Swami chidbavananda of Sri ramakrishna tapovanam
Courtesy: http://rkthapovanam.blogspot.in/2012/07/blog-post.html
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் ஸ்தாபக சுவாமிஜியின் அன்பைப் பெற்ற மாணவர்கள், அவரிடம் பிரம்பு அடி வாங்கும் புண்ணியம் பெற்ற மாணவர்கள், பிற்காலத்தில் அவரை ஒரு தாயாகவும், ஒரு கண்டிப்பான தந்தையாகவும் நினைத்து பெருமைபடுகிறவர்கள் அவரை "பெரியசாமி" என்று உரிமையோடு அழைக்கிறார்கள். அவரிடம் இருந்த பிரம்மச்சாரிகளும் அவ்வாறே அழைத்தார்கள். அந்த பெயருக்கு பொருத்தமானவர் அவரே.
அவர் வாழ்ந்தபோது இருந்த சமகால குரு சகோதர சந்நியாசிகள் அவரை சின்னு மகராஜ் என்று அழைப்பார்கள். உதாரணமாக யாழ்பாணம் விபுலானந்த சுவாமிகளைக் கூறலாம். ஏனென்றால் அவர் பூர்வாஸ்ரமப் பெயர் சின்னு என்பது.
அந்தர்யோகத்தில் கலந்துக்கொண்டவர்கள், அவரது சொற்பொழிவைக் கேட்டவர்கள், அவரது எழுத்தை வாசித்தவர்கள் சுவாமி சித்பவானந்தர் என்று கூறுவார்கள்.
அரசியல் வட்டாரத்தில் திரு சி. எஸ். அவர்களின் சித்தப்பா என்று அடையாளம் சொல்வார்கள்.
அவருடைய குருநாதர் மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் இரண்டு பொருத்தமான பெயர்களை வைத்துள்ளார்கள்.
புவனேஷ்வரத்தில் மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தரை சந்தித்து துறவியாக வேண்டுமென்ற தமது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். இளைஞனாக இருந்த சின்னு துறவு மார்க்கத்தில் நாட்டம் கொண்டிருப்பதைப் பார்த்து மகாபுருஷ் மகராஜ் பெருமகிழ்வு அடைந்தார். அப்பொழுது மகாபுருஷ் மகராஜ் பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். சின்னுவைத் தமது சிஷ்யராக ஏற்றுக்கொண்டு பேலூர் மடத்திற்கு அழைத்துச் சென்றார். சின்னுவுக்கு பிரம்மச்சரிய தீக்ஷை செய்து திரையம்பக சைதன்யர் என்ற நாமத்தைச் சூட்டினார். இது முதல் பெயர்.
இரண்டாவது பெயர் சந்நியாச ஆசிரமம் ஏற்கும்போது கொடுக்கப்பட்ட சுவாமி சித்பவானந்தர் என்னும் பெயர்.
சுவாமி சித்பவானந்தர் ஒரு சிறு நிகழ்ச்சியைக் கூறினார்கள்:
மகாபுருஷ் மகராஜ் ஒரு முறை ஸந்நியாசம் வழங்குவதற்கு இருக்கின்றார். ஸந்யாசம் பெறப் போகிற பிரம்மச்சாரிகளோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது பிரம்மச்சாரியின் விருப்பத்தை அறிந்துகொள்ளும்பொருட்டு, "உனக்கு என்ன பெயர் வைக்கலாம்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த பிரம்மச்சாரி தமாஷாக சொன்னார்களாம், "மண்ணாங்கட்டியானந்தா என்று வைத்தாலும் சரிதான்" என்று. அவருக்கு அவினாசானந்தர் என்று பெயர் வைத்தார் மகாபுருஷ் மகராஜ். நமது சுவாமிஜி தங்கள் குருநாதர் பெயரைச் சொல்லமாட்டார்கள். மகாபுருஷ்ஜி என்றுதான் சொல்வார்கள். என்னிடம் சொன்னார் "உனக்கு சித் என்று வைக்கப்போகிறேன்" என்று.
மகாபுருஷ் மகராஜ் தீர்க்க தரிசியல்லவா? சுவாமிகள் சித்சொரூபத்தின் அம்சமாக விளங்குவார்கள், இறைவனுடைய மகத்தான கிருத்தியங்கள் சுவாமிஜியின் வாயிலாக நிகழவிருக்கிறது என்பதை அறிந்து கொண்டார். சுவாமிஜிக்கு அத்தகைய நாமத்தை வழங்கியதன் வாயிலாக சுவாமிஜியினுடைய மகிமையை மகாபுருஷ் மகராஜ் நமக்கு உணர்த்துகிறார். சுவாமிகளின் சொல் செயல் அனைத்திலும் சித் பிரகாசம் பிரகாசிப்பதை நாம் இன்றும் காண்கிறோம்.
ஊட்டி ராமகிருஷ்ண மடம்
1926ஆம் ஆண்டு ஆடி மாத பௌர்ணமி நன்னாளில் ஊட்டி ராமகிருஷ்ண மடத்தில் 'மகாபுருஷ் மகராஜ்' சுவாமி சிவானந்தர் திரையம்பக சைதன்யருக்கு "சித்பவானந்த" என்ற நாமத்தைச் சூட்டினார்கள். அந்த பௌர்ணமி நன்னாள் இன்று வருவதாயிற்று. அதை நினைவுகூறவே இந்த கட்டுரை எழுதப்பட்டது.
ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं
द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् ।
एकं नित्यं विमलमचलं सर्वधीसाक्षिभूतं
भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि ॥
ப்ரஹ்மானந்தம் பரமஸுகதம் கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககனஸத்ருசம் தத்வமஸ்யாதிலக்ஷ்யம் |
ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீஸாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுணரஹிதம் ஸத்குரும் தம் நமாமி ||
பிரம்மானந்த ரூபியும் பரமசுகத்தையளிப்பவரும், ஞானமே வடிவாகியவரும், இரட்டைகளுக்கு அப்பாற்பட்டவரும், ஆகாயம் போன்றவரும், 'தத்-த்வ-மஸி' முதலிய மகா வாக்கியங்களின் லக்ஷ்யமாகியவரும், ஒப்பற்றவரும், சாசுவதமானவரும், பரிசுத்தரும், அசையாதவரும், எல்லோருடைய புத்திக்கும் ஸாக்ஷியாய் விளங்குபவரும், மனதிற்கெட்டாதவரும் முக்குணங்களைக் கடந்தவருமாகிய ஸத்குருவை நமஸ்கரிக்கிறேன்.
-குருகீதை
(2வது அத்தியாயம், 3வது சுலோகம்