திருக்கொடுங்குன்றம் ( பிரான்மலை )
மூலவர் – கொடுங்குன்றநாதர் ( சுடோரகிரீஸ்வரர் , உமா மகேஸ்வரர் ) , காசி விஸ்வநாதர் , மங்கைபாகர்
அம்பாள் – தேனாம்பிகை ( அமிர்தேஸ்வரி , குயிலமுத நாயகி , தேனாம்பாள் ) , காசி விசாலாட்சி
தலமரம் – பலாமரம் , உறங்காப்புளி
தீர்த்தம் – மதுபுஷ்கரணி , தேனாடி , குமார , பைரவ , சித்த , குரு , சோம , குஷ்ட நிவாரண முதலான தீர்த்தங்கள். ( தல புராணத்தின் படி 1௦8 தீர்த்தங்கள் சொல்லப்படுகின்றன )
புராண பெயர் – எம்பிரான்மலை , திருக்கொடுங்குன்றம்
ஊர் – பிரான்மலை
மாவட்டம் – சிவகங்கை
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் – சம்பந்தர்
• தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 5வது தலம்
• மலையின் சரிவில் கோயில் அமைந்துள்ளது
• கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பெரிய குளம் அடையாளஞ்சான் குளம் எனப்படுகிறது
• தெற்கு நோக்கிய நுழைவுவாயில் உள்சென்று , படிகளேறி சென்று கோயிலை தரிசிக்கவேண்டும்.
• வலம்புரி விநாயகர் மற்றும் ஏகாந்த விநாயகர் சந்நிதிகள்
• கோயில் பூமி , அந்தரம் , கயிலாயம் ( சொர்க்கம் ) என்றவாறு அமைக்கப்பட்டுள்ளது
o பூமி என்று சொல்லப்படும் கீழ்ப்பகுதியில் தேவாரப்பாடல் பெற்ற கோயிலான கொடுங்குன்றநாதர் கோயில் அமைந்துள்ளது.
o அந்தரம் என்று சொல்லப்படும் நடுப்பகுதியில் பைரவர் தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரே இங்கு மிக விசேஷமானவர். இவரது சந்நிதி அருகே காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன.
o கயிலாயம் என்று சொல்லப்படும் மேற்பகுதியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குடவரைக்கோயிலில் மங்கைபாகர் கல்யாணக்கோலத்தில் அம்மையுடன் அமர்ந்த கோலத்தில் திருக்காட்சி தருகிறார். இம்மங்கைபாகர் வடிவம் நவமூலிகைகளால் ஆனது. பௌர்ணமியன்று காலியில் மங்கைபாக சிவனாருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சார்த்தப்படுகிறது. இவர்களின் முன்பு உள்ள சிறிய சிவலிங்கத் திருமேனி உடையவர் என்றழைக்கப்படுகிறார். அபிஷேகங்கள் அனைத்தும் உடையவர் லிங்கத்திற்கே செய்யப்படுகிறது. இவரது சந்நிதி இடப்புறம் சிறிய மங்கைபாகர் வடிவம் புடைப்புச்சிற்பமாக உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்புற சுவரில் முப்பத்துமுக்கோடி தேவர்களின் சிற்பங்கள் உள்ளன. இவரின் சந்நிதி எதிரில் நந்தி இல்லை. கும்பாபிஷேகத்தின் போது இவருக்கு அஷ்டபந்தனம் சார்த்தப்படுவதில்லை. இவருக்கு தினமும் புத்தாடைகள் மட்டுமே அணிவிக்கப்படுகின்றன.
• மூலவர் கொடுங்குன்றநாதர் சிறிய லிங்கத்திருமேனியராக அடிவாரத்தில்கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்.
• பிரகாரத்தில் 63வர் மூல மூர்த்தங்களும் , விநாயகர் , அம்மையப்பர் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன.
• அம்பாள் சிவனாரின் இடப்புறம் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தனிச்சன்னதி கொண்டு திகழ்கிறார்.
• நவக்கிரகங்கள் அனைத்தும் அமர்ந்த நிலையில் உள்ளன
• மேற்க்கோயிலில் காரணாகம முறையிலும் , கீழ்க்கோயிலில் காமிகாம முறையிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன
• தேனாழி தீர்த்தம் கோயிலின் உள்ளேயே உள்ளது
• தலமரமான உறங்காப்புளி தேனாழி தீர்த்தக்கரையில் உள்ளது.
