Announcement

Collapse
No announcement yet.

Maharajapuram Santhanam & Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Maharajapuram Santhanam & Periyavaa

    Maharajapuram Santhanam & Periyavaa
    பெரியவா சரணம் !!
    ""எந்த பக்தனையும் குறையோடு அனுப்பியதில்லையே இந்த உள்ளம் கவர் கள்வனாகிய உத்தமபிரன்""
    1953 ஆம் வருடம் நுங்கம்பாக்கம் ஜம்புலிங்க நாயகன் தெருவில் மகாபெரியவர் தங்கியிருந்தபோது அடுத்த வீட்டில் பழம் பெரும் கர்நாடக சங்கீத பாடகர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் குடியிருந்தார்.
    ஒரு நாள் மகாபெரியவர் பூஜை செய்துகொண்டிருந்த போது பக்கத்துக்கு வீட்டில் பாட்டு சத்தம் கேட்டது. சுருதி சுத்தமாக சுநாதமாக "விநாயகுனி...." என்ற மத்தியமாவதி ராகத்தில் அமைந்த தியாகராஜ கீர்த்தனையை தான் விஸ்வநாத ஐயர் பாடிக்கொண்டிருந்தார். அந்த பாடலில் "அனாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி ...." என்ற நெகிழ்வான வரிகளில் தீர்க்கமாக நிரவல் செய்து அவர் பாடிய தெய்வீக கானம் காந்தம் போல் அனைவரையும் ஈர்க்க , பூஜை செய்து கொண்டிருந்த மகாபெரியவர் திடீரென்று கிளம்பி வித்துவான் வீட்டிற்குள் நுழைந்தார். பரமேஸ்வரனே நேராக வந்ததை பார்த்து விஸ்வநாத ஐயர் தம்பதி சந்தோஷ அதிர்ச்சியில் உறைந்தனர்.
    உடனே கோலம் போட்டு , மாவிலை கட்டி, பூர்ணகும்பம் என்று எத்தனித்த அவர்களிடம் பெரியவர் "அதெல்லாம் இருக்கட்டும்.......விஸ்வநாதா என்னை பூஜையில் உட்காரவிடாமல் உன் இனிய பாட்டினால் இங்கே ஈர்த்து விட்டாய். நீ க்ஷேமமாக இருப்பாய்" என்று ஆசிர்வதித்தார்.
    அப்போது "நாத தனுமனிசம்" என்ற தியாகராஜ கீர்த்தனையை பற்றி விரிவாக உரைத்த பெரியவர் எவ்வாறு பரமேஸ்வரனின் ஐந்து முகங்களிலிருந்து சப்தஸ்வரங்கள் பிறந்தன என்பதை நயம்பட எடுத்து உரைத்தார்.
    அப்போது வித்துவான் சொன்னார் "எனக்கு பூஜை ஆச்சாரம் எதுவும் தெரியாது பெரியவாள். எனக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கோ" என்றார்,
    அதற்கு பெரியவாள் "உன் உடம்பில் காமாக்ஷி ரேகை ஓடறது. நன்னா சங்கீதம் பாடியே ஸ்வாமிக்கு நீ பாமாலை சாத்து" என்று ஆசிர்வதித்து விட்டு கிளம்பி சென்று விட்டார். பெரியவர் சென்ற பின்னும் அந்த திருவுருவமும் அவரது கழுத்தில் அணிந்திருந்த ருத்திராக்ஷ மாலையும் வித்துவான் கண்ணிலேயே இருந்தது. மனதில் அந்த ருத்திராக்ஷ மாலை தனக்கு கிடைக்காதா என்று ஒரு ஏக்கமும் இருந்தது. அந்த ஏக்கத்தினை தன மனைவி மற்றும் குடும்பத்தினரிடமும் பகிர்ந்து கொண்டார்.
    பின்னர் 1970 மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் மறைந்து விட்டார்.
    இது நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு 1983 இல் சதாராவில் பெரியவர் முகாமிட்டுருந்தார் பாடகர் விஸ்வநாத ஐயரின் மகனும் மிகச்சிறந்த பாடகருமான மகாராஜபுரம் சந்தானம் ஒரு மாலை பொழுதில் அப்போது தரிசனம் செய்ய வந்திருந்தார். வா சந்தானம் .....பாடு பாடு. மோஹன ராகம் பாடு . அது உங்க குடும்ப சொத்தாச்சே என்று பெரியவர் சொல்ல எல்லோர்க்கும் பரவசம் ஏற்படுத்தும் வகையில் சந்தானம் அவர்கள் பாட பெரியவர் உட்பட அங்கிருந்தோர் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர். அதன்பின் பெரியவர் நீ இங்கே தங்கிவிட்டு காலையில் செல் என்று அன்பு கட்டளை இட்டார்.
    பெரியவரின் அறைக்கு பக்கத்துக்கு அறையில் சந்தானம் குடும்பத்தினர் தங்கியிருக்க அன்றிரவு பாடகர் உறக்கமின்றி புரண்டு படுத்தார். அவர் மனதில் தனது தந்தை ஆசைப்பட்ட அந்த ருத்திராக்ஷ மாலை தனக்காவது கிடைக்குமா என்ற ஏக்கம். விடியற் காலை 3 மணி இருக்கும் உறக்கமின்றி பாடகர் ஏதோ அரவம் கேட்டு எழுந்தார். ஜன்னல் வழியே பார்த்த போது பெரியவர் தானே தன் அறையை சுத்தம் செய்வதை கண்டார்.
    இதை பார்த்தவுடன் பெரியவர் வா சந்தானம் மோஹனம் பாடி எவருரா கீர்த்தனை பாடு என்று சொல்ல மீண்டும் வித்துவான் தனது மோகனாஸ்திரத்தினால் பெரியவரை கட்டிப்போட அப்போது நிகழ்ந்தது அற்புதம். தன் கழுத்தில் போட்டிருந்த ருத்திராக்ஷ மாலையை கழட்டி சந்தானத்திடம் கொடுக்க ஆனந்த கண்ணீருடன் அதனை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினார். அந்த மாலை இன்றும் சந்தானம் அவர்களை மருமகன் தியாகராஜனால் பூஜிக்கப்பட்டு வருகிறது. எந்த பக்தனையும் குறையோடு அனுப்பியதில்லையே இந்த உள்ளம் கவர் கள்வனாகிய உத்தமபிரன்.


    Article by Dr.R.DrGanesh Vocalist
    -----------------------------------------------------
    பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
    அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?.
    காமகோடி தரிசனம்
    காணக்காணப் புண்ணியம்
Working...
X