Announcement

Collapse
No announcement yet.

Purattasi month - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Purattasi month - Periyavaa

    Purattasi month - Periyavaa
    ப்ரதீபப் பேழை--"ஒரு பழைய காமகோடி இதழ்"
    _____________________________________________
    கன்யையில் கன்யாபூஜையும் பித்ருபூஜையும்
    பரிவர்த்தன ஏகாதசி, சிரவணத்வாதசி, விஸ்வரூப யாத்திரை, மஹாளயபக்ஷம், நவராத்திரி ஆரம்பம் முதலிய புண்ணிய நாட்கள் நிறைந்தது. கன்யா ராசியில் சூரியன் வரும் மாதம்.
    अस्मै वै पितरौ पुत्रान् बिभृतः (யஜுர்வேதம் 6.1.6.) இதற்காகத்தான் பெற்றோர் புத்திரர்களைப் பரிக்கிறார்கள்.
    ஸுபர்ணா என்னும் தாய் தன் புத்திரர்களை நோக்கிக் கூறும் சொல் இது. கத்ரூ என்பாள் ஸுபர்ணையை அடிமை கொண்டாள். அதிலிருந்து தன்னை விடுவிப்பது புத்திரர் கடமை என்று அவள் சொன்னாள். தன்னைத்தான் காத்துக்கொள்ள முடியாத சைசவத்தில் பல கஷ்டங்களை அநுபவித்துப் பெற்றோர் சிசுக்களைக் காப்பது எதற்காக? பெற்றோர் தம்மைக் காத்துக்கொள்ள முடியாதபோது புத்திரர்கள் பித்ருக்களைக் காப்பதற்காக அல்லவா?
    ஸுபர்ணை கூறிய வண்ணம் ஸ்வர்க்கத்திலுள்ள ஸோமத்தைக் கொண்டு வர முயன்ற ஜகதீ, திருஷ்டுப் என்ற புத்திரர்கள் தம் பலத்தை இழந்து வெற்றி பெறாமல் திரும்பினர். காயத்திரி என்னும் புதல்வன் கிளம்பி, தேவலோகம் சென்றான்; சகோதரர் இழந்த பொருள்களையும் மீட்டு வந்தான்; ஸோமத்தையும் கொண்டுவந்து தாயை விடுவித்தான்.
    இதையே பதினெண் புராணகர்த்தாவான வியாசர், "பாம்புகளின் தாயான கத்ரூ, கருடன் மாதாவான ஸுபர்ணையை அடிமையாக்கினாள். ஸ்வர்க்கத்திலுள்ள அமிருதத்தைக் கொண்டுவந்தால் அடிமை அகலுமென்று கத்ரூ கூறக் கேட்டார் கருடன். பெற்றோர் பெரியோர் ஆசியைப் பெற்று விண்ணுலகம் சென்றார்; வீரர்களுடன் போர் புரிந்தார்; வெற்றி கொண்டார்; தாயைக் காத்தார்" என்று சுவை நிறைந்த கதையால் வேதக் கருத்தைச் சித்திரித்துப் போஷித்தார்.
    நம்மைப் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர் ஐம்பூத உடலையும் மண்ணுலகையும் விட்டனர். விண்ணுலகில் ஜலமயமான உடல் பெற்றுப் பித்ருக்களாகி வைவஸ்வதன் ஆதியின் கீழ் ப்ரஜைகளாக வாழ்கின்றனர். அது போக பூமி. அங்கே அவர்கள் தம் உடலுக்கு வேண்டியதைத் தேட முடியாது. இந்தச் சமயத்தில்தான், தாம் செய்த உதவிக்குக் கைம்மாறு வேண்டுகின்றனர். யமதர்மராஜன் கருணைகொண்டு பித்ருக்களை அவ்வுலகிலிருந்து மண்ணுலகுக்கு அனுப்புகிறார். 'புத்திரரிடம் சென்று உண்டு வாருங்கள்' என்று. அந்தக் காலமே மஹாளய பக்ஷம் எனப்படும். பித்ருக்கள் வசித்த இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவோ அல்லது புத்திராதிகள் அளிக்கும் அன்னபானங்களை அருந்தி அவர்களை ஆசீர்வதிக்கட்டும் என்ற எண்ணங்கொண்டோ பித்ருக்களை அனுப்புகிறார். அவர்களும் 'அறுசுவை அன்னம் அகப்படும். பதினாறு நாட்களும் மஹாளய சிராத்தம் செய்வர்.
