
    பிறவாப்புளி, இறவாப்பனை, எலும்பை கல்லாக்கும் ஆறு முதலியன விளங்கும் முக்தி தலம்.
    வாகனமான நாய் இல்லாமல் பைரவர் ஞான பைரவராக அருள் பாலிக்கும் தலம். காமதேனு வழிபட்ட தலம், அதன் கன்று பட்டியின் குழம்புத் தழும்புடன் தேவ தேவன் மஹா தேவன் இன்றும் திருக்காட்சி தரும் தலம்.
    விஷ்ணுவாகிய பட்டிமுனியும், பிரம்மாவாகிய கோமுனியும் வழிபட்ட தலம். நாற்று நடவு விழா நடக்கும் தலம். இவ்வளவு பெருமைகளும் கொண்ட நடராஜ தலத்தை இந்த ஆருத்ரா தரிசன காலத்தில் வலம் வருவது சொல்லொண்ணா பேராணந்தம்.
    பாலக்காட்டு கணவாய் வழியாக மலய மாருதம் தவழ்ந்து குளிர்வித்துக் கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்தின் தலை நகரான கோவை மாநகரின் அருகில் அமைந்த தலம். கோவை மாநகரிலிருந்து சுமார் பத்து கி,மீ தொலைவில் சிறுவாணி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலம்.
    வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஐந்து மலைகள் அரணாக சூழ இயற்கை சூழலில் எழிலால அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.
    ஆதி காலத்தில் நாரதர் தக்ஷிண கைலாயமான இத்தலத்தில் உமா மஹேஸ்வரரை வெள்ளியங்கிரியில் வழிபட்டு இங்கு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார்.
    ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத்தொழில் செய்யும் போது சோர்வுற்று கண்ணயர்ந்து விட்டார். இதை அறிந்த விஷ்ணு காமதேனுவை அழைத்து "நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக" என்று கட்டளையிட்டார். காமதேனுவும் இமயமலையில் அருந்தவம் இருந்தும் சிவனருள் சித்திக்காததால் நாரதர் ஆலோசனைப்படி தக்ஷிண கைலாயமான பேரூரில் வந்து தவம் செய்து வரும் போது ஒரு நாள் அதன் கன்றான பட்டியின் கால் குளம்பு பெருமானின் மேனியில் சிக்கிக் கொள்ள அதை தன் கொம்பினால் கிளர்த்து விடுவித்தது. இறைவன் தோன்றி இருவருக்கும் அருளினான். பட்டி வழிபட்டதால் தான் பட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுவேன் என்று வரம் அருளினார். மேலும் முக்தி தலம் என்பதால் இங்கு உனக்கு சிருஷ்டி இரகசியத்தை அருள முடியாது நீ திருக்கருகாவூர் சென்று தவம் செய் என்று அருளினார். காமதேனு மட்டும் அல்ல, வியாசர், விஸ்வாமித்திரர், யமன் ஆகியோர்கள் இப்பெருமானை வழிபட்டுள்ளார்கள்.
    இன்றும் ஐயனின் திருமேனியில் பட்டியின் குளம்பையும், காய தழும்பையும், காமதேனுவின் கொம்பின் நுனித்தழும்பையும் தரிசிக்கலாம். பெருமான் பட்டீசர், பட்டி நாதர், கோட்டீசர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.
    இன்றும் கருவறையில் லிங்கமூர்த்திக்கு பின்புறம் காமதேனுவை தரிசிக்கலாம். எனவே இத்தலம் காமதேனுபுரம் என்றும் பட்டீஸ்வரம் என்றும் தேனுபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது. *"தழும்புடைய நம்பனை நாத்தழும்பேற ஓம்பினால் ஓடுமே நம் வினை."* என்று இத்தலத்தின் ஐயனை தரிசிக்க இனி பிறவி என்பது கிடையாது.
    தமிழ்நாட்டு மேற்கு தொடர்ச்சி மலையோரமாகக் காவேரியின் மேல்பாகத்தில் அதன் இருபுறமும் இருப்பது கொங்குநாடு. இந்நாடு சங்கத்தார் காலமுதலே தனி நாடாக இருந்ததற்கு புறநானூறே சான்றாகும்.
