எட்டு இடங்களில் ஜீவசமாதி கொண்ட கோரக்கர் !!!
ஒரு கிராமத்தில் ஆலமரத்தடியில் தனிமையில் நின்று அழுதுகொண்டிருந்தாள் இளம்பெண்ணொருத்தி. அந்த வழியே வந்த சித்தர் மச்சேந்திரர் தனியே நின்றழும் பெண்ணைக் கண்டதும், ""ஏனம்மா அழுகிறாய்?'' என்று பரிவுடன் வினவினார். அதற்கு அவள், ""அய்யா, எனக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன. குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. ஊரில் உள்ளவர்கள் என்னை மலடி என்று கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். என்னால் அதைத் தாளமுடியவில்லை. அதனால்தான் இப்படி தனியாக அழுதுகொண்டிருக்கிறேன்'' என்றாள்.
""அம்மா, அழாதே. இதோ, நான் தரும் திருநீறைச் சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய். மலடி எனும் அவச் சொல் உன்னைவிட்டு நீங்கும்'' என்று சொல்லி திருநீறைக் கொடுத்துவிட்டு தன் வழி போனார் மச்சேந்திரர்.
திருநீறைப் பெற்றுக்கொண்ட பெண், தன் தோழியொருத்தியிடம் அதைக் காட்டி, சித்தர் சொன்னதையும் கூறினாள். அதற்கு அந்தத் தோழி, ""அடி பைத்தியமே, யார் எது சொன்னாலும் நம்பிவிடுவதா? யாரிடம் வேண்டுமானாலும் திருநீறு வாங்கிச் சாப்பிட்டுவிடுவாயா? அந்தப் பெரியவர் சக்தியுடைய வரா, வேஷதாரியா என்று யாருக்குத் தெரியும். இந்தத் திருநீறை எங்காவது வீசியெறி'' எனச் சொல்லிச் சென்றாள். தன் தோழி கூறியதை நம்பி அவள் திருநீறை யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டுவிட்டாள்.
ஆண்டுகள் சில கடந்தன. மச்சேந்திரர் அந்த வழியே திரும்பி வந்தார். அப்பொழு தும் அந்தப் பெண், குழந்தை பாக்கியம் இல்லாமல் அழுது புலம்பிக் கொண்டி ருந்தாள். இதைக் கண்ட மச்சேந்திரர் அவளிடம், ""ஏனம்மா இன்னும் அழுகிறாய்? குழந்தை என்னஆயிற்று?'' என்று கேட்டார். தன் தோழியின் பேச்சைக் கேட்டு திருநீறை அடுப்பில் போட்டுவிட்டதாகவும்; இதுவரை தனக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்றும் கூறி கண்ணீர் சிந்தினாள்.
சித்தர் அவளிடம் கோபம் கொள்ளவில்லை.
மாறாக, ""உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டினாய்?'' என்று கேட்டார். அந்தப் பெண்மணி சாம்பலைக் கொட்டிய எருக்குழியைக் காட்டினாள். அந்த எருக்குழி அருகே சென்ற மச்சேந்திரர், ""கோரக்கா'' என்று குரல் கொடுத்தார். எருக்குழிக்குள் இருந்து ""என்ன சித்தரே'' என்ற பதில் குரல் கேட்டது. ""எழுந்து வா வெளியே'' என்றார் மச்சேந்திரர்.
அந்த எருக் குழிக்குள்ளிருந்து தெய்வ அம்சம் பொருந் திய முகத்துடன் பத்து வயது பாலகன் எழுந்து வந்தான். மச்சேந்திரர் திருநீறு கொடுத்து பத்தாண்டுகள் ஆகியிருந்ததால் அவன் பத்து வயது பாலகனாக ஆகி யிருந்தான். இதையெல்லாம் பார்த்த அந்தப் பெண்மணி அதிசயித்துப் போனாள்.