    பெரும் உத்சவ காலம் அது' என்று சுருதிப் புத்திரரை அநுக்கிரகிக்கின்றனர். அதனால்தான் மஹா ஆலயம் உத்சவ ஆனந்தத்துக்கு இருப்பிடம் என்ற பெயர் தோன்றிற்றோ? அந்தத் தினங்களில் ஒரு நாளாவது மஹாளய சிராத்தம் செய்யாவிடில் ஏமாற்றமடைந்து துக்கத்துடன், "உனக்குச் சிராத்தம் செய்யப் புத்திரனில்லாமல் போகட்டும். மண்ணுலகிலும் உள்ள உணவு கிடைக்காது" என்று சபித்துச் செல்வார்கள். பித்ரு சாபத்துக்கு ஆளாகாமலிருப்போம்.
    प्रेतपक्षं प्रतीक्षन्ते गुरुवाञ्छासमन्विताः।
    कन्यागते सवितरि पितरो यान्ति वै सुतान्॥
    ततो वृश्चिकसम्प्राप्तौ निराशाः पितरो गताः।
    पुनः स्वभवनं यान्ति शापं दत्वा सुदारुणम्॥ ------माधवीये।
    பிச்சை எடுத்து வாழ்பவர்கூட ஒரு பிடி அன்னமாவது பித்ருக்களை நாடி அளிக்க வேண்டும் என்கின்றனர் மஹரிஷிகள். மஹாபரணி வ்யதீபாதம், மத்யமாஷ்டமி, த்ரயோதசி இந்த நாட்களிலாவது சிராத்தம் செய்தால் கயா சிராத்த பலன் உண்டாகும்.
    லௌகிக முறையில் சிறிது வாசா உபகாரம் செய்தவருக்குக்கூட வந்தனச் சொல் வழங்குவது நாகரிகமென்று கருதுகிறோம். பெற்றெடுத்து வளர்த்து நம்மை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் உணவுக்கு நம்மை நாடி வரும்பொழுது பதினாறு நாட்களிலும் எள்ளும் நீருமேனும் தராவிடில் அது த்ரோஹமல்லவா? பெற்றோர் திதியிலேனும் மஹாளயம் செய்வது அவர் பொருளுக்கு உரிமை பாராட்டுவோர் கடமையாகும்.
    "பக்ஷ மஹாளயம் செய். சக்தி இல்லாவிடில் பஞ்சமியிலிருந்து தர்சம் வரையில், அல்லது அஷ்டமியிலிருந்து தர்சம் வரையில் அல்லது தசமி முதல் தர்சம் வரையிலாவது மஹாளயம் செய்" என்று தர்ம நூல் சக்தியில்லாதவருக்குச் சலுகை காட்டுகிறது. விதிப்படி அன்ன சிராத்தம் செய்க. அதற்குச் சக்தியில்லாதவர் ஹிரண்ய சிராத்தமேனும் செய்யட்டும். அதற்கும் பொருளில்லாதவர், ஸர்வஸுலபமான திலஜலமளித்துப் பித்ருக்கள் அருளால் ஸம்பத்தைப் பெறலாம்.
    16 நாள் ஆண்டுக்கு ஒரு முறை பித்ருபூஜை நடத்தினர் முன்னோர். மஹாளயம் செய்யாவிடில் பிரத்யவாயம்; செய்தால் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு வகையான பலன் உண்டு என்கிறார் ஆபஸ்தம்பர். முக்கியமாக பித்ருசாபத்தால்தான் புத்திரபாக்கியம் இல்லாமற் போகிறது.
    पुत्रानयुस्तथारोग्यं ऐश्वर्यमतुलं तथा।
    प्राप्नोति पञ्चमे दत्तश्राद्धं कामांस्तथापरान्॥
    பஞ்சமே என்பது ஆஷாட்யாதி பஞ்சமாபரபக்ஷம் என்பதாம். இது ஜாபாலியின் உபதேசம்.
    துரீயாச்ரமிகளுக்குத் துவாதசியிலும், அஸ்த்ர சஸ்திரங்களால் இறந்தோருக்குச் சதுர்த்தசியிலும் செய்ய வேண்டும். பக்ஷ மஹாளயம் செய்வோர் அமாவாஸ்யையில் இரண்டு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும். பித்ருக்களை நாடி ஒரே நாளில் இரண்டு சிராத்தம் செய்யக்கூடாது. ஆயினும் தர்சத்தில் பித்ரு மாதாமஹ வர்க்கம் இரண்டுக்கே தர்ப்பணம். மஹாளலயத்திலோ காருண்ய பித்ருக்களுக்கும் தர்ப்பணாதிகள் உண்டு.
    காருண்ய பித்ருக்கள் யார்?
    சிறிய தந்தை, பெரிய தந்தை, தமையன், தம்பி, தன் புத்திரர்கள், அத்தை, அம்மான், பெரிய தாயார், சிறிய தாயார், சகோதரிகள் அவர்களது புத்திரர்கள், மனைவி, மாமனார், மாமியார், நாட்டுப்பெண், மைத்துனன், குரு, யஜமானன், நண்பர்கள் ஆகியவர்களுக்கு மஹாளயத்தில் தர்ப்பணாதிகள் செய்ய வேண்டும்.
    நமது ஆயுளில் ஒரு முறையாவது மஹாளய அன்னச்ராத்தம் செய்ய வேண்டாமா?
Working...
X