    பிற்காலத்தில் இக் கொங்கு நாடானது, வடகொங்கு, தென் கொங்கு என்ற பெயரால் இரு பெரும் பிரிவாய் இருந்ததென சோழர் ஆதிக்கத்துக் கல்வெட்டில் அறிய முடியும்.
    சுந்தரமூர்த்தி சுவாமிகள் பேரூர்க்கு விசயம் செய்த காலத்தில் அப்பாகத்தை, *"மீகொங்கு"* (மேல் கொங்கு)
    என கூறியிருக்கிறார்.
    இதனால் மேல் கொங்கு ஒன்று இருந்ததென அறியப்படும் போது, கீழ் கொங்கு என்று ஒன்று இருந்திருக்க வேண்டுமலல்லவா? ஆனால் அதற்கான ஆதாரமொன்றையும் காணோம்.
    கர்ணபரம்பரையினாலும், கொங்கு மண்டல சதகத்தினாலும், கொங்குநாடு இருபத்து நான்கு நாடுகளைக் கொண்டிருந்தன. இந்நாட்டுப் பெயர்களில் குறும்புநாடு என்பதை *" கொங்கிற் குறும்பிற்குரக்குத்தளியாய்"*
    என்று சுந்தரமூர்த்தி தேவாரத்திலும், வட பாரிச நாடு முதலான ஏனைய பேர்களைக் கல்வெட்டுக்களிலும் காணும் போது இப்பிரிவுகளானது பழமையானவை எனலாம்.
    கொங்கு நாட்டில் உட் பிரிவுகளில் ஒன்று ஆறைநாடு ஆகும். இது வெள்ளிமலை முதல் அவினாசி மட்டும் எட்டினதாம்.
    தற்போதைய கோவையும் அவிநாசியும் இந்த இரண்டு தாலுகாக்களும் சேர்ந்ததாகும். இதில் கிழக்குப் பாகத்தை வட பாரிச நாடு என தனி. இந்த ஆறை நாட்டில் மேல் பாகத்தை பேரூர் நாடு என்ற தனிப் பெயராலே கல்வெட்டில் உள்ளன.
    பஞ்சகிரிகளாகிய வில்லுக்கு ஓர் அம்பு தொடுத்டாற்போலக் காஞ்சிமா நதி எனும் நொய்யலாறு ஓடியது. இதன் கரைகளில் திவ்வியமான பண்டைய மேன்மைகளுடன் விளங்கி வந்தன இப்பேரூர்.
    இப் பேரூரின் சரிதத்தைப் புலவர் பெருமானார் கச்சியப்ப முனிவர் 172 ஆண்டுகளுக்கு முன், சகம் 1712--ஆம் ஆண்டில் அக்காலத்தில் வழங்கி வந்த சரிதங்களைத் திரட்டி ஓர் அழகிய இலக்கியமாகப் *பேரூர் புராணம்* இயற்றியுள்ளார். இதனைக் கூர்ந்து நோக்கும்போது, இப்பேரூர் தலமானது அரசமரங்களடர்ந்த ஒரு காடாகவே இருந்ததாம். அதனாலேயே இவ்வூரை பிப்பிலாரணியம் என்று பெயர் இருந்ததெனவும் தெரிய வரும்.
    அந்த ஆரணியத்தில் ஆதிகாலத்தில் ஓரிடையான் தான் ஓட்டும் பசு தானாகவே ஒரு இடம் சென்று பால் சுரக்கும் அதிசயத்தைக் கண்டு அடித்த காலத்தில் அதன் குளம்பு பட்டு வடு ஏற்பட ஓர் இலிங்கத்தைக் காணப் பெற்று, அதனை ஊரார்கள் தெரிந்து அதன் மூலமாக ஒரு கோயிலும் பிரபலமாக உண்டானதென்று ஒரு வரலாறைச் சொல்லுவர்.
    திருச்சிற்றம்பலம்.
    *திருப்பேரூர் திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
    ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X