""தங்கள் மகிமையை அறியாமல், நீங்கள் தந்த திருநீறை வீசியெறிந்த தால் இந்தக் குழந்தையை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன்'' என்று அழுதபடி அந்தச் சிறுவனைக் கட்டி
அணைத்துக்கொண் டாள். ஆனால் அந்தச் சிறுவனோ, ""என்னைத் தூக்கியெறிந்த உங்க ளுடன் இருப்பதைவிட இந்த சித்தருடன் சென்று தவ வாழ்வில் ஈடுபடப் போகிறேன். ஆனாலும் நான் பூமிக்கு வரக் காரணமாயிருந்த அன் னையே, உங்களை நான் வணங்குகிறேன். என்னை வழியனுப்பி வையுங்கள்'' என்று வேண்டினான்.
அந்தச் சிறுவனின் உறுதியான பேச்சால் மகிழ்ந்த தாய், கோரக்கருக்கு விடை கொடுத்து அனுப்பினாள்.
கானகத்தில் தவ வாழ்வு மேற் கொண்ட கோரக்கர் பல சித்திகளைப் பெற்றார். ஒரு சமயம் அவருக்கு பிரம்ம னின் படைப்புத் தொழிலை தானும் செய்ய வேண்டு மென்ற ஆவல் உண்டானது. தனது நண்பர் பிரம்மமுனியுடன் இணைந்து மிகப் பெரிய யாகத்தை மேற் கொள்ளத் தொடங்கினார். படைக்கும் தொழிலில் தனக்குப் போட்டியாக சித்தர்கள் முயற்சிப்பதைக் கண்டு, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பிரம்மன் அஞ் சினான். உடனே வருணனையும் அக்னியையும் அனுப்பி யாகத்தை அழிக்கச் சொன்னான்.
அவர்கள் பலவிதமாக தொல்லை தந்தும் பலனில்லாமல் போனது.
அடுத்ததாக யாக குண்டத்தில் சித்தர்கள் போட்ட பொருட்கள் இரண்டு பெண்களாக உருவெடுத்தனர். அவர்கள் சித்தர்களின் மனதைக் கலைக்க முயற்சிக்க, ஆத்திரமுற்ற சித்தர்கள் அவர்களை இரு செடிகளாக மாற்றிவிட்டனர். அப்போது சிவன்
அவர்கள்முன் தோன்றி, ""சித்தர்களே, நீங்கள் தவ வலிமை மிக்கவர்களாக இருந்தாலும் யாகத்திற்கு இடையூறு ஏற்பட்டால் அதனை என்னிடம்தான் முறையிட வேண்டும். நீங்களே சாபம் கொடுத்தது தவறு. சித்தர்கள் கோபம் கொள்ளக்கூடாது. நீங்கள் கோபம் கொண்டதால் உங்கள் தவ வலிமையை இழந்துவிட்டீர்கள்'' என்று கூறினார். எனினும் அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து, காயகல்பத்தை அவர்களுக்கு அருளி, அதனைக் கொண்டு உலக உயிர்கள் நலமுடன் வாழ அரிய மருந்துகளை உருவாக்கும்படி அருளினார்.
சித்தர்கள் இருவரும் இறைவன் சொன்னபடியே மகத்தான பல மருந்து களை உருவாக்கி மக்களின் பிணி போக்கினர்.
சித்தன் என்பதன் பொருள் சிந்தை தெளிந்தவர் என்பதாகும். சித் என்றால் பேரொளி, ஞான ஒளி, பர ஒளி, சிவ ஒளி என்பதாகும். இத்தகைய ஒளியைப் பெற்றவர்களுக்கு சித்தர்கள் என்று பெயர்.
அப்படிப்பட்ட சித்தர்கள் ஆயிரக்கணக்கில் தோன்றியிருக்கின்றனர். அவர்களில் மக்களின் நடுவே நன்கு அறியப்பட்டவர்கள் பதினெட்டு சித்தர்கள். இப்பதினெட்டு சித்தர்களுள் கோரக்கருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் இறவா வரம் பெற்றவர். காயகல்பம் செய்வதில் வல்லவர். செம்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தை அறிந்தவர்.
சித்தர் கோரக்கர் தனித்துவம் மிக்கவர், பணிவுமிக்கவர், அச்சமற்ற தன்மையுடை யவர், வெளிப்படையானவர், மக்களின் உயிர்காக்க வேண்டுமென்ற உயரிய நோக்குடன் செயல்பட்டவர்.