• மங்கைபாகர் சந்நிதிக்குப் பக்கத்தில் மலைக்கற்களின் இடுக்கில் உள்ள மற்றொரு மரமும் தலமரமாக சொல்லப்படுகிறது. ஆனால் இம்மரத்தின் பெயர் என்ன என்று இதுவரை அறியப்படாததால் இம்மரம் பெயரில்லா மரம் என்றே அழைக்கப்படுகிறது
• பாரிவள்ளல் வாழ்ந்து அரசாண்ட பறம்புமலையே இப்பகுதி
• குன்றக்குடி ( திருவண்ணாமலை ) ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் உள்ளது
• சித்திரை திங்களில் நடைபெறும் பெருவிழாவில் ஏழாம் நாள் பாரிவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது
• உமாதேவி , நந்தி , உபமன்யு , சப்தமாதர் , வியாக்ரபாதர் , புண்டரீகாக்ஷர் , லட்சுமி , சந்திரன் , சரஸ்வதி , பிரம்மன் , திருமால் , நரசிம்மமன்னன் , நாகராஜன் , மகோதரமுனிவர் , உக்கிரபாண்டியன் முதலானோர் சிவனாரை வழிபட்டு அருள்பெற்ற தலம்
• மேருமலையின் ஒரு பகுதியே இம்மலை என்ற வரலாறு சொல்லப்படுகிறது
• ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை ( தட்சிணாயன புண்ணிய கால கடைசி மூன்று மாதங்கள் மற்றும் உத்தராயண புண்ணிய கால முதல் மூன்று மாதங்கள் ) தொடர்ச்சியாக சூரிய வழிபாடு நடைபெறும் தலம்
• சித்திரையில் நடைபெறும் பிரம்மோற்சவம் , வைகாசியில் நடைபெறும் விசாகம் , திருக்கார்த்திகை மற்றும் மகா சிவராத்திரி முதலான உற்சவங்கள் மிக சிறப்புடன் நடைபெறுகின்றன
• தம்பதியர் ஒற்றுமைக்காகவும் , சுக்கிர தோஷ நிவர்த்திக்காவும் வழிபடவேண்டிய தலம்
• அருணகிரிநாதருக்கு முருகர் நடனக்காட்சி காட்டியருளிய தலம்
• முருகர் சந்நிதி எதிரில் யானை வாகனமாக உள்ளது
• தைப்பூசத்தன்று முருகர் அருகிலுள்ள பாலாற்றில் தீர்த்தவாரி தருவது சிறப்பான ஒன்று.
• முருகர் சூரபத்மாசூரனைக் கொன்ற பாவம் தீர சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம். முருகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரு சிவலிங்கங்கள் கொடுங்குன்றநாதர் சந்நிதி பிரகாரத்தில் சொக்கலிங்கம் , ராமலிங்கம் என்ற பெயர்களில் உள்ளன. இவ்விரு சிவலிங்கங்களுக்கிடையில் பாலமுருகர் அருள்பாலிப்பது வித்தியாசமானது
• சித்திரை திருவிழாவின் போது பைரவருக்கு பால்குடம் எடுப்பது இங்கு வழக்கமாக உள்ளது
• பைரவருக்கென கோயில் வளாகத்தில் தனி தீர்த்தம் உள்ளது. குஷ்ட விளக்கி சுனை என போற்றப்படும் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனாரை வழிபட்டால் நாள்பட்ட நோய்கள் மற்றும் தோல் நோய்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது
தரிசன நேரம்
காலை ௦6:௦௦ am – 12:௦௦ pm &
மாலை ௦4:௦௦ pm - ௦8:௦௦ pm
மலைமீதுள்ள மங்கைபாகர் சந்நிதி மாலை ௦6:3௦ வரை மட்டுமே திறந்திருக்கும்
தொடர்புக்கு
04577-246170 ,
94431-91300
மதுரையில் இருந்து சுமார் 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். மதுரை – பொன்னமராவதி செல்லும் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. இப்பாதை சுற்றுப்பாதை. சாலைகள் சற்று சுமாராக உள்ளன
மதுரையில் இருந்து சிங்கம்புணரி , மேலூர் ஆகிய ஊர்களுக்கு சென்று அங்கிருந்தும் இத்தலத்தை அடையலாம். இந்த சாலைகள் நன்கு உள்ளன.
சிங்கம்புணரியில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்.
திருப்புத்தூரில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்