கோரக்கரைப் பற்றி பல்வேறு கதைகள் நிலவுகின்றன. கோரக்கரும் போகரும் உயிர்த் தோழர்கள். போகரைப்போலவே கோரக்கரும் சீனம் சென்று அங்கு 500 ஆண்டுகள் செலவிட்டதாக செவிவழிச் செய்திகள் உண்டு. கொல்லிமலையில் 200 ஆண்டுகள் கோரக்கர் தவத்தில் மூழ்கியிருந் தார் என்று சொல்வோரும் உண்டு. பழனி மலைக் கோவிலிலுள்ள நவபாஷாணத் தாலான முருகன் சிலையை போகருடன் இணைந்து கோரக்கர் வடிவமைத்தார்.
அதை நிறுவிவிட்டு வட பொய்கைநல்லூர் வந்து,
அங்கே நந்தாதேஸ்வர், சௌந்தர நாயகி ஆகியோ ருக்கு ஆலயம் எழுப்பி வழி பாடு செய்தார். அங்கே ஆகாயப் பிரவேசம் தந்த போகர், கோரக்கரை ஜீவசமாதியில் அடக்கம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
""சித்தர்களின் ஜீவசமாதி என்பது மனிதன் இறந்ததும்
அடக்கம் செய்வது போன்ற தில்லை. ஜீவசமாதியாகிய சித்தர்கள் என்றும் அழியாமல் இருந்து பிற தேசத்துக்கோ, ஊர்களுக்கோ சென்று தம் பணியைத் தொடர்வர். இப்படியாக கோரக்கர் பொதிகைமலை, ஆனைமலை, கோரக்கநாத் திடல், வடக்குப் பொய்கைநல்லூர், பத்மாசுரன் மலை, கொல்லிமலை, கோரக்பூர், பரூர்பட்டி என்ற எட்டு இடங்களில் ஜீவசமாதி அடைந்தார்'' என்கிறார் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜோதிடர் இராமமூர்த்தி.
பல்வேறு யோக முறைகளையும் ஞான முறைகளையும் வருங்காலத்திற்கு விட்டுச் சென்ற கோரக்கர், சித்தர் பிரம்ம கர்ப்பம் மற்றும் 8,450 பாடல் கள் அடங்கிய நூல்களை இயற்றியுள்ளதாகக் கூறுவர்.
""சதுரகிரி மலைக்குச் சென்று கோரக்கரின் சீடர்களும் அவரது உண்மையான பக்தர்களும் கோரக்கரின் மந்திரமொன்றைக் கூறினால் கற்பாறை நகர்ந்து வழிவிடும். அங்கே காவல் காத்துக்கொண்டிருக்கும் சித்தர் தோன்று வார். அவரிடம் ஒரு முகூர்த்தம் அதாவது ஒன்றரை மணி நேரம் பூரண பொக்கி ஷத்தைப் பார்த்து விட்டுத் தருவதாக விண்ணப்பம் செய்தால் காணக் கிடைக்கும். நாம் அதனைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது பிளந்த பாறை மூடிக் கொள்ளும்'' என்று கூறுகின்றனர் செல்வராசு, பொன் பாலதண்டாயுதம் உள்ளிட்ட பக்தர்கள்.
கோரக்கர் ஜீவசமாதி அடைந்த இடங்களில் எம். பரூரும் ஒன்று. இங்கு கோரக்க சித்தர் தோன்றி பல காலம் வாழ்ந்துள்ளார். அவர் உருவாக்கியதுதான் அவ்வூரில் உள்ள அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் ஆலயம். இவ்வாலயத்தையும் கோரக்க சித்தரின் ஜீவசமாதி யையும் புதுப்பித்து 8-2-2012-ல் ஊர் மக்கள் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.
விருத்தாசலத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் எம். பரூர் அமைந்துள்ளது. விருத்தாசலத்திலிருந்து எம். பரூர் செல்ல பஸ், கார் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன.
அங்கு வருபவர்களுக்கு அருள்புரிய கோரக்க சித்தரும், அவர் எழுப்பிய கோவிலில் அருள்மிகு அன்னபூரணியும், அவருடன் உடனுறைந்த விஸ்வநாதரும் காத்திருக்கின்றனர். ஒருமுறை தரிசிக்கலாமே!
http://nakkheeran.in/Users/frmArticles.aspx?A=13069